॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்விதீயோ அத்யாய:।

ஸாங்க்யயோகம்

ஸம்ஜய உவாச।
தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥

 

பகவத் கீதை - எளிய தமிழில்

பகவத் கீதை - எளிய தமிழில்

ஸஞ்ஜயன் சொன்னான்: கவலையோட அழுதுக்கிட்டு உக்கார்ந்த அர்ஜுனனைப் பார்த்து வாழ்வின் சூட்சுமங்களைத் தெரிஞ்ச ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல ஆரம்பிச்சார்…..

ஸ்ரீபகவாநுவாச।
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥

 

“என் மனசுக்கு பிடிச்ச அர்ஜுனா ! எங்க இருந்துப்பா இப்படியெல்லாம் குழப்ப எண்ணம் உன் மனசுல வருது? வாழ்க்கையில் முன்னேற குறிக்கோள் வச்சிருக்குற மனுஷனுக்கு இதெல்லாம் தேவையே இல்லாத எண்ணம்பா! இந்த மாதிரி குழம்பறவன் சொர்க்கத்துக்கு போறதில்ல… குழம்பறவனுக்கு அவமானம் தாம்பா வரும்!”

 

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥

ஏம்பா… நீ ப்ருதா பெத்த புள்ளப்பா! அதனால இது மாதிரி கேவலமா தளர்ந்து போயிடாதே ! இது உன் லெவலுக்கு சரியான நடவடிக்கை இல்லை! அதனால இது மாதிரி வீக்னெஸ்ஸ எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு , எதிரிங்கள எல்லாம் எப்பவும் ஜெயிக்கற நீ… இப்பயும் தில்லா எழுந்திரிப்பா!

அர்ஜுந உவாச।
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந।
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥

அரஜுனன் : கிருஷ்ணா… நான் ரொம்ப மதிக்குற பீஷ்மர், துரோணர் எல்லாரையும் எதிர்த்து நான் எப்படி அவங்கள சண்டையில தாக்குவேன்?

 

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே।
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥

எனக்கு கத்துத்தந்த குருங்கள சாவடிச்சு நான் வாழுறத விட நான் பிச்சையெடுக்குறது மேல்…அவங்க பேராசையினால இந்த கெட்ட வழியில போயிட்டாங்க…. ஆனாகூட அவங்க பெரியவங்க தான்! அவங்கள கொன்னு அந்த ரத்தக்கறை படிஞ்ச சந்தோஷங்கள நாம் அனுபவிக்கணுமா?

 

ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥

எது நல்லதுன்னு நமக்கு எப்படி தெரியும் கிருஷ்ணா ? அவங்கள நாம் ஜெயிக்கறதா இல்ல நம்மள அவங்க ஜெயிக்கிறதா? யாரை கொன்னு நாம வாழுறதுல அர்த்தமே இல்லன்னு நினைக்குறோமோ அவங்களே நம்ம கூட போர் செய்ய தயாரா நின்னுக்கிட்டு இருக்காங்களே….

 

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:।
யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥

இப்ப நான் என்ன செய்யணும்? எது என் கடமை அப்படிங்கறதுல நான் குழப்பமடைஞ்சுட்டேன்…இப்ப எனக்கு எது நல்லதுன்னு நீ தான் சொல்லணும் கிருஷ்ணா! உங்கிட்ட சரணடஞ்சுட்டேன்… உன் சிஷ்யன் நான்! நீ தான் எனக்கு புத்திமதி சொல்லணும்!

 

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்।
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥

என் உடம்பு மனசு எல்லாத்தையுமே வாட்டுற இந்த வேதனைய போக்கக்கூடிய வழி என்னன்னு எனக்கு தெரியல கிருஷ்ணா ! சொர்க்கத்து ராஜ்ஜியத்த சொந்தமாக்குனா கூட என்னால இந்த வேதனய அடக்க முடியாது!

 

ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥

சஞ்சயன் தொடர்ந்து திருதராஷ்டிரனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்…. “அர்ஜுனன் இப்படு குழம்பிப்போய் கிருஷ்ணன் கிட்ட அவன் போரில் சண்டை போட மாட்டேன்னு சொல்லிட்டு உக்காந்துட்டான்…”

தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்…” ரெண்டு படைக்கும் நடுவுல கவலைப்பட்டு கலக்கப்பட்டு உக்காந்த அர்ஜுனனைப் பார்த்து ஒரு புன்னகையோட கிருஷ்ணர் பேச ஆரம்பிச்சாரு”

 

ஸ்ரீபகவாநுவாச।
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே।
கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥

 

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்னார்…. ” நீ புத்திசாலி மாதிரி பேசுனா கூட எதுக்கு கவலைப் படக்கூடாதோ அதுக்கு கவலைப்படுறே! உண்மையான புத்திசாலி இருக்குறவங்களூக்காகவோ இல்லை செத்துப் போனவங்களுக்காகவோ மனசு வர்ய்த்தப்படறதில்ல!”

 

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥

நான் , நீ, இந்த மன்னர்கள்…. இவங்கள்ளாம் இல்லாமலிருந்த காலம் இல்லை…. எதிர்காலத்திலும் நாமெல்லாம் இல்லாமலிருக்கப் போகும் காலம் இல்லை!

 

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

ஆத்மா ஒரு உடலுக்குள்ள நுழைஞ்சு எப்படி சின்ன வயசு குழந்தையிலிருந்து படிப்படியா மாறி வயாசான ஆளாகுதோ அதேமாதிரி செத்தப்புறமும் வேற உடலுக்கு இந்த ஆத்மா மாறுது… எந்த ஆத்மா தனனைத் தானே உணர்ந்திருக்குதோ அந்த ஆத்மா இந்த மாற்றத்தால திகைக்குறதில்ல!

 

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥

சந்தோஷம் துக்கம் ரெண்டுமே எப்படி கோடையும் குளிர்காலமும் மாறி மாறி வருதோ, அப்படித்தான். எப்படி வெய்யிலையும் குளிரையும் நம்ம புலன்கள் உணர்ரதால தான் நாம் தெரிஞ்சுக்கிறோம்.. ஆனா நம்ம புலன் களை அடக்கி அந்த உணர்ச்சிகள நாம கட்டுப்படுத்த முடியுமோ அதே மாதிரி நாம இன்ப துன்பங்களால பாதிக்காம இருக்கவும் பழகிக்க முடியும்! அதனால இதனாலெல்லாம் பாதிக்காம இருக்க நீதான் பழகிக்கணும்!

 

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥

யாரு இன்பம் துன்பம் இரண்டிலுமே பாதிக்கப்படாம இருக்கிறானோ அவன் நிச்சயமாய் ஒரு உன்னத நிலைக்கு தயாராய் இருக்கிறான்.

 

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥

பிறப்பு சூட்சுமத்தின் உண்மை தெரிஞ்சவங்க நிலையில்லாதது எதெல்லாம்… நிலையானது எதெல்லாம்அ ப்படின்னு ஆராய்ஞ்சு முடிவு பண்ணியிருக்காங்க

 

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

ஆத்மா நம்ம உடம்பு முழுக்க பரவியிருக்கு… அந்த ஆத்மாவுக்கு அழிவே இலலை… அத யாராலும் கொல்ல முடியாது!

 

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

இந்த உடம்பு மட்டும்தான் அழியக் கூடியது… ஆனா இந்த உடம்புக்குள்ள இருக்குற ஆத்மா நிரந்தரமானது.. அத யாராலும் அழிக்க முடியாது ! அத யாராலும் அளக்க முடியாது ! அதனால உடம்பு அழியறதப் பத்தி கவலைப்படாம தைரியமா சண்டை போடு அர்ஜுனா!

 

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥

ஜீவாத்மா கொலை செய்யுதுன்னோ இல்லை கொலை ஆகுதுன்னோ நம்புறவன் இந்தசசூட்சுமத்த புரிஞ்சுக்காதவன். ஆத்மா அழிக்கறதோ இல்லை அழியறதோ இல்லைன்னு ஞானமுள்ளவங்களுக்கு தெரியும்.

 

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது ! ஒரு சமயம் இருந்து அப்புறம் அழிஞ்சு போறது இல்லை ஆத்மா! உடல் அழியும்போது ஆத்மா அழியறதில்ல !

 

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥

 

ஆத்மா அழிவில்லாததுன்னு தெரிஞ்சுக்கிட்ட! அப்ப ஆத்மா எப்படி கொல்லவோ கொல்லப்படவோ முடியும்?

 

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

 

எப்படி பழைய உடங்களை கழட்டிட்டு புது உடைங்களை போட்டுக்கறமோ அந்த மாதிரி ஆத்மா பழைய உடலை விட்டு புது உடலுக்குள் போயிடுது !

 

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥

ஆத்மாவை எந்த ஆயுதத்தாலும் துண்டாக்க முடியாது. அத யாராலும் நெருப்பால எரிக்க முடியாது! நீரால நனைக்கமமுடியாது ! காற்றால உலர்த்த முடியாது !

 

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥

ஆத்மாவை பிளக்கமுடடியாது.. கரைக்க முடியாது .. அது எல்லா இடத்திலும் இருக்குறது ! என்னைக்குமே இருக்குறது ! மாறாம இருக்குறது !

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥

ஆத்மாவை கண்ணால பாக்க முடியாது! அத மாத்த முடியாது ! அதனால நிலையான ஆத்மாவப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நிலையில்லாத இந்த உடம்பப்பத்தி ப்பத்தி கவலப்படாத அர்ஜுனா!

 

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥

சரி.. ஆத்மா பிறந்து இறப்பதாகவே நீ நினைச்சுக்கிட்டா கூட, இதுல வருத்தப்பட என்னஇருக் கு அர்ஜுனா?

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।
தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥

பொறந்தவன் எல்லாருக்குமே மரணம் நிச்சயம். அதே மாதிரி செத்த யாருக்குமே திரும்ப பிறப்பு நிச்சயம் ! அதனால செஞ்சே ஆக வேண்டிய கடமைகளை செய்வதில இந்த பிறப்பு இறப்ப போட்டு குழப்பிக்காதே

 

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥

படைக்கப்பட்டது எல்லாமே முதல்ல இல்லாம இருந்து இடையில உருவாகி கடைசியில திரும்பவும் சாகுது… இதுல எதுக்கு கவலப்பட்டுக்கிட்டு? கவலப்பட என்ன இருக்கு இதுல?

Advertisements