தோல் சுருக்கம் போக்க கேரட் மாஸ்க்

தோல் சுருக்கம் போக்க கேரட் மாஸ்க்

 

கேரட் மாஸ்க்:

மூன்று பெரிய கேரட்டுகளை எடுத்துக் கொண்டு நன்கு வேக வைக்கவும். பின் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐந்து தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப் போல பளபளக்கும் உங்கள் முகம்.

தேன் மாஸ்க்:

கேரட் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் தேனை மட்டும் கொண்டும் மாஸ்க் தயாரிக்கலாம்.

சுடுதண்ணீரில் ஒரு துணியை நனைத்து முகத்தை நன்கு கழுவவும். இதன் மூலம் முகத்திலுள்ள அழுக்குகள் அகற்றப்பட்டு துளைகள் திறக்கப்படும். தேனை முகத்தில் தேய்த்து 15 முதல் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் சற்று சூடான தண்ணீரில் கழுவினால் சருமம் பளபளக்கும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விடவும்.

தயிர் ஆரஞ்சு மாஸ்க்:

ஆரஞ்சுப் பழத்தின் கால் பகுதியை சாறாக்கிக் கொண்டு அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்க்கவும். விரல்களால் நன்கு கலக்கவும். பேஸ்ட்போல் ஆனதும் முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்கள் கழித்து
முகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள்.

Advertisements