வாஸ்து - வீடு டிசைன்

வாஸ்து - வீடு டிசைன்

 

 

வீட்டின் எந்தெந்த அறைகள் எங்கு இருக்கவேண்டும் ? வாஸ்து குறிப்புகள்

 

கிழக்கு .. குடிநீர் ஆதாரம்.

தென் கிழக்கு .. சமையலறை

தெற்கு … இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை

மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை

வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை

வடக்கு … குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.

வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. அதாவது

அடி பலன்.. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்

8 அடி பலன்

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.

10 அடி. பலன் பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.

11 அடி பலன்எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.

16 அடி பலன்

சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

17 அடி பலன்

தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.

20 அடி பலன்

பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

21 அடி பலன்

வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.

22 அடி பலன்

மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.

26 அடி பலன்

உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.

27 அடி பலன்

பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து
, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.

8 அடி பலன்

கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.

29 அடி பலன்

பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

30 அடி பலன்

புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.

31 அடி பலன்

நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை வடமேற்கு திசை

புத்தக அறை தென்மேற்குத் திசை

சமையல் அறை தென் கிழக்குத் திசை

உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை

படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்

பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்

குளியல் அறை கிழக்கு திசை

சேமிப்பு அறை வடக்கு திசை.

கழிவறை வட மேற்கு திசை.

குறிப்பு அன்புடையீர், இது சாதாரண குறிப்புகள். தத்தம் ராசி மறறும் பிறந்த நேர நட்சத்திரம் மற்றும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் வருங்காலம் வளம் பெறத் தகுந்த வாஸ்து அமைப்புடன் நாம் வாழந்து வருகிறோமா.. சிறு சிறு குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்து கொண்டு, குறிப்பாக, வீட்டில் உள்ள அனைவரின், ஆரோக்கியம், கல்வி, வேலை, பணி, திருமணம் மற்றும சிறப்பான முன்னேற்றங்கள் காண தயவு செய்து அணுகுக. நன்றி.

 


Advertisements