பருப்பு வகைகளில் அதிகளவில் கொழுப்பு சத்து  இருக்கிறது.அதிகப்படியான கலோரியையும் கொடுக்கிறது என்பது பொதுவான ஒரு கருத்து.கடலை,முந்திரி,பாதாம் போன்ற பருப்புகளை அதிகளவில் சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்கும் என்பதும் ,கொலஸ்டிரால் எகிறிவிடும் என்பதும் ஒரு கருத்து.இது எல்லாம் அளவுக்கு மீறினால் தான்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அதனால் பருப்பு வகைகளை அளவுடன் சாப்பிடுங்கள்.தினமும் பருப்பை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால்[கடலை,பாதாம்,பிஸ்தா,முந்திரி,walnut]உங்கள் எடை,இடை ,இரண்டும் அதிகரிக்காது.உங்கள் உடம்புக்கும் மிகவும் நல்லது.இப்பொழுது ஒரு சில பருப்புகளில் இருக்கும் சத்துகளை பார்ப்போம்.

நிலக்கடலை:கடலையில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.நல்ல கொழுப்புகளில் ஒன்றான[good fat]monounsaturated fat கடலையில் அதிகளவில் காணப்படுகிறது.விலையும் மிகக்குறைவு தான்.

பாதாம்பருப்பு:

100கிராம் பாதாமில் 24மிகி vit-E இருக்கிறது.இதிலும் நல்ல கொழுப்பு என்று ம்அறியப்படும் monounsaturated fat இருக்கிறது.இதய நோய்களை குறைக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.மேலும் இதில் protein,potassium,iron,fibre[நார்ச்சத்து]இருக்கிறது.தினமும் 4-5க்கு மேல் சாப்பிடக் கூடாது.

முந்திரிப்பருப்பு:

இதிலும் புரதம்,பொட்டாஷியம்,மக்னீஷியம்,போலேட்[folate],vit-B,monounsaturated fat இருக்கிறது.1கிராம் முந்திரி 6.5கலோரி கொடுக்கிறது.

பிஸ்தாபருப்பு:

இதில் அதிகளவில் நார்ச்சத்து இருக்கிறது.இதில் இருக்கும் phytosterols கொலஸ்டிராலை குறைப்பதுடன்,சில வகை புற்று நோயிலிருந்தும் காக்கிறது.

வால்நட்[WALNUT]:

100gm வால்நட்டில்10.6gm புரதமும்,2.4mg இரும்புச்சத்தும் இருக்கிறது.இதில் antioxidant,omega-3 fatty acid அதிகளவில் இருக்கிறது.இவ்விரண்டும் நம் உடம்புக்கு மிகவும் நல்லது.

diet-b

Advertisements