ஐஷ்வர்யா - அழகு குறிப்பு

ஐஷ்வர்யா - அழகு குறிப்பு

நம் உடல் நிறம் எத்தகையதாக இருந்தாலும் பொலிவுடன் திகழ வேண்டும் என எண்ணுவது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். அதிகம் செலவாகக் கூடாது; முகமும் பளிச்சென இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில முக அழகுக் குறிப்புகள்:

* பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு லேசாகக் கழுவி விட்டு, கடலை மாவால் மென்மையாகத் தேய்த்து பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* சந்தனம், 4 சொட்டு ரோஸ்வாட்டர், 5 சொட்டு பால் கலந்து முகத்தில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.

* காலையில் தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* பயிற்றுமாவு, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது ஒரு சிறந்த ஃபேஷியல்.

* வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வறண்ட தன்மை மாறி முகம் பளபளப்பாகும்.

* துருவி வேக வைத்து மசித்த கேரட்டை முகம், உடலில் மசாஜ் செய்தால் சருமம் மிருதுவாவது மட்டுமல்லாமல் பொலிவுடனும் திகழும்.

* பேரிச்சம்பழத்தை மைய்ய அரைத்து வெண்ணை சேர்த்து கண்ணை சுற்றி பூசினால் கருவளையம் மறையும்.

* பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை.

Advertisements