இந்த கடுமையான வெயில் காலத்தில் நாம் அதிகம் விரும்புவது குளிர் பானங்கள் தான்.பழச்சாறு,மோர்,பாதாம்பால்,ரோஸ்மில்க்,லஸ்சி,கோக்,மிராண்டா,சர்பத் என்று குளிர்பானங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.,ஆனால் ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் விரும்பும் பானம் சர்பத்தான்.[விலையும் குறைவு தான்].இப்போது சர்பத் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சீனி—600கிராம்

தண்ணீர்—300மிலி

சிட்ரிக் ஆசிட்—ஒன்றரை tsp

லெமன் யெல்லோ கலர்—1/2tsp

நன்னாரி எசன்ஸ்—4tsp.

செய்முறை:

*சீனி,தண்ணீர்,சிட்ரிக் ஆசிட்,மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு படுத்தவும்.கொதிக்க வைக்க வேண்டாம்.

*ஆறியவுடன் வடிகட்டி,எசன்ஸ் மற்றும் கலரை சேர்த்து சுத்தமான பாட்டிலில் அடைக்கவும்.

*சிட்ரிக் ஆசிட்,கலர்,எசன்ஸ்,இவையனைத்தும் எசன்ஸ் கடைகளில் கிடைக்கும்.

*ரோஸ்,பைன் ஆப்பிள்,ஆரஞ்ச் என்று வெவ்வேறு எசன்ஸை ஊற்றினால் வெவ்வேறு சர்பத் ரெடி.திராட்சை சர்பத்திற்கு டொனொவின் [TONOVIN]என்ற எசன்ஸை ஊற்றவும்.

diet-b