rajini-cast-his-vote-election

rajini-cast-his-vote-election

 

1. தேர்தல் நாளன்று ரஜினி காந்த் ஓட்டுப் போட வந்த போது ரசிகர்களும் கூடவே வந்தார்களாம். “வருங்கால முதலமைச்சர் வாழ்க!; வருங்கால பிரதமர் வாழ்க!. ” என்று கோஷமிட்டபடியே இருந்தார்களாம். அவரைவிட்டு நகரவேயில்லையாம். ஒன்றும் செய்யமுடியாத கட்டத்தில் ரஜினிகாந்த் , அவர்கள் முன்னிலையிலேயே தன்னுடைய வாக்குரிமையை பதிவு செய்தாராம். வெளியே வந்த ரசிகர்கள் தளபதி ‘இரட்டை இலை’க்கு ஓட்டளித்ததாக சொன்னார்களாம். அவரைப் பார்த்து கூட வந்த ரசிகர்களும் கூட அப்படியே ஓட்டளித்தார்களாம். ஆளும் கட்சியினரின் நண்பரான ரஜினியின் இந்தச் செய்கை அனைவருக்கும் வியப்பளித்ததாம். ரஜினி மீடியாவுக்கு அளித்த பேட்டியிலும் கூட இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம் ‘விலைவாசி உயர்வு’ என்று கூறினாராம். வடக்கில் ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹஸாரே வின் பின் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தாராம்.

2. வெற்றிகொண்டானுக்குப் பிறகு கட்சிக்கு நல்ல பேச்சாளர்கள் இல்லை, என ஆளும் கட்சி நினைக்கிறதாம். அதனால் ம.தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும், நாஞ்சில் சம்பத்தை இழுக்க நினைக்கிறதாம், கட்சி மேலிடம்.  இதற்காக ம.தி.மு.க. வில் இருக்கும் முக்கிய பிரமுகர்களைக் களமிறக்கியுள்ளதாம்.

3. விழுப்புரம் கூட்டத்தில் பேசிவிட்டு , இரவு தங்க வேண்டிய கலைஞருக்கு கடலூரில் ஒரு ட்ராவல்ஸ் பங்களாவோ அரசங்கத்துக்கு தொடர்புடைய விடுதியோ ஒதுக்கப்படவில்லையாம். ஒரே ஒரு அறைதான் இருந்ததாம். முதல் மாடியில் உள்ள அந்த அறைக்கும் முதல்வர் போக முடியாத அளவு லிஃப்ட் சின்னதாம். மற்ற அனைத்து அறைகளிலும் தேர்தல் அதிகாரிகள் தங்கியிருந்தனராம். அவர்களைப் போகச் சொல்ல முடியாதாம். இது தேர்தல் கமிஷன் தரப்பில் சொல்லப்பட்ட பதிலாம். ஆனால், தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்தாலும் முதலமைச்சருக்குரிய மரியாதை தரப்பட்டிருக்கவேண்டும். தேர்தல் பார்வையாளராக வருபவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் போய்த் தங்கவேண்டியதுதானே. அத்தனை பேரும் ஏன் ஒரே இடத்தில் டேரா போட வேண்டும்? இது தேர்தல் ஆணையம் கொடுக்கும் கெடுபிடியில் இன்னொரு வகையா? என்கிறார்களாம் ஆளும் தரப்பினர்.

3. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் பகுஜன் சமாஜ்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் மாயாவதி பேசினார். அந்தப் பொதுக் கூட்டத்தில் 12 அடி உயரத்தில் மேடை. அதற்கு மேல் சிறு மேடை. அதில் மாயாவதி அமர, ஆடம்பரமான சோபா செட் . சற்றுத் தொலைவில், மாநில நிர்வாகிகள் உட்கார பிளாஃஸ்டிக் நாற்காலிகள். மேடைக்கு 20 மீட்டர் தூரம் வரை பாதுகாப்பு அரண். அதற்கு வெளியே வேட்பாள்ர்களுடன் உட்கார தனி மேடை. எந்தப் பக்கமாக கூட்டத்துக்கு வந்தாலும் நுழைவாயிலில் வரவேற்க மெட்டல் டிடெக்டர். இவரது பந்தாவுடன் ஒப்பிட்டால் ஜெ.பந்தாவெல்லாம் தூள்.