கேரளா கம்யூனிஸ்ட்

கேரளா கம்யூனிஸ்ட்

 

1.மேற்கு வங்கம், கேரளா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடக்குமென்று தொலைக்காட்சிக் கணிப்பு கூறுகின்றது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்று லயோலா கல்லூரிக் கணிப்பும் கூறுகின்றது. ஆனால், பிரபல ஜோதிடர்கள் கீழயீரால் பச்சைராஜன்,கடகம் ராமசாமி போன்றவர்கள் தி.மு.க. அணி அமோக வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். எந்த கணிப்பு வெல்லும் என்பதற்கும் ஒரு கணிப்பு தேவைப்படுகிறது.

2. தமிழ்நாடு ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்புக்கு பெயர்போன மாநிலமாக இருந்தது. இப்போது இந்தி எதிர்ப்புக்கு பழைய வேகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் வட இந்திய அதிகாரிகளே கலெக்டர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது தேர்தல் ஆணையமும் வட இந்திய அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமிக்கின்றனர். நம் தமிழக அதிகாரிகளும் வட மாநிலங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது. முன்போல இப்போதைய தேர்தல்களில் இந்தி எதிர்ப்பு ஒரு பிரச்சாரமாகவும் எடுத்துக்கொள்ள்ப்படவில்லை. “இடனறிந்து ஒழுகு!; காலமறிந்து ஒழுகு!.”

3. நடிகர் கார்த்திக் முதலில் அ.தி.மு.க.வை ஆதரித்தார். பின்னர் தனித்துப் போட்டி என்றார். கடைசியாக, தி.மு.க. அணியை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார். மாற்றீ மாற்றிச் சொல்வதால் ஜனங்க மறந்து போயிடுவாங்க. அதனால், கடைசியா நீங்க என்ன சொல்ல வறீங்கங்குறதை குறிப்பிட்ட கட்சிக்கூட்டத்தில் பங்கெடுத்து ஒரு உரை நிகழ்த்திட்டீங்கன்னா மக்கள் நல்லா ஞாபகம் வச்சுக்குவாங்க.

4. டி. ராஜேந்தர்கூட தேர்தலை விட்டு ஒதுங்கிவிட்டார். சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் நடத்துவது காரணமாக இருக்கலாமோ?

5. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கைகள் தி.மு.க.வை எரிச்சலடையச் செய்துள்ளன. நெருக்கடி கால கொடுமைகளை அனுபவிப்பதாக முதலமைச்சர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரோடு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மேடையில் வைத்துகொண்டே நெருக்கடி கால கொடுமைளைப் பற்றி கலைஞர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது பரவலான பேச்சு. அந்த உரையை சரிவர கவனிக்காதவர்களின் குற்றச்சாட்டு அது. கலைஞர் எப்படி முடித்தார் என்றால், நெருக்கடி காலக் கொடுமைகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை வைத்துக்கொண்டே கலைஞர் ஒரு மீட்டிங்கில் பேச நேர்ந்த போது, இந்திரா காந்தி மிகவும் வருத்தப்பட்டு, அதே மேடையிலேயே , அப்படியெல்லாம் செய்ய வேண்டுமென்று நான் சொல்லவும் இல்லை; அப்படியான எண்ணத்தில் அந்த ஆணைகள் பிறப்பிக்கப்படவுமில்லை. அதிகாரிகளின் தேவைக்கு மீறிய செயல்கள் அவை என்று அன்றைய பிரதமரான இந்திரா காந்தி குறிப்பிட்டதாகக் கூறினார் கலைஞர். இன்றைய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செயல்பாடுகளை தன்னிச்சையானவை என கலைஞர் சாடியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்..

6. சட்ட மன்றத் தேர்தலில் அ.தி.மு.க.  ஜெயித்தால், டெல்லியிலும் திருப்பம் வரும் என்று கூறுகிறார்கள். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை அ.தி.மு.க. ஆதரிக்கலாம் என்றும், அதன் விளைவாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் மத்திய அமைச்சர்கள் ஆகலாம் என்றும்கூட கனவு காணத் தொடங்கி விட்டார்கள்.

7.

Advertisements