விஜய் - அஜித்

விஜய் - அஜித்

அஜீத்தின் மகள் அனோஷ்காவுக்கு விஜய் என்றால் உயிர். ‘தல’யும், ‘தளபதி’ யும் தோஸ்த்தான பிறகு அவ்வப்போது அஜீத் வீட்டுக்குப் போய் அனோஷ்காவைக் கொஞ்சிவிட்டு வருகிறார்,விஜய்.”உனக்கு தாய் மாமா நானா; இல்லை விஜய் சாரா?” என்று அனோஷ்காவிடம் செல்லமாய் கோபிப்பாரம், ஷாலினியின் தம்பி ரிச்சர்ட்.

 

 

rathee + solla marantha kathai

பல் மருத்துவப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு சினிமாவுக்கு வந்த ரதி, ‘கும்மாளம்’, ‘சொல்ல மறந்த கதை’ முதலிய படங்களில் நடித்த பின்பு, திரும்பவும் படிப்பைத் தொடரப் போய் விட்டாராம். இப்போது கன்னடத்தில் இயக்கும் சின்னத் திரையின் ‘தங்கம்’ தொடரில் நடித்துக்கொண்டே படிக்கிறாராம்.

asmitha + karungali + kalanjiyam

‘கருங்காலி’ படத்தில் நடிக்கும் அஸ்மிதா, கலப்படம் இல்லாத தமிழ் பேசுகிறார். அக்கா,தங்கை இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று குறி சொல்லும் வேடமாம். அப்பதான் நடிப்புத் திறமையைக் காட்ட முடியும்.

reshmi menon + theneer viduthi

தேனீர் விடுதி ‘ யில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ரேஷ்மி. மற்ற நடிகைகள் மாதிரி வித்தியாசமாக உடை அணியாமல் , அழகான தமிழ்ப் பெண் மாதிரி உடை அணிந்து வந்திருந்தார். அதிலுள்ள அழகுக்கு முன்னால், எந்த கவர்ச்சியும் எடுபடாது.
பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இப்போதும் தன் மகன் பூபதிக்கு சாப்பாடு ஊட்டி விடுவாராம், மனோரமா.’பாட்டி, அப்பாவை இப்படி கொஞ்சுறியே’ என்று கலாய்ப்பார், பூபதியின் மகனும் டாக்டருமான ராஜராஜன். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே!.

Advertisements