வளர்மதி

வளர்மதி

 

1. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வளர்மதி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பது தொடர்பாக, தொகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆர்.டி.ஐ. புக் பண்ணி இருப்பதால், அவர் மிரட்டப் பட்டாராம்.இப்போது மிரட்டல் பற்றி நடவடிக்கை கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதாம். கேள்வி கேட்டா அடியா?

2. ‘தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய , இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்கள்மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் ஈடுபடுவோம்’. என்று தீவுத் திடல் மீட்டிங்கில் சோனியா பேசினார். இது சோனியாவும், கருணாநிதியும் சொல்லி வைத்து நடத்திய நாடகம் என்று சாடுகிறார், பழ. நெடுமாறன்.

3. காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் வளசை ஜெயராமன், “இந்தியா முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் நடந்த நேரத்தில் ஒரு தீவிரவாதியைப் போன்று ஜெயேந்திரரைக் கைது செய்து ஒட்டுமொத்த இந்துக்கள் மனதையும் புண்படுத்தியவர் ஜெயலலிதா. 2500 ஆண்டுகள் பழமையான சங்கர மடத்துக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை நுழையவிட்டு மடத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்தார். கொலை வழக்கு மட்டுமல்லாமல், ஜயேந்திரரை ஒரு பெண்பித்தர் போல காண்பிக்க முயற்சி செய்தார். ஜெயேந்திரரைக் கைது செய்தபோது, அவர் கையில் விலங்கு போடப்படவில்லை. ஆனால்,ஜெயெந்திரர் கையில் விலங்கு இருப்பது போலவும், சுற்றிலும் போலீஸார் நிற்பது போலவும், அதை ஜெயலலிதா பார்த்து கைதட்டி ரசிப்பது போலவும், காஞ்சிபுரத்திலேயே ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை பூஜையறையில் வைத்து பூஜை செய்பவர்கள் , இந்த நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் சந்தித்து,’யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று நாங்கள் கூறி வருகிறோம்”. என்று ஆவேசப்பட்டார் , வளசை.

4. மதுரயில் பெண் ஊழியர்களை தேர்தல் பணிக்குப் போக வேண்டாம், என அவரவர் குடும்பத்தினர் சொல்லிவிட்டனர். ‘அரசின் உத்தரவுப்படி நடப்பதா? வீட்டார் சொல்படி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என பெண் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

5.’வைகோ என்னதான் சொல்கிறார்?’ என்ற கேள்வி இல்லாத இடமே இல்லை என்னும் அளவுக்கு அத்தனை பேரிடமும் அந்தக் கேள்வி இருக்கிறது என்பது மட்டுமல்ல ; வைகோ மீது ஒரு பச்சாதாபமும் அத்தனை தமிழ் மனங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது. மாவட்ட நிர்வாகிகள்கிட்ட வைகோ தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவுங்க ஒன்றிய நிர்வாகிகள் கிட்ட பேசுறப்ப, ஜெ.வின் நடவடிக்கையால், வைகோ ரொம்பவும் புண்பட்டிருக்கிறார். ஜெ.வுக்கு ஏற்படுகிற தோல்விதான் அவரோட மனக் காயத்தை ஆற்றும். அதனால் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்க. காங்கிரஸ் நிற்கிற தொகுதிகளில் தேர்தலைப் புறக்கணிச்சுடுங்கன்னு சொல்றதோட, சில தொகுதிகள்ல பா.ஜ.க.வை..சப்போர்ட் பண்ணவும் சொல்றாங்களாம்.

Advertisements