ராசி பலன்

ராசி பலன்

 

மேஷம்:-

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் . ஆயினும் ,விரயச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிரிகளால், தொல்லைகளும் அவமானமும் வரும். வீண் அலைச்சலும், மனமும் உடலும் பாதிக்கவும் வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் தடங்கல்கள் உண்டாகும். சனி பகவான் வக்ர கதியில் காணப்படுவதால், உத்தியோகத்தில் உற்சாகம் குறையும். உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பு குறையும் . கூலி வேலை புரிவோர் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குரு ,விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் ஒரு தடை ஏற்படும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். துர்க்கை வழிபாடு சிறப்பைக் கொடுக்கும்.
பரிகாரம்:-அரச மரத்தின் கீழ் இருக்கும் நாகருக்கு, மஞ்சள் பொடி, வாழைப் பழ்ம், சர்க்கரை வைத்து, வழிபடவும். சுப காரியத் தடை நீங்கும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப் பொருள் கிட்டும்.

 

ரிஷபம்:-

தொழில் வகையில் கொஞ்சம் அலைச்சல்கள் அதிகமாகும். உடலில் அசதி தோன்றும். இருப்பினும் வாழ்க்கைத் தேவைக்கான வருமானம் கிடைக்கவே கிடைக்கும். சிலருக்கு கௌரவப் பதவி, பட்டங்கள் கிடைக்கும். சிலருக்குப் புதிய நண்பர்கள் வந்து சேருவார்கள்.அவர்களால் சில நன்மைகள் வந்து சேரும். சிலருக்கு வாகன வசதி ஏற்படும். பொருள் விருத்தி ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வாழ்க்கைத் துணையால் உயர்வு ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். சிலர் தங்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். 2 ல் அமைந்துள்ள கேது ,தேவையற்ற பேச்சைக் கொடுக்கும். 8 ல் உள்ள ராகு , தந்தையின் உடல் நலத்தைக் கெடுக்கும்.வியாபாரம் சிறக்கும். உங்களின் வியாபார யுக்திகள் பலருக்கும் ஆச்சரியம் தரும் வண்ணம் அமையும். மருந்து வியாபாரம் செய்வோர் பலன் காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடிவரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடக்கும். மனதில் மகிழ்ச்சி வரும்.

பரிகாரம்:-வயதான ஏழைப் பெண்களுக்கு அன்ன தானம் செய்யவும். சிவனாலயம் சென்று, பிரதோஷத்தன்று பச்சரிசி தானம் செய்ய சிறப்பான யோகம் உண்டு.

மிதுனம்:-

மனதில் மகிழ்ச்சி கூடும். இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். இளைய சகோதரர்களால், உதவி கிடைக்கும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் மூலம் நற்பலன்கள் வந்து சேரும்.புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களால் உதவி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4ல் அமர்ந்துள்ள சனி ப்கவான் உங்கள் ராசியைப் பார்ப்பது உங்கள் மனபலத்தையும் உடல் நலத்தையும் கெடுக்கும். சனிக்கிழமை தோறும், சனி பகவானை வில்வ இலையால் அர்ச்சிக்க கெடுபலன் குறையும். ராசியில் அமர்ந்துள்ள கேது தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பைக் கொடுக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கும் கூலி வேலை செய்பவர்களுக்கும், இது சற்று கடினமான மாதமாகும். புதிய கடனைத் தவிர்ப்பது நலம். வியாபாரிகள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படகூடாது. வேலை செய்பவர்கள் உணர்வுகளை மதிப்பதன் மூலம் சரியான நேரத்தில் அவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செயல்களில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இட மாற்றம் ஏற்பட்டு ம்னக் கஷ்டம் ஏற்படும். வெளி நாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு கவனமும் பொறுமையும் தேவை. காரியங்கள் தடையின்றி நடக்க நந்தீஸ்வரர் வழிபாடு நன்மை பயக்கும்.

பரிகாரம்:-அம்மன் கோவில் சென்று வழிபாடு செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேத்தியம் செய்து வழங்கவும்.வயதான நலிந்த பெண்களுக்கு உதவி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்:-

உங்கள் ராசிக்கு 3 ல் சனி பகவானும், 9 ல் குரு பகவானும் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்ப்பது உங்களுக்கு பலத்தைக் கொடுக்கிறது.மேலும் உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதும் மேலும் ஒரு சிறப்பு. தீராத பிரச்சினைகள் தீரும். கடன் அடைபட வழி கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் கிடைக்கும். உங்கள் இடத்திற்கு மதிப்பு கூடும். உறவினர் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த துணை அமையும். கணவன் மனைவி அன்பு கூடும். மற்றவர்களை வார்த்தைகளால் வயப்படுத்தும் திறன் கூடும். உத்தியோகத்தில் உள்ளவகள் உயர் அதிகாரிகளால் பாரட்டப்படுவீர்கள். உடன் பணி புரிவோர் ஒத்துழைப்பு சிறப்பு தரும். பெண்கள் மூலம் சில உதவிகள் கிட்டும். வேலை செய்யும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம், புத்திர பாக்கியம், இவை தடங்களின்றி நடைபெறும். கேளிக்கை, விருந்து இவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தாயார், மற்றும் தாயார் வழி உறவினர்கள், சகோதரர்கள், இவர்களால் உதவி கிட்டும். சகோதரர்கள் மேன்மை அடைவார்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும். சிலருக்குப் பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் உண்டாகும்.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமை தோறும் வாழை இலையில் சாப்பிட ,சுப பலன் கை கூடும். பத்ரகாளி வழிபாடு சிறப்பு தரும்.

சிம்மம்:-

இந்த மாதம் கொஞ்சம் கவனத்துடன் செயல்படவேண்டயது அவசியம். தேவையற்ற பிரச்சினைகளும், வம்பு வழக்குகளும் தேடிவரும். வாழ்க்கைத் துணை நலத்தின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் இனம் புரியாத பயமும் கவலையும் இருக்கும். விரயச் செலவுகள் அதிகமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். பணம் புரட்டுவதற்கு கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் தேவைக்கேற்ற வருமானம், கடுமையான உழைப்பின் பேரிலும் அலைச்சலின் பேரிலும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2 ம் இடத்தில் வக்ர சனி இருப்பதால் வாக்கில் எச்சரிக்கை மிக அவசியம். குருவின் பார்வை நல்லது செய்யும் வாய்ப்புள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று இருக்கும் நீங்கள் , வேறு தொழில் மீதும் பார்வையைச் செலுத்தலாம். புதிய தொழில் ஏற்றம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மொத்த வியாபாரம் செய்பவர்கள் புதிய வியாபார உத்திகளைக் கையாள்வர். மருந்து வியாபரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு புத்திரப் பேறு கிட்டும். கணவன் மனைவி அன்பு சிறக்கும். வேலையாட்களிடம் மனம்விட்டுப் பேசினால், தொழில், உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.

பரிகாரம்:-
தட்சிணாமூர்த்தி வழிபாடும் பசுமாட்டிற்கு உளுந்து தானம் செய்வதும் மிகுதியான பலனைத் தரும்.

கன்னி:-

ஜன்ம சனி நடந்துகொண்டிருந்தாலும், 7 ல் அமர்ந்திருக்கும் குரு, நல்ல பலன்களை வழங்கி வருகிறது. இருப்பினும் தொழில் ,வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலையே காணப்படுகிறது. பயணங்களின்போது எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிரிகளால், கௌரவக்குறைவுகள், அவமானங்கள் ஏற்படும்.பணத்தின் தேவை அதிகமாகும் .ஆனால், தேவைக்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும். நாணயம் தவறும். பெரியோர்கள், முதலாளிகளிடம், அவப்பெயர் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வயற்றுவலி, கண்நோய் வரலாம். வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் தேடிவரும். குடும்பத்தாருடன் மோதல் உருவாகும். பெண்களால் தொல்லைகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். வெளீநாட்டுப் பயணம் தடைப்படும். ஊடக வணிகம் மூலம் லாபம் அடையலாம். கலைத் துறையில் ஈடுப்டுவோருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.புதிய வாகனம் வாங்குவதை ஒத்திப் போடவும். சிலர் இடம் விற்பதன் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. பெரிய மனிதரின் உதவி கிட்டும்.

பரிகாரம்;-
ஸ்ரீலட்சுமி வழிபாடும், அம்மன் வழிபாடும் ந்ல்லது. குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றினால், மனதில் பயம் நீங்கும்.

துலாம்:-

இதுவரை இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். பழைய கடன்கள் அடைபடும். தொழில், வியாபாரம் சிறக்கும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் நலக் குறைவுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த துக்கம் நீங்கும். உங்களை வாட்டி வந்த எதிரிகள், தொல்லை கொடுத்து வந்த போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். சிலருக்கு நிலம், வீடு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ,மகிழ்ச்சி நிலவும். அடிமைத் தொழில் பார்த்து வந்த சிலர், அதைவிட்டு, சுய தொழில் தொடங்குவர். சிலருக்கு கௌரவப் பட்டங்களும் ,பதவிகளும் கிடைக்கும். விரயச் செலவுகள் குறையும். சொல்வாக்கு, செல்வாக்கு பெருகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகள் ஒத்துழைப்பு தருவார்கள்.
பரிகாரம்:-மஞ்சள் கலந்த பால் அபிஷேகம் சனி பகவானுக்கு செய்ய, சங்கடங்கள் தீரும். நடக்க முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.

விருச்சிகம்:-

கொஞ்சம் சோதனையான மாதம். வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். அதில் பிரச்சினைகள் ஏற்பட்டு, முன்னேற்றம் பாதிக்கப்படக்கூடும். தேவைக்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். விரயச் செலவுகளும், மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். தங்களுடைய நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போகும். சொல்வாக்கு, செல்வாக்கு , அந்தஸ்து, கௌரவம் பாதிக்கப்படக்கூடும் . புத்திரர்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும் அவர்களுடைய சுபகாரியங்கள் தாமதப்படும்.. தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். மனதில் இனம் புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும். கடன் தொல்லைகள் அதிகமாகும். எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் மனம் வேதனை அடையும். எப்போதும் கோபத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகாவிட்டால், சண்டை சச்சரவுகளும் ,வாக்குவாதங்களும் ஏற்படும். எதிலும் விவேகமும், பொறுமையும் அவசியம். அரசியலில் ஈடுபடுவோருக்கு கவனம் தேவை. இல்லாவிட்டால், உங்களைச் சுற்றி இருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதி காப்பது நன்மை தரும். பெண்மணிகள், வேலை செய்யும் இடங்களில், தங்களைப் பற்றிய தவறான செய்திகளுக்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத் தகராறுகளில் ஈடுபட்டால், பழி உங்கள்மீது வந்து விடும். எதிலும் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்:-சிவனாலம் சென்று, நந்தியம் பெருமானை வழிபட்டால் பழிகளிலிருந்து தப்பிக்கலாம். கடன் தொல்லை நீங்கும்.

தனுசு:-

மனோபலம் அதிகமாகும். சொல்வாக்கு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து சிறந்து விளங்கும். உங்களுடைய எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். வருமானம் பெருகும். கடனுதவிகளும் கிடைக்கும். மூத்த சகோதரரால் நன்மை உண்டு. விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் . இருப்பினும் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். வாழ்க்கைத் துணை, மற்றும் தந்தையின் உடல் நலமும் பாதிக்கப்படலாம். கட்டுமானத் தொழில் மேற்கொண்டவர்கள் சரிவைச் சந்திக்க நேரும். புத்திரர்களின் வழியில் கவலைகள் ஏற்படக்கூடும். உங்களுக்கு போட்டி பந்தயங்களில் ஈடுபாடு இல்லையென்றாலும், மற்றவர்கள் உங்களைப் போட்டியாளர்களாகவே நினைப்பார்கள். புதிய இடங்களுக்குப் போய் வருவீர்கள். தொழிலில் நல்ல உழைப்பாளர் என்று பெயரெடுக்கும் அளவுக்குத் திற்மையை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு திருமணம் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்:-பெருமாள் கோவில் சென்று, துளசி அர்ச்சனை செய்த பின்பு, மகாலட்சுமியை 16 முறை வலம் வந்து, வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்ற , சுப காரியங்கள் நடக்கும்.

மகரம்:


செல்வாக்கு, சொல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் பெருகும். வியாபாரம் மேன்மை அடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். புத்திரர்கள் மேன்மை அடைவார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புனித யாத்திரை மேற்கொள்ளும் பாக்கியமும், ஞானிகளின் தரிசனமும் , ஆசீர்வாதமும் கிடைக்கும். இதுவரை உங்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி வந்த எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். ஆடை அணிகலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். எடுத்த காரியங்களை மன தைர்யத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சிலர் தன் ஊரை இட்டு வெளியூர் சென்று வாழவேண்டிய சூழ் நிலைக்கு ஆளாவார்கள். பெண்களால் நன்மைகள் உண்டு. கணவன் ம்னைவி உறவு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். நண்பர்களாலும், சகோதரிகளாலும் நன்மையும் பணவரவும் கிடைக்கும். அடுத்தடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தும் அற்புத மாதமிது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும். வெளியூர்ப் பயணம் நன்மை தரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கிவிடும். புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். இட மாற்றம் நன்மை தரும். கவலைகள் காணாமல் போய்விடும். கஷ்டங்கள் தீர்ந்து விட்டதென்று பெருமூச்சு விடுவீர்கள். பெண்களுக்கு சுபகாரியங்கள் கூடிவரும்.

பரிகாரம்:-கோவில்களில் மங்கள வாத்தியம் இசைப்போருக்கு வஸ்திர தானம் வழங்கவும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, பின் வினாயகர் ஆலயம் சென்று, வழிபாடு செய்ய மகத்தான பலனை அடையலாம்.

கும்பம்:-

ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கௌரவப் பட்டங்களும் பதவிகளும் கிடைக்கும். தன தான்ய சேர்க்கை ஏற்படும். பெண்களால் நன்மை உண்டு. விருந்து, கேளிக்கை, முதலிய பொழுதுபோக்குகளில் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். புதிய வாகன யோகம் வரும். தாயார் மேன்மை அடைவார்; உடல் நலம் பெறுவார். தாய்வழி உறவினர்களால் சில நன்மைகள் ஏற்படும். தந்தை மேன்மை அடைவார். அனைத்து சுகங்களையும் அடையும் பாக்கியம் கிடைக்கும். ஆனால், புத்திரர்கள் விஷயத்தில் மனதிற்குள் ஏதாவது பயம் இருந்துகொண்டே இருக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படும். சுப காரியங்கள் தள்ளிப் போகும். சிலருக்குப் பூர்வீகச் சொத்தில் ,வில்லங்கமும் ,விவகாரங்களும் ஏற்படும். தேவையற்ற வம்புச் சண்டைகள் உங்களைத் தேடி வரலாம். எதிரிகளால் அவமானம் அடைய வேண்டி வரும். அரசு அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். யாரிடமும் எதற்கும் யோசிக்காமல் பணம் கொடுக்க வேணடாம். இந்த மாதம் பணம் கொடுத்தால் ஏமாந்து போக வேண்டிவரும். கண் நோய் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படும். .
பரிகாரம்:- ஸ்ரீ கால பைரவர் வழிபாடு ஞாயிறு தோறும் செய்ய நல்ல பலன் கிடைக்கும். ஊனமுற்ற ஏழைகளுககு அன்னதானம் செய்யவும். பாசிப் பருப்பு சிவன் கோவிலுக்கு தானம் செய்யவும். சுபம் ஏற்படும்.

மீனம்:-

இந்த மாதம் எந்தக் காரியத்தையும் தைர்யத்துடன் எதிர்கொண்டு செய்ய மாட்டீர்கள். கொஞ்சம் சோதனையான மாதம். தேவையற்ற பிரச்சினைகளும் , வம்பு வழக்குகளும் உங்களைத் தேடி வரும்.மனபலம் குறையும் . பெண்களால் தொல்லைகளும், விரயங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வீண் செலவுகள் அதிகமாகும். மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக்த் தலையிட வேண்டாம். சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு , போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், என்று அலைய வேண்டியிருக்கும். பயணங்களின்போது, எச்சரிக்கை தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்பட வழியுண்டு. இந்த மாதம் மனக் கஷ்டம் ஏற்படுத்தக் கூடிய கெட்ட செய்தி ஒன்று வரலாம். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படக் கூடும். எதிரிகளால் தொல்லைகளும் கஷ்டங்களும் ஏற்படும். உடலில் மார்பு சம்பந்தமான நோய் ஏற்படலாம். 7 ல் அமர்ந்த சனி பகவான் பார்வையிடும் ஸ்தானங்கள் பாதிப்பு ஏற்படும் வண்ணம் உள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகளால் குழப்பம் உண்டாகும். நட்புக்கு மரியாதை கொடுப்பீர்கள். நண்பர்களால் உதவி கிட்டும். தூர தேசப் பயணங்களை ஏற்படுத்தும் தந்தையின் தொழிலில் தாங்கள் ஈடுபடக்கூடிய காலமாகவும் காணப்படுகிறது. இழந்த சொத்தை மீட்பீர்கள்.செய்யும் தொழிலில் முடக்கம் காணப்படுவதால் கிடைக்கும் வாப்புகளை சரியாகப் பயபடுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. உடன் பணி புரிபவர்களிடம், தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதால்,சில கஷ்டங்களைத் தவிர்க்கலாம். கூலி வேலை செய்பவர்கள் எஜமானர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்ளவேண்டும். வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தாலும் பணப் பற்றாக் குறையாகவே இருக்கும். பெண்களுக்கு மன உளைச்சல்கள் அதிகமாகும். அலைச்சல்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:-தினசரி முருகப் பெருமானை வழிபாடு செய்ய துன்பங்கள் நீங்கும். தினசரி கந்த சஷ்டிக் கவசம் படித்து வருவதும் நன்மை பயக்கும்.

Advertisements