ரஜினிகாந்த் - கருணாநிதி

ரஜினிகாந்த் - கருணாநிதி

 

1. சமீபத்தில் வெளியாகும் ‘பொன்னர் சங்கர்’ ரின் ப்ரீவியூ ஸ்பெஷல் ஷோவைப் போட்டுக் காட்டினார்களாம். பிரபல நடிகர்களுடன், கலைஞரும் பார்த்து ரசிக்க வந்திருந்தாராம். ஷோவுக்கு வந்த ரஜினி காந்த் பழைய பாசத்துடன் கலைஞரிடம் பேச வந்தாராம். “நீங்க, அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டதா பத்திரிக்கைச் செய்தி வந்திருந்ததே!” என்று கலைஞர் கேட்டதும் நடிகர் தடுமாறிப் போய்விடாராம். ஷோ ஆரம்பித்தவுடன் எழுந்து வெளியே போய் விட்டாராம் ரஜினி.

2. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு, தமிழில் படங்கள் எதுவும் இல்லை என்று வருத்தப்படுகிறார், ரீமா. ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடிப் பார்ப்பதால், தமிழில் படங்களே இல்லையாம். இந்தியில் பிஸியாகிவிட்டாராம். ‘மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதாமே’ என்று கேட்டால், “கடவுளே, எனக்குத் தெரியாம என் கல்யாணத்தை எப்படி ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலை. அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா நானே அதை ஊர் முழுக்க சொல்வேன். அதுவரை பொய்யான தகவல்களை யாரும் பரப்பாமல் இருங்கப்பா” என்கிறார், ரீமா.

3. டோலிவுட்டில் இது கல்யாண சீஸன். சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவுக்கும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா கமினேனிக்கும் விரைவில் கெட்டிமேளம். 22வயது உபாசனா,’பி.பாசிடிவ்’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்தி வருகிறாராம்.

4. மொரீஷியஸ், இலங்கை, தாய்லாந்து, என சுற்றிக் கொண்டிருந்த ‘ரெடி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஓவர்.”மாதுரி தீட்சித்தைப் போன்று மிகவும் திறமையான நடிகை அசின். ” என்று சல்மான்கான் புகழ உற்சாக மிதப்பில் இருக்கிறார்,அசின்.

5. கர்நாடக எழுத்தாளரும் இயக்குனருமான கிரீஷ் கர்னாட் ‘காவிரி’ என்ற பெயரில் படம் இயக்க இருக்கிறார். காவிரி நதிநீர் விஷயத்தில் கர்நாடக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவேன் என்று கிரீஷ் சொல்கிறார். படத்துக்கு இப்போதே எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்து விட்டன.

6. ‘தமிழன்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழில் பிரியங்கா சோப்ரா, மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு பிரியங்காதான் ஜோடி.

Advertisements