Priyanka-Kareena

Priyanka-Kareena

1. தனது காதலனுக்காக சண்டை போடும் பிரபல நடிகைகளைப் பார்த்து சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது பாலிவுட். அந்தக் காதலனும் பிரபல நடிகர் சாகித் கபூர் என்பதுதான் சண்டையின் சுவாரஸ்யம். சண்டை போட்டுக் கொள்ளும் நடிகைகள் அவரது முன்னாள் காதலியான பிரபல நடிகை கரீனா கபூர், மற்றும் இந்நாள் காதலியான பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இருவருக்கும் எப்போதும் ஆகாது என்றாலும், சாகித் கபூரால், இப்போது சண்டையின் வீரியம் அதிகரித்துள்ளது

நடிகை பூர்ணா

 

2.பூர்ணா நடித்து வெளிவந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. என்றாலும் அவர் தனது சம்பளத்தைக் குறைக்கவில்லை. இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ 25 லட்சம் கேட்கிறார். இது தவிர அவர் தங்கும் ஓட்டல் செலவையும் தயாரிப்பாளரே ஏற்க வேண்டுமாம்.

 

மீரா ஜாஸ்மின்

 

3. மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ ஏற்பாடு செய்த கலைவிழாவில் கலந்துகொள்ளும்படி மீரா ஜாஸ்மினுக்கு அழைப்பு அனுப்பி இருந்தார்கள். ஆனால், அந்த அழைப்பை மீரா ஜாஸ்மின் புறக்கணித்துவிட்டார். இதற்காக, மீரா ஜாஸ்மினுக்கு ‘அம்மா’ தடை விதித்து இருக்கிறது. மீராவை எந்த மலையாளப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

ஷ்ரயா

4. ஜவுளிக்கடை நகைக்கடை போன்ற வியாபார நிறுவனங்களின் திறப்பு விழாக்களுக்கு ஸ்ரேயாவின் சம்பளம் மட்டும் ரூ70 லட்சமாம்.அதுபோக, தனது மேக்கப்மேன், காஸ்ட்யூமர், டச்சப் உதவியாளர் ஆகியோரின் பெயர்களில்,’பேட்டா’வாக ரூ 50ஆயிரம் கேட்கிறார். வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை பேட்டாவாக கேட்பதில்லை.

நடிகை அஞ்சலி

5. ‘அங்காடி’ நடிகையின் அம்மா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அம்மாவின் உடல்நலக் குறைவு காரணமாக எப்போது பார்த்தாலும் கன்னத்தில் கை வைத்தபடி கவலையுடன் காணப்படுகிறார்.

ஹன்சிகா மோத்வாணி

6. கோடம்பாக்கத்துக்கு புதிதாக வந்து இறங்கியிருக்கும் ‘மோத்வானி’ நடிகைக்கு ‘மளமள’வென புதுப் படங்கள் ஒப்பந்தமாகி இருக்கின்றன. ‘தமன’ நடிகை நடிக்கவேண்டிய 2 படங்கள் இவர் கைக்கு மாறிவிட்டன. ‘தமன்னம்’ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்.

7. அர்ஜுன் சமீப காலமாக இந்திப் பட உலகினருடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருக்கிறார். அடிக்கடி மும்பைக்குப் பறந்த வண்ணம் உள்ளார். அவர் ஒரு இந்திப் படத்தில் நடிப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்திப் படத்திலும் அவருக்கு தேசப் பற்றை வெளிப்படுத்தும் பாத்திரம்தான்.