அனுஷ்கா - வானம்

அனுஷ்கா - வானம்

வானம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘இந்தப் படத்தில் இய்க்குனராக க்ரிஷ்ஷை போடும்படி சிபாரிசு செய்தவரே நடிகை அனுஷ்காதான்’, என்று சிம்பு ஏற்கெனவே புகைந்துகொண்டிருந்த காதல் கிசுகிசுவைக் கிளறிவிட, அவ்வளவாக தமிழ் தெரியாத இயக்குனரும் ,நடிகையும் வேற டிஸ்கஷனில் இருந்தார்கள். விழா முடிநதும் இருவரும் ஒன்றாக காரில் எஸ்கேப். முன்னதாக, அனுஷ்காவிடம், ‘காதல்’ ப்ற்றிக் கேட்டதற்கு ‘பதில் சொல்வதற்கு இந்த இடம் ஏற்றதல்ல.’ என்று நழுவி விட்டார்.

 

ஜ்யோதிர்மயி

 

ஜோதிர்மயி விவாக ரத்து கேட்டு, கோர்ட்டுப்படி ஏறியதுபற்றி வளைகுடா நாட்டில் வேலை செய்யும் கணவர் நிஷாந்த் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை . ஜோ. ஒரு ஆளுடன் சுற்றுவதாக, கணவரும், நிஷாந்த் ஒரு கோடீஸ்வரியுடன் இணக்கமாக இருப்பதாக நடிகையும் கூறுகிறார்கள். ‘அவரை இனியும் நம்ப முடியாது’ என்று ஜோதிர்மயி கூறுகிறார்.

குத்து ரம்யா

ஒரு சிக்கலிலிருந்து இப்போதுதான் வெளியே வந்த குத்து ரம்யா என்கிற் திவ்யா ,இன்னொரு அக்கப்போரை கிளப்பி விட்டார். ‘நான் காதலில் விழுந்து விட்டேன்’ என்ற செய்தியைப் பரப்பினார். திவ்யாவுடன் நடிக்கும் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாதான் அந்த காதலராக இருக்கலாம், என்று யூகித்து அவரிடம் பார்ட்டி கேடார்களாம்.

த்ரிஷா

ஒவ்வொரு நடிகையையும் புக் செய்யப் போனால், சம்பளத்தை எக்கு தப்பாகக் கேட்கிறாகள். இலியானாவுக்கு 2 கோடி, அனுஷ்காவுக்கு 1.25.கோடி, சமந்தா, சின்ஹா இருவருக்கும் 40 லட்சம்,, த்ரிஷாவுக்கு 80 லட்சம் கொடுக்கவேண்டும். த்ரிஷா வேறு பிரச்சினை ஏதும் செய்வதில்லை. மற்ற நடிகைகள் கேட்கும் எக்ஸ்ட்ராவில் பல லட்சம் எகிறிவிடும், என்கிறார் அந்த பிரதர்ஸ் தயாரிப்பாளர்.

லக்ஷ்மி ராய்

நடிகை லக்ஷ்மி ராய் இப்ப ஹைதராபாத்தில் இருக்கிறாராம். என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் மெயின் ஹீரோயினாம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு எனக்கு மட்டும் வஞ்சகம் பண்ணிவிட்டது. டைரக்டர்ஸ் ஆர்டிஸ்டான என்னை கவர்ச்சி பொம்மையாக்கி காலி பண்ணி விட்டார்கள். ஆனால், திற்மைதான் ஜெயிக்கும் என்கிற கட்சியைச் சேர்ந்தவள் நான் என்கிறார்.

அனுஷ்கா

ஆறடி உயர அனுஷ்காவின் ஆரம்பகால எடை 108 கிலோவாம். யோகா டீச்சரான பிறகு 80க்கு வந்திருக்கிறார். சாப்பாட்டில் வஞ்சனையே கிடையாது. காலையில் இட்லி தோசை; மதியம் ஒரு என்.வி. ஐடெம்கூட தள்ளுபடி கிடையாது. இரவு 1/2 டஜன் சப்பாத்திகளை உள்ளே தள்ளுவார். விழித்திருக்கும் நேரமெல்லாம் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பாராம். உதவியாளர்களுக்கு இவருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தே பெண்டு கழண்டு விடுமாம்.

Advertisements