வைகோ

வைகோ

1. தேர்தல் திருவிழாவில் எல்லோரும் பரபரப்பாக இருந்த நேரத்தில் வைகோ மட்டும் ஒதுங்கியே இருந்தார். ஆனால் உண்மை நிலை அது இல்லையாம். வெளிப்படையா எதுவும் பேச வேணாமுன்னு சொன்னாலும், தி.மு.க. வை ஆதரிக்கச் சொல்லி , கீழ் மட்டம் வரை ரகசியத் தகவல் அனுப்பியிருந்தாராம். காங்கிரஸ் எதிர்ப்பைக்கூட முழுமையாக செயல்படுத்தவில்லையாம். தனிப்பட்ட முறையில் வைகோவின் ஆதரவை நாடிய காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு உதவினார்களாம். வைகோ போட்டியிடும் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்காரருக்கு வைகோவின் சப்போர்ட் கிடைத்ததாம்.

2. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி ஒருதலைப் பட்சமாக இருந்ததாக தி.மு.க. சைடிலிருந்து புகார் வந்துகொண்டே இருந்தது. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் முன்னோர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டில்தான் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பொருப்பாளரா நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் ஆணையரின் சொந்தக்காரர்களே தங்கியிருக்கிறார்களாம். அந்தத் தேர்தல்ஆணையர் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் அத்தை மகனாம். ” என்னை மீறி அவுங்க எப்படி ஜெயிக்கிறாங்கன்னு பாத்துடுவோம்” னு சவால் விட்டு அந்த சொந்தக்கார ஆணையர் வேலை செய்தாராம். ஒரு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும் தகவல்களை இங்குமங்குமாக பாஸ் பண்ணினாராம். அதனால்தான் ஒரு சைடுக்கு ஓ.கே. ஆன பணப்பட்டுவாடா இன்னொரு பக்கத்துக்கு அடக்கு முறையாத் தெரிஞ்சதாம்.

2. திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த கனிமொழி, தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன கிடச்சுதுன்னு பட்டியலிட்டாராம். அப்போது கூட்டத்திலிருநத ஒருவர், ” அக்கோய், இந்தப் பக்கம் இன்னும் கேஸ் ஸ்டவ் கொடுக்கல.”என்று இடை மறிக்க ,”அண்ணே, இங்கே பக்கத்து கிராமம் வரைக்கும் ஸ்டவ் கொடுத்தது உங்களுக்குத் தெரியுமில்ல அடுத்து உங்க கிராமத்துக்கும் வந்துரும்ணே.மறக்காம உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்க. ” என்று உரிமையுடன் கேட்க “எந்தங்கச்சியே சொல்லிருச்சி.என் ஓட்டு சூரியனுக்குத்தான்” என்று உற்சாகக் குரல் கேட்டதாம், கூட்டத்திலிருந்து.

3. தென்னிநதிய திருச்சபையின் துணைப் பேராயரான ஆப்ரஹாம், மதுரை வந்த ஜெயலலிதவைச் சந்தித்து ‘எங்க ஆதரவு உங்களுக்குத்தான்’ என்று சொல்லிவிட்டு வந்தார். இதையறிந்ததும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருக்கும் திருச்சபையினர் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு இவர் எப்படி ஆதரவு தெரிவிக்கலாம்?’ என கொதித்துப் போய் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி , திருச்சபைக்கு புகார்க் கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம்.

4. தனித் தொகுதியான செங்கவல்லியில் களமிறங்கியிருக்கும் சிவகாமி ஐ.ஏ.எஸ். தலித் மக்கள் மத்தியில் ‘தலித்தான நான் நன்கு படித்ததால்தான் ஐ.ஏ.எஸ். ஆனேன். ஒரு லட்ச ரூபாய் சம்பளத்துடன் 2 லட்ச ரூபாய்வரை அரசின் சலுகைகளை அனுபவித்தேன். இதேபோல தலித் குழந்தைகள் அனைவரும், நன்கு படிக்க வேண்டும். நீங்கள் எனக்கு வாக்களித்தால், நல்ல தரமான கல்வி நிறுவனங்களுக்கு நான் ஏற்பாடு செய்வேன். உங்கள் குழந்தைகளும் நாளை ஐ.ஏ.எஸ்.ஆகும். என டச்சிங்காக வாக்கு கேட்டாராம்.

5. கோவை வடக்கின் தி.மு.க. வேட்பாளரான வீரகோபால், ரத்தினபுரி பகுதியில் ஓட்டு சேகரிக்கச் சென்றார். வீடு வீடாகச் சென்றவர், அ.தி.மு.க. வட்டச் செயலாளரின் வீடு என்பதை அறியாமல் அவர் வீட்டுக்குள்ளும் போனார். உடன் வந்தவர்கள் ‘அண்ணே, இங்க வேண்டாம்; இது அவுங்க தரப்பு வீடு’ என்று வீரகோபாலைத் தடுத்தனர். அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அ.தி.மு.க. வ.செ. “உள்ளே வாங்க. “என வீரகோபாலை கையைப் பிடித்து உரிமையாய் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். “நான் அ.தி.மு.க. காரன்தான். ஆனா, இப்ப உங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறேன். ஏன்னா, போன மாசம் என் பையன் ஹாஜா ஒரு ஆக்ஸிடன்டுல சிக்கிக்கிட்டான். அவனை கலைஞர் காப்பீட்டுத் திட்டம்தான் எங்களுக்கு உயிரோட மீட்டுக் கொடுத்திருக்கு. அதுக்கு நன்றிக் கடனா இப்ப உங்களுக்கு பிரச்சாரமும் பண்ணப் போறேன்” என்று உருக்கமாய் சொன்னவர் அப்போதே தி.மு.க. வீரகோபாலுக்கு ஓட்டுவேட்டையையும் ஆரம்பித்துவிட்டாராம்.

5. கலைஞரின் 12 வது வெற்றியைத் தீர்மானிக்கும் திருவாரூர் தொகுதியில் எதிர்பார்த்த அளவு வேகத்துடன் தேர்தல் வேலைகள் நடக்கவில்லையாம். அந்த மா.செ. தேர்தல் வேலைகளுக்குப் புதுசு என்பதால்தான் இந்த நிலைமை என்று தகவல் தலைமைக்குச் சென்றதால், ராஜ்ய சபா எம். பி. டி.எம்.செல்வகணபதி அங்கு அனுப்பி வைக்கப் பட்டாராம். அதன்பிறகுதான் நிலமை மாறியதாம். கலைஞரின் வெற்றியில் சந்தேகமில்லை என்றாலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் கலைஞரின் 12 வது வெற்றி அமையவேண்டும் என்றும் எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதும் லட்சியமாம். மே 13 தான் பதில் சொல்லணும்.

Advertisements