கோடை காலத்தில் திராட்சையின் வரத்து அதிகமிருக்கும்.திராட்சையைக் கொண்டு கோடைக்கு இதமான திராட்சைப் பழச்சாறு[GRAPE JUICE CONCENTRATE]செய்வதெப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் திராட்சைப்பழச்சாறு—-1 lit

சீனி—-2kg

தண்ணீர்–1 lit

சிட்ரிக் ஆசிட்–25 gm

டொனொவின் எசன்ஸ்–15-20ml

செய்முறை:

*நல்ல தரமான பழமாக வாங்கி,நன்கு கழுவி சாறு எடுத்துக் கொள்ளவும்.

*சீனி,தண்ணீர்,சிட்ரிக் ஆசிட் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும்,வடிகட்டி ஆறவிடவும்.

*ஆறியவுடன்,பழச்சாறை கலக்கவும்.

*பிறகு எசன்ஸை ஊற்றி கலக்கவும்.அதிக நாள் வைத்திருக்க நினைத்தால் பிரிசர்வேடிவ்ஸை சேர்க்கலாம்.[preservative-sodium benzoate-2tsp.]

*சுத்தமான பாட்டில்களில் அடைக்கவும்.

*ஒரு பங்கு பழச்சாறுக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி பருகவும்.

diet-b.

Advertisements