ராமதாஸ்

ராமதாஸ்

 

1. ஈரோடு(மேற்கு):-
காங்கிரஸும் அ.தி.மு.க.வும் களத்தில் இருக்கின்றன. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் நிற்கிறார். யுவராஜால் அவமானப்படுத்தப்பட்ட தி.மு.க.வினர் இன்னும் களப் பணிகளில் இறங்கவில்லை. ஆக அதிமுகவே முனனிலை இப்போ…
2. செய்யூர்:-
அ.தி.மு.க.வின் வி.எஸ். ராஜுவை, விடுதலைச் சிறுத்தைகளின் பார்வேந்தன் எதிர்கொள்கிறார். பா.ம.க. வின் ஒத்துழைப்போடு சிரமமின்றி , கரை சேரலாம்.
3. விளாத்திக்குளம்:-
ரெட்டியார்களும் நாயுடுகளும் நிறைந்த பகுதி. ரெட்டியார் இனத்தவரான,அ.தி.மு.க. வேட்பாளரும், நாயுடு இனத்தவரான காங்கிரஸ் வேட்பாளரும் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள்.
4. மன்னார்குடி:-
தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜாவும், அ.தி.மு.க.வின் ராஜமாணிக்கமும் களமிறங்குகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், வென்ற தொகுதி இது. தீவிரமான களப்பணியினால் , தி.மு.க. வெல்லக்கூடிய தொகுதிதான்.
5. போளூர்:-
பா.ம.க.வும், அ.தி.மு.க.வும் களமிறங்குகின்றன. அ.தி.மு.க.வே வெல்லக்கூடும்.
6. குன்னூர்:-
முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான ஆர். ராஜாவின் தொகுதி இது. பாரம்பரியமாய் தி.மு.க. ஆதரவு தொகுதி இது. இப்போதும், இங்கு தி.மு.க. முன்னிலை .
7. ஏற்காடு:-
சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க.வின் தமிழ் செல்வனும், அ.தி.மு.க.வின் பெருமாளும் வேட்பாளர்கள். இருவருக்கும் தொகுதியில் நல்ல பெயர்தான். கூட்டணிக் கட்சிகள் ,இரண்டு பக்கமும் இருப்பதால் இரு கட்சிகளும் பலம் பெற்று விளங்குகின்றன. போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்..
8. மேட்டுர்:-
பா.ம.க.வும், தே.மு.தி.க. வும் மல்லுகட்டுகின்றன. பா.ம.க. முன்னிலை.
9. பவானி சாகர்:-
தி.மு.க. முன்னிலை.
10:-வில்லிவாக்கம்:-மிகப் பெரும் தொகுதியாக இருந்த இத் தொகுதி இப்போது, ஒரு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறிய தொகுதி . தி.மு.க. இடதுசாரிகள் கட்சிகளுக்கு இங்கு எப்போதும் வலுவான செல்வாக்கு உண்டு. , தி.மு.க.வின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதி இது. தி.மு.க.வின் வி.ஐ.பி., அ.தி.மு.க.வின் ஜே.சி.டி. பிரபாகரனை முந்துகிறார்.

Advertisements