அன்னா ஹசாரே

அன்னா ஹசாரே

 

முதியவர் அன்னா ஹசாரே ஊழலை எதிர்த்து டெல்லியில் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறார். காந்தீய வழியில் ஊழலை எதிர்க்க கூடிய  ஜன் லோக்பால் சட்டத்தை உருவாக்கக் கூறி ஜன் லோக்பாதல் பில்லை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே இந்த உண்ணா விரததை தொடங்கியிருக்கிறார். அவருடன் ஆயிரமாயிரம் ஊழல் எதிர்ப்பு போராளிகளும் சராசரி மக்களும்  இணைந்திருக்கிறார்கள். மன்மோகன் சிங் அன்னா ஹசாரே அவர்களை முதுமை  கருதி உண்ணா விரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அன்னா ஹசாரே அதை பொருட்படுத்தாது இந்த உண்ணா விரதத்தை தொடங்கியிருக்கிறார். ஊழலை எதிர்த்து  இந்த 72 வயது முதியவர் இருக்கும் இந்த உண்ணா விரதத்தின் முக்கிய கோரிக்கைகள் :

ஊழலை எதிர்க்க கூடிய பலமான ஜன் லோக்பால் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் !

ஊழலை வழக்குகளை உடனடியாக விசாரித்து தண்டனை கொடுக்க ஜன் கோக் ஆயுக்தா ( நீதிமன்றங்கள் ) ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப் பட வேண்டும் !

இந்தமமுதியவர் ஊழலை எதிர்த்து எடுத்திருக்கும் இந்த படி முக்கியமான படி!

 

ஊழல்கள் மலிந்துள்ள இந்த காலத்தில்… புதிய ஊழல் செய்தவர்களுக்கு பதிலாக பழைய ஊழல் செய்பவர்கள் ஆட்சி செய்ய வரலாம் என்று மக்களே முடிவெடுக்கும் இந்த வேளையில், எவ்வளவு கோடிகள் சுருட்டினாலும் சில நூறுகளை அள்ளி வீசினால் வாக்காளன் ஓட்டு போடுவான் என்று ஊழல் வாதிகள் காலரை உயர்த்தும் இந்தக் காலத்தில்… இப்படி ஒரு ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை மூன்றாம் கோணம் முழு மனதுடன் ஆதரிக்கிறது! இந்தப் பெரியவர் எடுத்திருக்கும் இந்த நல்ல ஆரம்பத்திற்கு அனைவரையும் தங்கள் ஆதரவை நல்கும்படி கேட்டுக் கொள்கிறது.

 

Advertisements