எம்ஜிஆர் - ஜெயலலிதா

எம்ஜிஆர் - ஜெயலலிதா

 

முந்தைய ஜெ. ஆட்சியில் அரசு சார்பில் கட்டப்பட்ட திரைப்பட ஸ்டூடியோவிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்பதை அறிந்த பழைய திரப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஜெயலலிதாவை அணுகி, ” சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நான் உட்பட எல்லோரையும்விட மூத்த கதா நாயக நடிகர் எம்.ஜி.ஆர். . நீங்கள் இந்த முதலமைச்சர் பதவியில் இருப்பதும் எம்.ஜி.ஆரால் தான். என்வே திரைப்பட ஸ்டூடியோவிற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைப்பதே பொருத்தமாகவும் நியாயமாகவும் இருக்கும்” என்று கூறினாராம். ”பெயர் வைப்பது என்பது முடிந்து போன விஷயம். வேறு ஏதாவது இருந்தால் பேசுங்கள்” என்று சொல்லி எஸ்.எஸ்.ஆரை அனுப்பிவிட்டாராம் ஜெயலலிதா. அடுத்த நாளே நாளேடுகளில் எஸ்.எஸ்.ஆர். அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். என்று செய்தி வந்ததாம். பின்னாளில் ஆட்சி மாறி, கலைஞர் முதல்வரானதும், அந்த ஸ்டூடியோவை ‘எம்.ஜி.ஆர். அரசு ஸ்டூடியோ’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாம். இப்போது மகிழ்சியா என்று எஸ்.எஸ்.ஆரைக் கூப்பிட்டுக் கேட்டாராம், கலைஞர்.

Advertisements