ராசி - நட்சத்திரம்

ராசி - நட்சத்திரம்

 

விக்ருதி வருடம் முடிந்து சித்திரை ஒன்றாம் தேதி முதல் ( 14.04.11) கர வருடம் தொடங்குகிறது. இந்த கர வருட ராசி பலன்களை ஒவ்வொரு ராசி வாரியாக (14.04.2011 தொடங்கி 13.4.2012 ம்  தேதி வரை)  கீழே கொடுத்துள்ளோம். இந்த வருட பலன் களை முதலில் வரும் குரு பெயர்சியும்  ( 8.05.11) அடுத்து வரும் ( 16.05.11) இறுதியாக வரும் சனி பெயர்ச்சியும் ஆட்சி செய்கின்றன( 21.12.11) . அதைப் பொறுத்து பலன்கள் அமையும்.

 

1.மேஷம்:-
கர வருட தொடக்கத்தில் சித்திரை 25ம்தேதி(8.5.2011)அன்று உங்களது ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கப் போகிறார். ‘ஜென்ம குரு’ வந்து விட்டதே என்று நீங்கள் பயப்பட வேண்டாம். நம் விடு தேடி வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதுபோல ராசிக்கு வரும் குருவை வருவதற்கு முன்பே வரவேற்று, ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டால், நா மகளும் பூ மகளும் உங்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பர். குருவின் பார்வை 5,7,9, ஆகிய இடங்களில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே, பொருளாதார நிலை உயரும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கொடி கட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். மே மாதம் 16ம் தேதி ராகு கேது பெயர்சி , ஏற்பட்டு, ராகு எட்டாம் இடத்துக்கும் கேது 2ம் இடத்துக்கும் வருகிற்து. அஷ்டமத்து ராகு, ஆதாயத்தை வரவழைத்துக் கொடுத்தாலும், அடுத்த நிமிடமே விரயத்தையும் கொடுத்து விடும். எனவே பணம் வரும்பொழுது அதை பாதுகாத்து வைத்தால் விரயமாகிப் போகும். எனவே, அவ்வப்போது ஏற்படும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது நல்லது. இரண்டாமிடத்து கேது எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கும். குடும்பஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களை நீங்கள் திருப்திப்படுத்த இயலாது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதே நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 10,11ககு அதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு, மார்கழி மாதம் 5 ம் தேதி (21.12.2011) அன்று துலா ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அப்போது சனி உங்கள் ராசியைப் பர்க்கப்போகிறார். சனிக்கிழமை தோறும் சனிபகவானைக் கொண்டாடிக் கும்பிட்டால், வாழ்க்கை வளம் பெறும். வாழ்க்கைத் துணை வழியே சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்த உடன் பிறப்புகள் இனி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழிலதிபர்களுக்கு பழைய தொழில் விரிவடைவதோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வங்கி உதவிகளும் அரசு சலுகைகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மரியாதை அதிகரிக்கும். பொதுமக்கள் ஆதரவு பெருகும். அடிமட்டத் தொண்டனும் அரியணை ஏறும் காலம் இது. வாய்ப்பு தேடி அலையும் கலைஞர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் தேடி வரும். புகழேணியில் இருக்கும் கலைஞர்களுக்கு அதன் உச்சத்தைத் தொடும் பாக்கியமும் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியடையும். விவசாயிகளுக்கு செழிப்பான விளைச்சல் கிடைக்கும். உடன் பணி புரியக்கூடியவங்க மத்தியில உங்கமேல ஏற்பட்டிருந்த மனக்கஷ்டம் மறையும். பெண்களுக்கு இது யோகமான காலம். தடைப்பட்ட சுப காரியங்கள் சீராகி நன்மை தரும். வீட்டில் மழலைக்குரல் கேட்கும். சமையலறையில் இருக்கும்போது க்வனக்குறைவால், சூடுபட்டுக்கொள்ள நேரும். மின்சாதனங்களை இயக்கும்போதும் கவனம் அவசியம். இந்த வருடத்தில் சித்திரை மாதம், நீங்கள் எச்சரிக்கையா இருக்கவேண்டிய கால கட்டம். பழக்க வழக்கம் சீர்கெட்டா ஆரோக்கியம் கடுமையா பாதிக்கப்படலாம்.
பரிகாரம்:-செவ்வாய்க்கிழமைதோறும் விரதமிருந்து,முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செல்வ நிலை உயரும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று யோகபலம் பெற்ற நாளில் வைத்திய நாதர், தையல்நாயகி வழிபாட்டோடு, பஞ்ச அர்ச்சனை செய்து வந்தால், காரியங்களில் வெற்றி கிட்டும்

2. ரிஷபம்:-
இந்தப் புத்தாண்டில் ராசி நாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து, சகாய ஸ்தானத்துக்கு அதிபதியான சந்திரனால் பார்க்கப்படுகிறார். எனவே தொழில் வளர்ச்சி கூடும் ஆண்டாகவே இந்த ஆண்டைக் கருதலாம். இந்த ஆண்டு டிஸம்பர் மாதம் சனிப் பெயர்ச்சி ஆகிறது. உங்களுக்கு யோக்ம் செய்யும் சனி வக்கிரமடைவதால், அதன் வக்கிர காலத்தில், எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. சுக்ரனின் பலத்தோடு, புதனின் பலமும் உங்கள் சுய ஜாதகத்தில் கை கொடுத்தால், சொல்லை செயலாக்கிக் காட்ட இயலும். சித்திரை மாதம் 25ம் தேதி (8.5.2011)உங்களது ராசிக்கு 12ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தானத்திற்கு வரும் குரு செலவுகளை ஏற்படுத்துமோ? என்று அஞ்ச வேண்டாம். குருவின் பார்வை பலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குருவின் பார்வை 4,6. 8 ஆகிய இடங்கள்ல் பதிவதால், குருவிற்குரிய ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை குருப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே மேற்கொண்டு, குழப்பங்கள் அகல வழி வகை செய்துகொள்ளுங்கள். பொதுவாக, இந்த குருப் பெயர்ச்சியால், பயணங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம், அவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி வகுப்பர். குருவின் பார்வை பலத்தால், வீடு, இடம் வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும். தாய் வழி ஆதரவு பெருகும். எதிரிகள் மறைவர். உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்பட மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளவும். இந்த மே மாதம் ஏற்படப் போகும் , ராகு கேது பெயர்ச்சியில் சப்தம ராகு நீண்டதூர பயணங்களை ஏற்படுத்தும். ஜென்ம கேதுவால் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். முறையாக சர்ப்ப சாந்திகளைச் செய்வது அவசியம். 21,12.2011. முதல், சனி 6ம் இடத்தில் சஞ்சரிக்கப் போவது நல்ல அலங்களைக் கொடுக்கும். எதிர்ப்புகள் மறயும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு கூடுதல் லாபம் பெற வழி கிடைக்கும். இனி உறவினர்களின் பாசம் தடையின்றிக் கிடைக்கும். உடன் பிறந்தோரின் திருமணம், படிப்பு முதலிய ஏதாவதொரு செலவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து உவக்கூடும். தந்தை வழி பாகப் பிரிவினைகள் சாதகமாக இருக்கும். பழைய தொழிலை விட்டு விட்டு புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும் பொருப்புகளும் வந்து சேரும். பெரிய கிரகங்களான ராகு, கேது, , குரு ஆகியவை கைவிட்ட நிலையில், மாதக் கிரகங்கள்தான் உங்களை வழி நடத்திக்கொண்டு போகும். பெரிய ஏற்றம் கிடைக்காவிட்டாலும், தோல்விகள் உங்களை நெருங்கத் தயங்கும் . தசா புத்தி சரியாக இருந்தால், என்ற ஆண்டு போலவே இந்த ஆண்டு ஓடிவிடும். மாறாக இருந்தால், தொலதிபர்களூக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவதிலும், புதிய வாய்ப்புகள் வந்து சேர்வதிலும் தாமதம் உண்டாகலாம். பணியாளர்கள் ஒத்துழைப்பு பாதியாகக் குறையும். உங்கள் தயாரிப்புகளுக்கு மவுசு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, வேண்டிய இட மாற்றம் கிடைக்க வழி இல்லை. திற்மையான மாணவர்களுக்குக் கூட. எதிபார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது, என்றாலும் உயர்கல்வி வாய்ப்புகளில் தடை இருக்காது. கடல் கட்ந்து பணி செய்யும் முயற்சி பலிக்காது. காதல் திருமணம் கை கூடாது. அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற நல்ல பெயர் கிடைக்காது. இருக்கும் பதவியும் பறிபோகும். கட்சி விட்டு கட்சி மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். கலைஞர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். வபாரிகளூக்கு வியாபாரம் மந்தமாகும். விவசாயிகளுக்கு விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்கும் காலம் இது. தொழிலாளர்கள் முதலாளி எதிர்ப்பைக் கடைப்பிடித்தால்
, முதலாளிகளின் தரிசனமோ கரிசனமோ கிடைக்காது. போராட்டம் முதலியவற்றில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்யப்படலாம். இந்த ஆண்டுல நீங்க வைகாசி மாதம் மிகமிக கவனமா இருக்கணும். வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்தால் அலட்சியமில்லாம சிகிச்சை எடுத்துக்கங்க.
பரிகாரம்:-
வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருந்து தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வந்தால், நன்மைகள் நடக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரரை வழிபட்டு வந்தால் துன்பம் அகலும்.

3.மிதுனம்:-
சந்திரன் சகாய ஸ்தானத்திலும், சூரியன் லாப ஸ்தானத்திலும் வீற்றிருந்து தொடங்கும் இந்த ஆண்டு, உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும் வகையில் அமையும். புதுமைகளையும், புரட்சிகளையும் செய்து , வரலாற்றில் இடம் பெரும் விதத்தில், நாளும் நற்ப்ன்களை சந்திக்கப் போகிறீர்கள். அர்த்தாஷ்டம சனியாக இருந்தபோதும், வ்ருட ஆரம்பத்திலேயே அந்த சனி வக்கிரமடைவதாலும், குருவின் பார்வை அதன்மீது பதிவதாலும், வருட ஆரம்பத்திலேயே, ராசிக்கு பதினோராம் இடத்தில் குரு சஞ்சரிக்கப் போவதாலும், பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் வாய்ப்புகள் அலை மோதும். லக்னாதிபதி புதன் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். ராகு கேதுக்களின் பெயர்ச்சியை உத்தேசித்து அதற்குரிய தலத்தில் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால், சந்தோஷமான வாழ்க்கை அமையும். சனியை செவ்வாய் பார்க்கும் காலங்களில் ரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களுக்கு,சதாரண சிகிச்சையே கை கொடுக்கும். ராசிநாதனாக புதன் விளங்குவதால், எழுத்தாற்றல் , பேச்சாற்றல் கை கொடுக்கும். உங்கள் வெற்றிக்குப் பின்னால் வேரொரு நபர் ஒளிந்திருப்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். குரு பெயர்ச்சி 8.5.11ல் வருவதற்கு முன்பே, குருவை வரவேற்று, ஹோமங்கள் , பிரார்த்தனைகள் செய்து, கொண்டாடி மகிழ்ந்தால் நல்லது நடக்கும். குருவின் பார்வை 3,5,7ஆகிய இடங்களில் பதிவதால், சகோதரர்கள் உதவுவர். பிள்ளைகளால் பெருமை சேரும் .நீண்ட நாள் வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் குரு தொழிலில் லாபத்தை உருவாக்குவார். வாழ்க்கைத் துணை வழியிலும் வருமானங்கள் வந்து சேரும். தூர தேசத்திலிருந்து நல்ல சேதி வரும். ராகு கேது பெயர்ச்சி 16ம்தேதிககுப் பின் ஆறாம் இடத்து ராகு அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கப் போகிறது . நிறைந்த தனலாபம் கிடைக்கப் போகிறது. பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அதே நேரத்தில் 12ம் இடத்து கேது விரயங்களைக் கொடுக்கலாம் என்பதால், செலவுகளை சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். உற்றார்,உறவினர்களுக்கு, கல்வி,கல்யாணச் செலவுக்ளுக்குக் கொடுத்து உதவலாம். 5ம் இடத்துக்கு வரப்போகும் சனியால், பிள்ளைகள் உங்கள் அறிவுரைகளைக் கேட்காமல், தாங்களே ஒரு சில காரியங்களில் முடிவெடுத்து விடலாம். மக்கட்செலவங்களின் வழியில் திடீர் விரய செலவுகள் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு பொன்னான காலம். உங்கள் தயாரிப்புகள் கடல் கடந்த நாட்டையும் கவர்ந்து இழுக்கும். உத்தியோகஸ்தகள்க்கு பதவி உயர்வும், பணி நியமனமும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள், கடல் கடந்து படிக்கும் வாய்ப்பு, அரசு சலுகைகள் முதலியவை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள், புகழும், பணமும் உதவியும். அரசியல்வாதிகளுக்கு ‘அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும், கட்சியில் உயர்ந்த பொறுப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் அபிவிருத்தியடையும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு எல்லாம் கிடைக்கும். சனி வழிபாடு நன்மையைக் கொடுக்கும். மறைமுக எதிரிகள் பலம் பெற்று விளங்குவர் என்பதால் யாரையும் வீணாகப் பகைச்சுக்குறதும் ,மட்டம் தட்டிப் பேசுவதும் கூடாது.
பரிகாரம்:-புதன் கிழமை தோறும் ஒரு நேரமாவது விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டு வந்தால், நல்லதும், பொன்னான வாழ்க்கையும் அமையும். சிவகெங்கை மாவட்டம், கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள இரணியூரில் வீற்றிருந்து, அருள் வழங்கும் ஆட்கொண்டநாதர்,சிவபுரந்தேவியை வழிபட்டு வந்தால்,நல் வாழ்வு வந்து அமையும்.

4. கடகம்:-
பொது நலத்தில் அதிக அக்கறை காட்டும் உங்களுக்கு இந்த புத்தாண்டு புதிய பொறுப்புகளையும் பதவிகளையும் வழங்கப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே உங்கள் ராசி நாதன் சந்திரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு பார்க்க இந்த ஆண்டு பிறக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை இல்லையா? எனவே கண்ணேறு படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றங்களைக் கொடுக்கப் போகின்றது. கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்போதெல்லாம், அபிஷேகம் ஹோமங்கள் செய்து வளங்களையும் நலங்களையும் வரவழைத்துக் கொள்ளலாம். மற்ற காலங்கள்ல் அர்ச்சனைகள் செய்து மகத்தான பலன்களைக் காணலாம். சந்திரனுக்கு இன்னொரு பெயர் மதி. அந்த மதியின் வழியாகத்தான் உங்கள் விதியும், கதியும் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த சந்திரன் தான் உங்கள் ராசிநாதன் என்பதால்,நிலவு நிறைந்த நாளில் செய்யும் வழிபாடுகளும் ,திங்கட்கிழமை செய்யும் சிறப்பு வழிபாடுகளும் உடனடியாக நற்பலன்களைக் கொடுக்கும். வருடத் தொடக்கத்தில் குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். வீ ட்டில் மழலைக்குரல் கேட்கும். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை எப்பாடுபட்டாவது, செய்து முடித்து விடுவீர்கள். நல்லவர்களையும் பழகி வைத்திருப்பீர்கள். பொல்லாதவர்களையும் பழகிவைத்திருப்பீர்கள். ‘எனவே, பொது வாழ்வில் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்றும் மக்கள் சொல்வர். உங்கள் ராசிக்கு குரு பத்தாம் இடத்துக்கு போவதால், பத்தில் குரு பதவியைக் கெடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயற்கையே. குருப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்களுக்கு யோகம் தரும் நாட்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது. வேலைப்பளு மிக்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு வேலைக்கு ஏற்பாடு செய்த முயர்ச்சி கைகூடும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய இடங்களில் பதிவதால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படமுடியும். வியாபார போட்டிகளை சமாளிக்கலாம். மே மாதம் 16ம் தேதி ராகு கேது பெயர்ச்சி வருகிறது. புத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் நல்ல முடிவிற்கு வரும். ஸ்தல யாத்திரை மேற்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், வரும் லாபத்தை அசையாத சொத்துக்களாக மாற்றி வைத்துக் கொண்டால்தான் அது நிலைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இனி தொடர்ந்து கிடைக்கும். ராகு கேதுக்களுக்கு ப்ரீத்தி செய்வது நல்லது. 21.12.2011ல் வரும் சனிப் பெயர்ச்சியில் அர்த்தாஷ்டம சனிக் காலம் வருகிறது. எதையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ளவும். வீடு மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவைகள் தானாகவே வந்து செரும். தொழிலதிபர்கள்க்கு தொழில் முனேற்றம் தொடர்ந்து நீடிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு சலுகைகள் தாமதமானாலும் உறுதியாகக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பண உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் இவை தாமதமானலும், இறுதியில் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள், கடல் கடந்த படிப்பு, நல்ல சம்பளத்தில் உயர்ந்த உத்தியோகம் அனைத்தும் தடையின்றிக் கிடைக்கும். கலைஞர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. வெற்றி வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்பில் இல்லாத தொண்டர்களுக்கும் கூடுதல் மதிப்பும் மரியாதையும், பதவி வாய்ப்புகளும் வரலாம். கடந்த ஆண்டு பெற்ற பெயரும் புகழும் இப்போது கைகொடுத்து உயர்த்தும். வியாபாரிகளுக்கு, அவ்வப்போது ஏற்படும் விலை ஏற்றத்தினால், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படலாம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று யோகம் குறை
்த ஆண்டாகவே இருக்கும். விவசாயிகளுக்கு தளர்ச்சியே இல்லை. கடந்த கால மகசூல் தொடர்ந்து நீடிக்கும். தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே பணிச்சலுகைகள் குறைவின்றிக் கிடைக்கும். இந்த ராசிப் பெண்கள் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் நன்மைகள் பெறக்கூடிய காலம். உடல் நலத்துல அதிக அக்கறை தேவைப்படுது. உபாதை சிறிதாக இருக்கும்போதே, நிவாரணம் தேடிக்கிட்டா, பெரிய பாதிப்புகளைத் தடுத்துக் கொள்ளலாம். கழிவுப்பாதை உறுப்பு, முதுகுத் தண்டுவடம், பரம்பரை நோய்ப் பிரச்சினைகள்னு பல பிரச்சினைகள் வரலாம் . உடனே மருத்துவம் செய்துகிட்டா, வந்த சுவடே தெரியாம குணமடையலாம். இந்த வருஷத்துல ஆடி மாதம் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம். இந்த சமயத்துல பணியிடம், வீடுன்னு எங்கும் அலட்சியம் அவசரம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை. வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவற்றை செய்வது நல்லது. முறையாக சனிஸ்வர வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஆதியந்த பிரபுவையும் வழிபடுவது நல்லது.
பரிகாரம்:- திங்கட்கிழமைதோறும், சந்திரன் மற்றும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்க்ள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் இளையாற்றங்குடிக்கு சென்று அங்குள்ள கைலாச விநாயகர், நித்ய கல்யாணி சமேத கைலாச நாதரை வழிபட்டா, முத்தான வாழ்க்கை அமையும்.

 

5.சிம்மம்:-
இந்த வருட தொடக்கத்தில் குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போவது நல்ல அம்சம். ஆனால், இந்த வருடம் தொடங்குகிறபோதே, ஏழறைச்சனி வக்கிரம் பெறுகிறார். சகட யோகத்தின் பிண்ணனியில் செயல்பட்டு வந்த இந்த ராசிக்காரர்களுக்கு இனி விமோசனம் கிடைக்கப் போகிறது. வருடத் தொடக்கத்தில் வரும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி வருகிறது.அதற்குப் பிறகு வரும் சனிப்பெயர்ச்சிதான் உங்களுக்கு அற்புத பலன்களை அள்ளி வழங்கும். எனவே,ஏழறைச்சனி முழுமையாக விலகும் இந்த நேரத்தில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் காப்பிட்டு, எள்ளோதரை நைவேத்தியமிட்டு, , நீல வஸ்திரம் சாத்தி, நீல நிற மாலை அணிவித்து சனி பகவானை வழிபட்டால், நற்பலன்களை தக்க வைத்துக்கொள்ளலாம். 24.7.2011 முதல் 10.9.2011 வரை சனியை செவ்வாய் பார்க்கும் காலத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அருகில் இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. சுய நலமும் பொது நலமும் இணைந்து காணப்படும் உங்களை பகைத்துக்கொள்ள யாரும் பயப்படுவர்.களத்திர ஸதானாதிபதி சனி என்பதால், வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் வரும். புகழுக்காக ஆசைப்படும் நீங்கள் , நடு வயதில்தான் பிரகாசிப்பீர்கள். 8.5.2011ல் வரப்போகும் குருப் பெயர்ச்சி மூலம் சகல பாக்கியங்களும் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணப்பிரச்சினைகள் அகலும். வெற்றிச் செய்தி வீடு தேடி வரும். வாரிசுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இருப்பினும் பிள்ளைகளின் செயல்பாடுகளில் நீங்கள் அக்கறை காட்டுவது அவசியம். புதியதொழில் தொடங்கும் திட்டங்கள் கை கூடி வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். திருமணம் கைகூடி வரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். ராகு கேது பெயர்ச்சியினால், அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஓரளவே கிடைக்கும். பணிகளில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணிஓய்வுக்குப் பிறகும் கூட திரும்ப உங்களை பணியில் அமர்த்துவார்கள். எதிர்ப்புகளின் காரணமாக உத்தியோகத்தில் ஏற்பட்ட இட மாற்றம் நன்மையாகவே முடியும். ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவுகள் கூடும். இந்த கர வருடத்தில் விலகப் போகும் சனியால், வரவு அதிகரிக்கும். வாய்ப்பு வாயில் கதவைத் தட்டும். உங்களோடு இதுவரை வாதிட்டவர்களளெல்லாம் இப்போது உங்களிடம் தஞ்சமடைவர். அரசு அதிகாரிகளின் நட்பாலும் , அரசியல்வாதிகளின் பழக்கத்தாலும் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். தொழிலதிப்ர்களுக்கு தொழில் விரிவடையும். புதிய தொழில் தொடங்குவோர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு. சம்பள உயர்வு, பணி நிரந்தரம், விரும்பிய இட மாற்றம் முதலியவை தேடிவரும். மாணவர்கள் முதலிடம் பெறுமளவுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். விருப்பப் பாடம் கிடைத்து உயர்கல்வி படிக்கலாம். கடல் கடந்து பணிசெய்து படிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும். பழைய ஒப்பந்தங்களை புதுப்பிக்க நல்ல சந்தர்ப்பம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு புகழ் அதிகரிக்கும். பொது மக்களிடம் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். விவசாயிகளுக்கு உங்கள் பூமி பொன் விளையும் பூமியாக மாறும். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்க சனி, ராகு, கேதுவை வழிபட்டு, பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம்:-ஞாயிற்றுக்கிழமைதோறும்,காலை நேரத்தில் விரதமிருந்து, சூரிய பகவானை வழிபட்டு வந்தால், சந்தோஷம் கூடும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்கு, யோகமிக்க நாளில் சென்று வழிபட்டு வந்தால்,, சகல யோகங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

6. கன்னி:-
இந்தப் புத்தாண்டில் புதிய திருப்பங்கள் பலவும் உங்களைத் தேடி வரப்போகின்றது. அமைதியான செயல்களால் ஆனந்தம் பெற வேண்டிய வருடம் இது. முத்தான வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழப் போகிறீர்கள். இத்தனைக்கும் காரணம் உங்களுக்கு ஜென்ம சனி விலகப் போவதுதான். இப்போதைக்கு உங்க எதிரிகளோட பலம் அதிகரிச்சு இருக்கிறதைப் பத்தி நீங்க அதிகமா பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பதட்டப்படாம, திட்டமிட்டு நீங்க செய்யக்கூடிய செயல்கள் எல்லாமே உங்களுக்கு வெற்றி கொடுக்கும். பணியிடத்துல துணிவைவிட பணிவுதான் கை கொடுக்கும். உயரதிகரிகள்கிட்ட வீண் வாக்குவாதம் கூடாது. அதிகரிக்கும் பணிச்சுமையை சக ஊழியர்களின் துணையோடு செயல்பட்டால், அவுங்க ஒத்துழைப்பும், உதவியும் கிடைப்பதால் சமாளிக்கலாம். . பித்திசாலியான நீங்க அதை அடிக்கடி தம்பட்டம் அடிச்சுக்க வேண்டாம். தைர்யமும் தன்னம்பிக்கையும் இயல்பாகவே உங்களுக்கு உண்டு; ஆனா, யாரோ சொல்லக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு வீணா மனக்குழப்பம் அடைவதுதான் தப்பு. மார்கழி மாதம் உங்களுக்கு ஜென்ம சனி விலகப் போகிறது. அதற்கிடையில் அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு அமைதிக் குறைவை உண்டக்குமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடங்களில் வரும்போது யோகத்தையே வழங்கும். எனவே குருவின் பார்வை பதியும் குடும்ப ஸ்தானம் புனிதமடைவதால், இதுவரை இருந்து வந்த துயரங்கள் உங்களைவிட்டு விலகும். வருட தொடக்கத்தில் உங்கள் ராசியை குருவும் ராசிநாதனாகிய புதனும் பார்க்கிற்ர்கள். ராசிநாதன் வலிமையிழந்து வருடம் தொடங்குவதால், குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு திடீர் தாக்குதல்கள், வைத்தியச் செலவுகள் உருவாகலாம். யாருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமசனி இருக்கிறதா என்று பார்த்து, அதற்கேற்ப, வ்ழிபாடுகளை மேற்கொண்டால், கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். கரவருடத் தொடக்கத்திலேயே 8.5.2011ல் குருப் பெயர்ச்சி வருகிறது. உங்கள் ராசிக்கு 4,7க்கு அதிபதியான குரு 8ல் வரும்போது நல்ல வாய்ப்புகளை வாரி வழ்ங்குகிறார். அஷ்டமத்துகுரு மற்ற ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தாலும், கன்னி ராசிக்காரர்களுக்கு மட்டும் இல்லத்தில் நல்ல் சம்பவங்களை நடத்தி வைப்பார். ஆனால், அடிக்கடி மன அமைதிக்குறைவு ஏற்படும். தன்னம்பிக்கையோடு செயல்படுவது நல்லது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வீண் விரயங்களை தவிர்க்க வீட்டு பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ளலாம். மே மாத 16ம் தேதியில் ராகு கேது பெயர்ச்சி ஏற்பட இருக்கிறது. 3ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகு முக்கிய திருப்பங்களை உங்களுக்குக் கொடுக்கும். இதுவரை சாதுவாக இருந்த நீங்கள் சாமர்த்தியசாலியாக மாறப் போகிறீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்கள் பாப்பிரிவினையை சுமுகமாக முடித்துக்கொள்வார்கள். 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், உறவினர் பகை அதிகரிக்கலாம் ம்ற்றவர்களை விமர்சிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. இக்காலங்களில் ராகு கேதுக்களுக்கு ஸர்ப்ப தோஷ பரிகாரங்களைச் செய்வது நல்லது . யோக பலம் பெற்ற நாளில் திரு நாகேஸ்வரம் போய் வழிபாடு செய்து தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனி பகவான் 21.12.2011 அன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். “இரண்டில் சனி வந்தால் திரண்ட செல்வம் வரும். “எனவே எதைச் செய்ய நினைத்தீர்களோ அதைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 5,6க்கு அதிபதியாக சனி விளங்குவதால், பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். இதுவரை பிரச்சினைகளையே பார்த்து வந்த நீங்கள் இனி அமைதி காண்பீர்கள்
. நிதிப் பற்றாக்குறை அகலும். வீட்டுல விஷேஷங்கள் வர ஆரம்பிக்கும். சப காரியத் தடைகள் விலகும். வீணாக கற்பனை பயங்களை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டாம். இந்த ராசிப் பெண்களுக்கு பணியிடத்தில் எதிர்பாராத நன்மைகளால் சந்தோஷம் அதிகரிக்கப் பெறலாம். எதிர்ப்புகள் விலகும். ஏமாற்றம் மறையும். சிலருக்குப் பாராட்டும் பதவிகளும் கிடைக்கலாம். உடன் நலத்துல மருந்தே கூட ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால், சுய மருத்துவத்தை அறவே தவிர்த்து விடுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருக்கணும். தொழிலதிபர்களுக்கு நிதிநிலை ஆதாரம் பெருகும். கடல் கடந்த வர்த்தக வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி வெகு சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் ஆரம்பமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் முதலியவை தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்லூரி ,பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் பெறுவார்கள். விருப்பப் பாடம் கிடைக்கும். கடல்கடந்து பணிசெய்து படிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். தயாரித்து முடித்த படங்கள் வெற்றி வாய்ப்பை எட்டும். பழைய ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க நல்ல சந்தர்ப்பம் அமையும். அரசியல்வதிகளுக்கு புகழ் அதிகரிக்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். வாடிக்கயாளர் கூட்டம் அலை மோதும். விவசாயிகளுக்கு அவர்களது நிலங்கள் பொன் விளையும் பூமியாக மாறும். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு எதிர்பார்த்ததவிட அதிகமாகக் கிடைக்கும். பொதுவா சொல்லணும்னா எதிலும் கவனமும் நிதானமாகவும் செயல்படுவது அவசியம். எதிரிகள் பலம் திடீர் திடீர்னு அதிகரிக்கலாம் அதனால புறம் பேசுபவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதேபோல இந்தக் காலக் கட்டத்துல உடல் நலம் சீராக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். கோபத்தை கட்டுப் படுத்துவதும், தியானம், யோகா பழகுவதும் அவசியம். இந்த வருடத்தில் புரட்டாசி மாசத்துல எச்சரிக்கை அவசியம். கோபம் வராமப் பாத்துக்கங்க. யாரோட தனிப்பட்ட விஷயத்துலயும் தலையிடாதீங்க.
பரிகாரம்:-புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் வழிபடுங்கள். லக்ஷ்மி கவசம் பாடுங்கள். தஞ்சை பெரிய கோயில் பிரகதீஸ்வரரையும், அம்பிகையையும் வழிபட்டு வருவதோடு, அங்குள்ள தஞ்சைபுரீஸ்வரர் மற்றும் தஞ்சை கோவில் வராகியையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வரவேண்டும்.இந்த வருடம் ஒருமுறை பஞ்சவடி சென்று அனுமனை வடை மாலை சாத்தி வழிபடுங்கள். இருபுறமும் தேவியருடன் வீற்றிருக்கும் பெருமாளை துளசி மாலை சாத்தி வணங்குங்கள். செழிப்பு மேலோங்கும்.

7. துலாம:-
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து ஆண்டு தொடங்குகிறது. இதுவரை விரயச் சனியின் பிடியில் சிக்கி யிருந்த உங்களுக்கு, இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் இந்த கர வருடம் பிறக்கிறது. வருடப் பிறப்பன்று தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, ராசிநாதனைப் பார்ப்பதால் ஆண்டு முழுவதும் நற்பலன்களை எதிர்பாக்கலாம். இருப்பினும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வருடத் தொடக்கத்திலேயே சனி வக்கிரம் பெறுகிறது. உங்கள் ராசிக்கு 4,5க்குரிய அதிபதியான சனி பகவான் வக்கிர நிலையை அடையும்போது மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்கலாம். கணவன் மனைவிக்கிடையே அனுசரிப்பும் அன்யோன்யமும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் திடீர் விரயங்களும், பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே எதையும் யோசித்து செய்வது நல்லது. சனி பகவான் வழிபாட்டில் முழுக் கவனம் செலுத்துவது நல்லது. ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்கிரம் பெறுகிறார். அதன் பிறகு, மீண்டும் இரண்டு முறை வக்கிரம் பெறுகிறார். இந்தக் கால கட்டத்தில் தாய்வழி ஒத்துழைப்பு குறையும், பங்காளிப்பகை அதிகரிக்கும் . உத்தியோகஸ்தர்களுக்கு இட மாற்றம், இலாகா மாற்றம் உருவாகலாம். 31.8.2011 முதல் 15..12.2011வரை குரு வக்கிரம் பெறுகிறார். அக்காலத்தில் உங்களுக்கு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பலன்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பு, பண வரவு முதலியவை தடையின்றி நடை பெறும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் கை கூடும். அடுத்து வரும் , ராகு, கேது பெயர்ச்சியில்தான் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேணும். இழப்புகள் ஸ்தானம் என்று சொல்லப்படும் எட்டாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால், வினாயகப் பெருமானை வழிபட்டு நிவர்த்தியடையலாம். 8,5,2011ல் வரப்போகும் குருப் பெயர்ச்சியில், குரு உங்கள் ராசியை நேர்பார்வையாகப் பாக்கிறார். இந்த குரு பார்வையினால், எதிர்காலத்தை இனிமையாக்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஏழில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 1,3,11 ஆகிய இடங்களில் பதிவதால், உடல் நலம் சீராகும். படிப்படியாக கடன் சுமை குறையும். உதிரி வருமானம் பெருகும். கூட்டுத் தொழிலுக்கு நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். ஆனால், ஏழரைச் அனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், விரயத்தின் விளிம்புக்கே செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகலாம். எனவே புது முயற்சியில் ஈடுபடுவது நல்லது. மே மாதம் 16ம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஏற்படப்போகிறது. இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகும் ராகு தன வரவைப் பெருக்கினாலும் எட்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவால், செல்வம் ஒரு பக்கம் கரைந்துகொண்டே இருக்கும். யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை முறைப்படி செய்வது நல்லது. இதைத் தொடர்ந்து 21.12.2011ல் சனிப்பெயர்ச்சி வரப்போகிறது. எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கும் ஜென்ம சனி என்பதால், உடல் ஆரோகியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணிகளில் தொய்வு ஏற்படும். பலரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கடிதம் மூலம் வரும் தகவல் மன அமைதியைக் குலைப்பதாக இருக்கும். இந்த ராசிப் பெண்களுக்கு கஷ்டங்கள் விலகும். மணப்பேறும் மகப்பேறும் கைகூடும். ஆடம்பரத்துக்காக இரவல் நகை வாங்கிப் போட்டுக்கிட்டா பிரச்சினையில மாட்டிக்கும்படி ஆயிடும். இந்த வருடம் ஐப்பசி மாதம் கவனமாக இருக்கணும். வீடு, அலுவலகம், பணம் என்று எதிலும் அலட்சியம் கூடாது. தொழிலதிபர்களுக்கு தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் இருட்டு அறையில் குடும்பம் நடத்துவதுபோல் இருக்கும். பணியாளர
களின் ஒத்துழைப்பின்மை, பொருளாதாரச் சரிவு முதலியவைகளைச் சந்திக்க நேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நீக்கம், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள்,பதவி நீக்கம் என்று ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும். புதிய பணி முயற்சி வெற்றி பெறாது. வேணாத பணிமாற்றம், இட மாற்றம் வரும். மாணவர்களுக்கு மதிபெண்கள் குறையும். கெட்ட சகவாசம் அப்படியே பற்றிக்கொள்ளும். கலைஞர்களுக்கு படத் தயாரிப்பில் முட்டுக்கட்டை விழும். கலைஞர்களுக்கு புகழ் மங்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி பறிபோகும். உட்கட்சிப் பூசல் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் குறையும். பணியாளர்களே வியாபாரத்தைக் கவிழ்க்கும் சூழ்நிலை எழும். விவசாயிகளுக்கு விதை ஒன்று போட்டால், செடி ஒன்று முளைக்கும். விவசாயம் பாதிக்கும். தொழிலாள்ர்களுக்கு வேலை பறி போகும். கட்டிடத் தொழிலாளர்கள் விபத்துக்களை சந்திக்க நேரும்.
பரிகாரம்:-வெள்ளிக்கிழமை தோறும் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடவேண்டும். யோக பலம் பெற்ற நாளில் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் உள்ள ஐய்யநூற்றீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் , மாப்பிள்ளை நந்தி, மகிழ மரத்தடி முனீஸ்வரரை வழிபட்டா, நன்மை பயக்கும்.

8. விருச்சிகம்:-
இந்த புத்தாண்டு உங்களுக்குப் பொருளாதார நிலையை உயர்த்தும். லாபஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனியை குரு பார்ப்பதால், பொருளாதாரத்தில் குறைவிருக்காது. வருட தொடக்க நாளில், ஒன்பதுக்கதிபதி சந்திரன் பத்தில் உலா வருவதால், தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். தொழில் வளர்ச்சிக்கு உற்றார் உறவினர்களும், மற்றவர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவார்கள். இரண்டில் ராகுவும், ,எட்டில் கேதுவும் இருப்பதால் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவே வருமானத்தை செலவிடுவீர்கள். குரு மங்கள யோகம் இருப்பதால், கல்யாண கனவுகள் நனவாகும். தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதால், கர வருடம் கைகொடுக்கும் வருடமாக அமையப் போகிறது.செவ்வாய்க்குரிய தலங்களுக்கு சென்று வருவதன் மூலமும் ராகு, கேது பெயர்ச்சிக்காலத்துக்கு முன் சர்ப்ப சாந்தி செய்து வருவதன் மூலமும், வளர்ச்சியை மேலும் கூட்டிக்கொள்ளலாம். உங்கள் ராசிப்படி சகாயஸ்தானம் , சுகஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியாக சனி விளங்குவதால், அந்த ஏழரை ஆண்டுகளும் , சுகங்களும், சந்தோஷங்களும் உங்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். எந்த நாளையும் இனிய நாளாக மாற்றுகிற ஆற்றல் சனீஸ்வர பகவானுக்கு உண்டு. எனவே சனி பகவானை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம். அது மட்டுமல்லாமல், சனியின் ஆதிக்கம் நடைபெறும்போது, வினாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவது நல்லது. செவ்வாய், புதனின் பலத்தைப் பொறுத்து, நீங்க செயல்பட்டல்,, உங்கள் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011ல் குரு பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 2,5க்கு அதிபதியான குருபகவான் ஆறாமிட்த்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்தபடியே அதன் பார்வை 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. பார்வை பலம் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். எனவே குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் இருக்கும். குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், நாடு மாற்றச் சிந்தனைகளளும், நல்ல காரியங்களும் நடைபெற எடுத்த முயர்ச்சி வெற்றி பெறும். ஜீவ ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாத்தபடி உயர்வைக் கொடுப்பார். இட மாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய கூட்டாளிகள் வருவர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். மே மாதம் 16ம் தேதியில் ராகு ஜென்ம ராசியிலும், கேது ஏழாமிடத்துக்கும் வருகிறது. விருச்சிக ராசியானதால், ஜென்ம ராகு நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார். எடுத்த செயல்களில் வெற்றி ,வழக்குகளில் நல்ல திசை திருப்பம் அனைத்தும் ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது சகல பாக்கியங்களையும், மன நிம்மதியைக் கொடுக்கவும், திசை மாறிய வினாயகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது. பயணங்களால் பலன் கிடைக்கும். மங்கலச் செய்திகள் வந்து சேரும். பொது வாழ்வில் புகழ் கூடும். புண்ணிய காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் லாபத்தை அள்ளி வழங்கியிருப்பார். 21.12.2011 முதல் ஏழரைச் சனியாக உலா வரப் போகிறார். சனிப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே வரப் போகும் சனியை வரவேற்றுக் கொண்டாடி, வழிபாடு செய்தால், தரும் சுகங்களை தாராளமாகத் தருவார். தொழிலதிபர்களுக்கு லாபம் குவியும். உங்கள் தயாரிப்புகள் , விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் கொடுக்கும். உத்தியோகஸ்த்ர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தாராளமாகக் கிடைக்கும
. புதிய பணி நயமனம், பணி நிரந்தரம் விரும்பியபடி அமையும். மாணவர்களளதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெறுவார். விரும்பிய பாடம் எடுத்துப் படிக்கலாம். கடல் கடந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றிப்பட வாய்ப்பு தானாகக் கிடைக்கும். புதிய கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு இது ஒரு பொற்காலம். அரசியல்வாதிகளுக்கு , பொதுமக்களிடையே மதிப்பு உயரும். மாற்றுக் கட்சிக்காரர்காரகளும் மதிக்கும் அளவுக்கு உலா வரும் காலம். வியாபாரிகளுக்கு வியாபாரம் விரிவடையும். நல்ல பொருளைக் கொடுக்கிறீர்களோ, கெட்ட பொருளைக் கொடுக்கிறீர்களோ, வாடிக்கையாளர் கூட்டம் உங்களைத்தான் மொய்க்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல், கிடைத்து, சாதனை வீரர்களாக திகழ்வீகள். தொழிலாளர்களுக்கு பதவி உயரும் சம்பளம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடல்நலத்துல இருந்த உபாதைகள் படிப்படியாக சீராகும். அஜீர்ணக் கோளாறும், வயிறு சம்பந்தமான உபாதைகளும் வாட்டலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். நரம்பு உபாதைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, யோகா மூலமாக தீர்வு காண முயலுங்கள். இந்த வருடத்தில் கார்த்திகை மாதம் நீங்க மிகமிக கவனமாக இருக்க வேண்டும். மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் குடும்ப பிரச்சினைகளில் மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம். மனதைக் குழப்பும் வாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் தினமும் துர்க்கையை வழிபடுவது துன்பத்தை ஓட்டும்.
பரிகாரம்:-செவ்வாய்க் கிழமை தோறும்,முருகப் பெருமான் வழிபாடும், பௌர்ணமிதோறும் கிரிவலம் வருதலும் நன்மை பயக்கும். யோகபலம் பெற்ற நாளில் வைரவன்பட்டிக்கு சென்று அங்குள்ள வைரவர் வளரொளி நாதர் வடிவுடையம்மனை வழிபட்டால் துன்பம் விலகும். சுபம் கூடும். ,திருநள்ளாறு, குச்சானூர், பெரிச்சிக்கோயில் போன்ற ஆலயங்களில் வீற்றிருந்து அருள் வழங்கும் சனிக்கு எள் தீபமேற்றி , நீலவண்ண ஆடை அணிவித்து எள்ளோதரை நைவேத்தியமிட்டு வழிபாடு செய்தால், வருங்காலம் நலமாகும்.

9. தனுசு:-
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாயோடு இணைந்து குரு மங்கள யோகத்தை உண்டாக்குகிறார். பத்தில் சனி ,பார் போற்றும் விதத்தில் உங்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். இந்தப் புத்தாண்டில் வந்த வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளும் விதத்தில் சந்திர பலமும் கூடுகிறது. எனவே சந்தோஷமான தகவல்கள் ஏராளமாக வரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது முதலில் 8.5.2011 அன்று குரு பெயர்ச்சி வருகிறது இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இனி ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கப் போவதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். ஐந்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியிலும்,9,11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது கடந்த காலத்தைப் பற்றி இனி கவலை படவேண்டாம் நிகழ்கால தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்காலத்திற்காக தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். குருவின் பார்வை பலம் உங்களுக்கு பக்க பலமாக இருந்து நீங்கள் இரவு பகலாக பாடுபட்டதற்கேற்ப பலனை வரவழைத்துக் கொடுக்கும். அடுத்து, ராகு கேது பெயர்ச்சி மே மாதம் 16ம் தேதி வருகிறது. ராகு ,விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறது. பயணங்களால் பலன் இடைக்கும். தூர தேச அழைப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை உற்பத்தி முதல் குடும்பத்தில் ஒவ்வொரு நல்ல காரியமாக நடை பெற்றுக் கொண்டு வரும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது ,அதிகாரிகளால் உங்களுக்கு ஏற்பட்ட பூசலைப் போக்கும். உத்தியோக மாற்றத்தில் உறுதி செய்யும். ஊதிய உயர்வு கிடைக்கும். பாதியில் நின்ற பணிகள் படிப்படியாக நடைபெற்று முடியும். யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை செய்தால் முன்னேற்றங்கள் படிப்படியாக வந்து சேரும். அடுத்ததாக 21.12.2011ல் வரும் சனி பெயர்ச்சி. இனி, சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் , வரவை அதிகரிகத்துக் கொடுப்பார். எடுக்கும் முயற்சிகள் வெற்றி கொடுக்கும். தொழில் தொடங்குவதில் இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். கட்டடப் பணிகளைத் தொடரலாம். தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். பொருளாதார வள்ர்ச்சி மேலோங்கும். உதிரி வருமானங்கள் பெருகும். தனுசுக்கு தாரமும் தனயனும் வாய்ப்பது அரிது, என்பார்கள். என்வே மூலம், பூராடம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் களத்திர தோஷ நிவர்த்தி பரிகாரத்தை அதற்குரிய தலங்களில் செய்தால் திருமண வாழ்க்கை தித்திப்பாக அமையும். மொத்தத்தில் இது தங்கக் காசு புதையல் எடுக்கும் பொற்காலம். தொழிலதிபர்களுக்கு ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருந்த தொழில் இனி அசுர வேகத்தில் வெற்றிநடை போடப்போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி உயர்வும் இன்னும் அனைத்தும் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களும் உயர்கல்வியும் விரும்பிய பாடப் பிரிவும் கிடைக்கும். கலைஞர்களுக்கு இது வரப்பிரசாதமான காலம். புகழும், விருதுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பொது மக்களிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு தேர்தலில் நிற்கும் வாய்ப்புகளூம் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் செழித்து வளரும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். தொழிலாளர்களுக்கு பணி உயர்வும, வெகுமதிகளும் கிடைக்கும். இந்த ராசிப் பெண்களுக்கு இன்னல்கள் விலகி இனிய வாய்ப்புகள், வசதிகள் பெறக்கூடிய காலக்கட்டம். குழந்
ைகளின் உடல் நலத்துலயும் , தாய்வழி உறவுகள் உடல்நலத்துலயும் அக்கறை அவசியம். மார்பகப் பகுதி உபாதைகள் எதுவும் தெரிஞ்சா ,முறையான மருத்துவப் பரிசோதனை செய்துக்கறது முக்கியம். ஆண்டின் தொடக்கத்திலும், மீண்டும் இரண்டு முறையும் சனி வக்கிரமும், 31.8.2011. முதல் 15.12.2011வரை குரு வக்கிரமும் வருகிறது. இந்த காலங்களில் தன வரவு ஆரோக்கியக் குறைவு முதலியவை ஏற்படும். இந்த வருடம் ஆடி மாதம் வரை நீங்க எதிலும் கவனமா செயல்பட வேண்டியது அவசியம். எச்சரிக்கையா செயல்படவேண்டியது அவசியம்.
பரிகாரம்:-வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குரு தட்க்ஷிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள ஆதி வினாயகரையும் வழிபட்டுவந்தால், பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும்.

10. மகரம்:-
ஆண்டுத் தொடக்கத்திலேயே சுக்ர பலமும் குருமங்கள யோகமும் சேர்ந்து அமைந்ததால், இந்தப் புத்தாண்டில் பொருளாதார நிலை மேலோங்கும். ஆனல், சந்திரனின் அஷ்டம ஸ்தானம் ,ராசிநாதன் சனியின் வக்கிரம் முதலியவை பற்றிக் கவலை வேண்டாம். ஆண்டின் தொடக்கத்தில் நவகிரகங்களில் மூன்று சாதகமாகவும், மற்ற ஆறு இரகங்கள் வழிபட்டால் வளர்ச்சியைக் கொடுக்கும் விதத்திலும், உலா வருவதால், ஆண்டின் தொடக்கத்திலேயே வினாயகப் பெருமானையும், நவகிரகங்களையும் வழிபட்டு வாருங்கள். சந்திராஷ்டமத்தில் ஆண்டு தொடங்குதால்,வரவைவிட செலவு அதிகமாகக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பணவரவு வந்ததும், உடனே பொருளாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வக்கிரசனி மருத்துவ செலவைக் கொடுக்கலாம். வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011ல் குருப் பெயர்ச்சி வருகிற்து.குரு பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல்களையும் வாகனத்தால் தொல்லைகளையும் வழங்குமிடம் தான் என்றாலும், அதன் பார்வை பதியும் இடங்களான 8,10,12 ம் இடங்களுக்குரிய ஆதிபத்தியங்கள் நற்பலன்கள் பெறப்போகின்றன. வருமானம் அனைத்தும் செலவாகிவிட்டதே என்ற கவலை அகலும்விதமாக தொழில் வளர்ச்சி கூடும். தொழிலுக்கு மூலதனம் கிடைக்கவில்லையே என்ற கவலை கூட வேண்டாம். அரசு உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். போட்டியின்றி தொழில்கள் நடக்கும். ஆனாலும், அர்த்தாஷ்டம குரு என்பதால், தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. வீண்பழி ஏற்படாமல் தப்பிக்க பிறரை விமரிக்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் சிலர் உங்களைவிட்டுப் பிரிவர். புதியவர்கள் வந்திணைவர். தென்முகக் கடவுளுக்கு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ சூட்டி சுண்டல் நைவேத்தியமிட்டு குருவைக் கொண்டாடினால், அதன் அருட்பார்வையால், அனைத்து காரியங்களும், துரிதமாக நடைபெறும். அடுத்து, மே மாதம் 16ம் தேதி வரும் ராகு ,கேது பெயர்ச்சியில், ராகு 11ம் இடமான லாப ஸ்தானத்திலும், கேது 5ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகுவைப் போல கொடுப்பவர்களில்லை. இப்போது ராகு அள்ளிக் கொடுப்பார். தொழில் வளம் சிறந்து பணம் வந்துகொண்டே இருக்கும். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். மூத்த சகோதரரால் ஏற்பட்ட முட்டுக்கட்டை அகலும். கேதுவின் ஐந்தாமிட சஞ்சாரத்தால், பூர்வீக சொத்து தகறாறுகள் தீரும். ஆலயத்திருப்பணிகள் செய்வீர்கள். அடுத்து இதுவரை, ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்த சனிபகவான் ,பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போவதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உடல் சோர்வும் மனச் சோர்வும் அகலும். எதிர்பாத்தவர்களுக்கு உத்தியோக உய்ர்வும் ஊதிய உயர்வும் வந்து சேரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலாளர்களுக்கு தொழில் வளம் கூடும். புதிய தொழில் முயற்சி வெற்றிடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் விரும்பியபடி கிடைககும். கடல் கடந்த பணி புரியும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் நினத்ததைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவர். உயர்கல்வி வாய்ப்புகளும் உள்நாட்டில் படிக்க சலுகைகளும் கிடைக்கும் . கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் எடுக்கும் படங்களில் நல்ல லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி உலா வரும் நேரம் வந்துவிட்டது. அடிமட்டத் தொண்டனும் ஆளுயர மாலை பெறுவான். வியாபாரிகள் அதிக லாபம் தரும் பொருளை விற்று நல்ல லாபம் பெறுவார்கள். ராகுவின் சஞ்சாரத்தால், சிலருக்கு கலப்படம்,கறுப்பு மார்க்கெட் பொருள்கள
ை வியாபாபாரம் செய்யத்தூண்டும். பேராசைக்கு அடிமையாகவேண்டாம். ஆபத்தில் முடியும். தொழிலாளர்களுக்கு வாழ்க்கை வசதிகள் பெறுகும். பதவி உயர்வு ,சம்பள உயர்வு முதலியவை கிடைக்கும். உங்கள் உழைப்பு முதலாளிகளின் மனம் குளிர வைக்கும். அதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பெண்கள் ஏமாற்றம் விலகி ஏற்றம் பெறக்கூடிய காலம். வாரிசுகள் வளம் பெற்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கூடி வரும் ஆனால், அது சிறப்பாக நடைபெற உங்க வாக்கில் இனிமை வேண்டும். வழுக்கக்கூடிய இடங்களில் கவனமாகக் கால் பதிக்க வேண்டியது அவசியம். மின்சாதனங்களை உபயோகிக்கும்போதும் எச்சரிக்கை அவசியம். இந்த வருடம் தைமாதம் கூடுதல் கவனமும் நிதானமும் தேவை. எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம். இந்தக் காலக் கட்டத்துல உடல் நலத்துல கவனம் தேவை. நீண்டதூரப் பயணங்களில் இரவு நேரப் பயணங்களில் எதிரில் வரும் வாகனங்களால் ஆபத்து ஏற்படலாம். ஆண்டின் தொடக்கத்திலும்,அதன்பிறகு தைமாதம் மற்றும் பங்குனி மாதத்திலும் சனி வக்கிரம் பெறுவது உடல் நலத்தைக் கேள்விக் குறியாக்கும். 31.8.11.முதல்,15.12.11வர வரை குரு வக்கிரம் பெறுகிறார். 3,12க்கு அதிபதியான குரு வக்கிர காலத்தில் உங்களை முன்னேற்றத்தின் முதல்படிக்கு கொண்டு சேர்க்கும்.
பரிகாரம்:-சனிக்கிழமைதோறும் ஆனைமுகப் பெருமானை வழிபடுங்கள். யோக பலம் பெற்ற நாளில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வயதிற்கேற்ற மாலை சாற்றி வழிபாடு செய்யவும். வளர்ச்சி கூடும்.

11. கும்பம்:-
கர வருடம் தொடங்கும்போதே நீங்கள் அஷ்டமத்து சனியின் பிடியில் இருக்கிறீர்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும, பணிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றாலும், வீண் அலைச்சலும் ,அகால நேரங்களில் சாப்பிடும் சூழ்நிலையும் ,தன்னம்பிக்கை குறைவும் ஏற்படலாம். வருடத் தொடக்கத்திலேயே சனி வக்கிரம் பெறுவதாலும், அதை செவ்வாய் பார்ப்பதாலும். மன நிம்மதி குறையலாம். செவ்வாய், சனி பார்வை ஏற்படும்போதெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குரு பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர ஸ்தானம் புனிதமடைவதால், உடன்பிறப்புகளால் உங்கள் கடன் சுமை குறையும். குருவின் பார்வை பலத்தால் கல்யாணக் கனவுகளும், வீடு கட்டும் கனவுகளும் பலமடையும். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு தொழில் வளத்தைப் பெருக்கும். வேலைப் பளு கூடினாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால், அப்போதைக்கப்போது சுகக் கேடுகள் வந்து அகலும். வருடத் தொடக்கத்திலேயே 8.5.11. அன்று குருப் பெயர்ச்சி வரப் போகின்றது. அதன் பிறகு குருவின் பார்வை பலம் உங்கள் ராசிக்கு 7,9,11ஆகிய இடங்களில் பதிவாகிறது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்யாணக் கனவுகள் கைகூடும். கடல் தாண்டிச் செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.மூன்றில் சஞ்சரிக்கும் குரு உங்கள் முன்னேற்றத்துகு முட்டுக்கட்டையாக இருந்தவர்களை அகற்றும். சில சொத்துக்களை விற்றாலும் உடனே சில சொத்துக்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வருமானம் வரும். தந்தை வழித் தகறாறுகள் அகலும். வீடு கட்டத் திட்டமிடுவீர்கள். அடுத்து மே மாதம் 16ம் தேதி வரும் ராகு, கேது பெயர்ச்சியில் பத்தாமிடத்து ராகு தொழிலை வளப்படுத்தும். கேதுவின் பாதிப்பால் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படும். வாகனப் பழுது செலவுகள் ஏற்படும். காலையில் வரும் வரவு மாலையில் செலவாகிவிடும். நீண்ட தூரப் பயணங்களை யோசித்து செய்வது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது. அதையடுத்து , 21.12.2011ல் வரும் சனிப் பெயர்ச்சி ,உங்களை அஷ்டம சனியிலிருந்து விடுதலையைக் கொடுக்கப் போகும் ஒரு யோகமான பெயர்ச்சியாகும். அதன்பிறகு தொட்டது துலங்கும். தொல்லைகள் விலகும். மணவாழ்க்கையும் மழலைப் பேறும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். துயரங்கள் ஒரு முடிவுக்கு வரும். பணப் புழக்கம் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு நிதி நிலைமையை சரி செய்து கொள்ளுங்கள். நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிரிகள் உதிரியாவார்கள். முக்கிய முடிவுகள் எடுக்குமுன் சூரியனும் குருவும் இருக்கும் நிலையறிந்துதான் எதிலும் இறங்க வேண்டும். அஷ்டமத்திலிருந்து விலகிய சனியை விரும்பிச் சென்று நீங்கள் வழிபட வேண்டியது அவசியம். அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலதிபர்களுக்கு தொழில் முயற்சியில் குழப்பம் அதிகமாகும். வழக்குகளை சந்திக்க வேண்டி வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். அரசு சலுகைகள் ஆறுதல் அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நீக்கம் வரலாம். வீண்பழி சுமக்கும் நேரம். விரும்பாத இடமாற்றம் வந்து சேரும். சேர்ந்து பணி செய்த கணவன் மனைவியர் பிரிந்து பணியாற்ற வேண்டி வரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் இருக்காது .தேர்வில் மதிப்பெண்கள் குறையும். கலைஞர்களுக்கு தோல்வி மேல் தோல்வி; தயாரிப்பில், வினியோகத்தில் தோல்வி என கடன்சுமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு பதவியிறக்கம் ஏற்படும். பொது மக்களிடையே மதிப்பு குறை
ும். வியாபாரிகளுக்கு நாளுக்கு நாள் வியாபாரம் தேயும். வியாபாரம் நலிந்து கடன் பாரமாகும். தொழிலாளர்களுக்கு முதலாளியுடன் சச்சரவு வலுக்கும். வேலை பறிபோகும். வண்டி ஓட்டிகள் , மின்சார வேலை கட்டிட வேலை ஆகிய பணியில் இருப்பவர்கள் விபத்துகளைச் சந்திக்க நேரும்.அனைத்து கஷ்டங்களும் மார்கழியில் வரும் சனிப் பெயர்ச்சியில் தீரும். சனி பெயர்ச்சிக்கு முன்னதாகவே ஒருமுறை திருநள்ளாறு சென்று பகவானைத் தரிசித்துவிட்டு வரவும். ஆண்டின் தொடக்கத்திலும், அதற்குப் பிறகும் இரண்டு முறையும் சனி வக்கிரம் பெறும் காலத்திலும், 31.8.11.முதல் 15.12.11. வரை குரு வக்கிரமும் அடைகிறாகள். அந்த கால கட்டத்தில் எல்லாவற்றிலும் தேக்கமும், தொல்லை தொந்தரவுகளும் பெருகும். திருநள்ளாறு வழிபாட்டுக்குப் பிறகு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் கண்டாமாணிக்கம் அருகில் பெரிச்சிக் கோயில் உள்ளது. அதில் உள்ள வன்னி மரத்தடி சனீஸ்வரர் வழிபாடு நீங்கள் எண்ணியது நடக்க உதவும்.
பரிகாரம்:-சனிக்கிழமைதோறும் விரதமிருந்து சனீஸ்வரர் வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது அவசியம். கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விஷ்ணுவையும், லட்சுமியையும், மாருதியையும் வழிபட்டு வந்தால் வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும்.

12.மீனம்:-
உங்கள் ராசிக்கு குரு அதிபதியாக விளங்குவதால்,ஆண்டின் தொடக்கத்தில் சகட யோகமும் , குரு மங்கள யோகமும் ஏற்படுவதால், சென்ற ஆண்டைக் காட்டிலும் சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது. உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பெற்று விளங்கினாலும் , மாபெரும் கிரகம் சனி உங்கள் ராசியைப் பார்க்கிறது. கண்டகச் சனியாக விளங்கி கவலைகளைக் கொடுக்கும் சனி வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் வாழ்க்கைப் பாதையில் நல்லதைச் செய்யும். ராகு,கேது பெயர்ச்சியும் ஓரளவு நற்பலன்களைத் தரும். இவையெல்லாம் நற்பலன்களைக் கொடுத்தாலும், மார்கழி மாதம் வரப்போகும் சனிப் பெயர்ச்சி அஷ்டம சனியாக அல்லவா மாறப்போகிறது. கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.11 அன்று குருப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. பொதுவாக ராசிநாதனாகவும் பத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். குருவின் பார்வை 6,8,10 ஆகிய இடங்களில் பதிவதால், விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வர். தங்கு தடையின்றி தனவரவு வந்துகொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பப் பிரசினைகள் தீரும். அரசு அதிகாரிகளும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். மே மாதம் 16ம்தேதி ராகு, கேது பெயர்ச்சியாகிறது. ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது. உடன்பிறந்தவர்களும் ஒத்துழைப்பர். 9ல் சஞ்சரிக்கப் போகும் ராகு ஒளி மயமான எதிர்காலத்திற்கு வித்திடுவார். பொன் பொருட்களை வாரி வழங்குவர். கேதுவின் 3 மிடத்து சஞ்சாரம் எந்தக் காரியத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய விடாது. இடையில் தடை ஏற்பட்டு முடியும். அடுத்து 21.12.11. முதல் சனி எட்டாம் இடத்தில் சஞ்சார்க்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 12ம் இட அதிபதியான சனிபகவான், 8ம் இடத்தில் சஞ்சரித்து, விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறார். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கூடுதல் விழிப்புணர்ச்சி இல்லவிட்டால் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் அதன் மூலமாக பலவித நன்மைகளும் கிடைக்கும். மணப்பேறு, மகப்பேறு பாக்கியங்கள் கிடைக்கும் இந்த வருடம் பங்குனி மாதம் எச்சரிக்கை அவசியம். தொழிலதிபர்களுக்கு நலிந்த தொழில் நலமாய் வளரும். நிதிநிலை ஆதாரம் பெருகும். பணியாளர் ஒத்தழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். கணவன் மனைவி சேர்ந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவர். விரும்பிய பாடப்பிரிவு , உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்க்ளுக்கு கடந்த கால தோல்விகளிலிருந்து விடுபடலாம். தயார்ப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் வெற்றிபெறும் காலமிது. அரசியல்வாதிகளுக்கு பொது மக்களிடத்தில்செல்வாக்குஉயரும் மேடையில் பேசும்போது . மாற்றுக் கட்சிக்காரகளின் மனது புண்படும்படி பேச வேண்டாம். இல்லையேல் கல்லெறியை சந்திக்க வேண்டி வரும். வியாபாரிகளுக்கு வீழ்ந்துபோன வியாபாரம் மெல்ல தலை தூக்கும். வாடிக்கையாளர் கூட்டம் உங்கள் பக்கமே திரும்பும். விவசாயிகளுக்கு அதிக மகசூ ல் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு இழந்த பணி மீண்டும் கிடைக்கும். முதலாளி- தொழிலாளி நல்லறவு வளரும்.
பரிகாரம்:- வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தென்முகக் கடவுளை வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் திருக்கடையூருக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று கள்ளவாரணப் பிள்ளையார், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்ட வந்தால், எல்லா நாட்களும் இனிய நாட்களாகும்..

Advertisements