டப்சி பண்ணு

டப்சி பண்ணு

 

(ஓட்டு போட போறேன் என்று சொல்லி ஓபியடித்துவிட்டு வந்த கணவனிடம் )

ஏங்க , ஓட்டு போட்டுட்டு வந்தேன்னு சொல்றீங்க… ஆனா கையில் மைய காணோம்… கை கலர் அப்படியே இருக்கே…

 

ஏண்டி… நீ கூடத்தான் தினம் தினம் ஃபேர் அண்ட் லவ்லி போடறே.. ஏன் கலர் மாறலன்னு நான் ஒரு நாளாவது கேட்டிருக்கேனா ?

 

—————————–

தலைவரை புரிஞ்சுக்கவே முடியலயே… எல்லாரும் ஓட்டுப் போடணும்கறாரு ஆனா எலக்ஷன் அன்னிக்கு லீவ் விட்டத கண்டிக்குறாரு…

யோவ் அவரு கண்டிக்குறது டாஸ்மாக்குக்கு லீவு விட்டத !

 

————————————

ஏங்க எங்க தேடியும் நம்ம வேட்பாளர் பெயரோ அவர் சின்னமோ காணலீங்க…

அடப்பாவிங்களா… எலக்ஷன்ல ஜெயிச்சுத்தான் பொதுவா வேட்பாளர் மிஸ்ஸிங் ஆவாய்ங்க.. இவன் இப்பவே காணாம போயிட்டானே !

 

————————————–

 

 

 

இந்த பூத்துல மட்டும் நல்ல கூட்டம்…. இந்தப் பகுதி மக்களுக்கு ஜனநாயக கடமை தெளிவா புரிஞ்சுருக்குன்னு நினைக்கிறேன்!

 

யோவ்… நீ வேற இது ஷகிலா ஓட்டு போடற பூத்துயா.. மேடம் ஓட்டுப் போட எப்ப வருவாங்கன்னு வெயிட் பண்றானுங்க !

ஷகீலா shakeela young

————————————–

ஏங்க எல்லாரும் க்யூவில நிக்கிறோம்ல நீங்க மட்டும் ஸ்ட்ரெயிட்டா  ஃபார்வார்ட் போறீங்க !

நான் ஓட்டு போடப் போற வேட்பாளர் ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வார்டுங்க ! ஹி ஹி !

 

——————————

ஏன்  டப்ஸி ஓட்டு போட வந்த அந்த பூத் ஆஃபிசருங்களுக்குள்ள இவ்வளவு சண்டை.. அவங்க க்யூவ தாண்டி வந்ததாலயா?

அட நீ வேற …. டப்சிக்கு யார் மை வைக்குறதுன்னுதான் !

——————————-

 

டாக்டர்… ஓட்டு போட்டு ஏழு நாளாவது… இன்னும் இந்த மை போகவே மாட்டேங்குது !

அதுக்குத்தான் நீங்க போன முறை வந்தப்பவே சொன்னேன்.. வாரத்துக்கு ஒரு முறையாவது நீங்க குளிக்கணும் !

 

————————————————-

ஏன் அந்த நடிகை மட்டும் கடந்த பத்து எலக்ஷன்லயும் ஓட்டு போடறத புறக்கணிக்கிறாங்க?

அவங்களுக்கு பதினெட்டு வயசானத பகிரங்கமா ஒப்புக்க விருமலையாம் !

—————————–

 

ஏன் பதினெட்டு முறை திருமணம் செஞ்ச அந்த நடிகை ஓட்டு போட இவ்வளவு நேரம் எடுக்கறாங்க..

யாருன்னே சூஸ் பண்ண முடியலயாம்… அதான் எல்லா பட்டனையும் அழுத்தறாங்க !

 

————————-

 

ஏங்க நாம வேட்பாளர தேர்தெடுக்கற பட்டன அழுத்துனோன்னயே ஏன் ரெட் லைட் எரியுது ?

அவ்வளவுதான்… இப்பயிலேர்ந்து நமக்கு டேஞ்சர் ஸ்டார்ட் ஆயிடுச்சின்னு சிம்பாலிக்கா சொல்றாங்க !

 

—————————

Advertisements