முட்டை மஞ்சள் பூச்சு

தேவையான பொருட்கள் :

1 முட்டை மஞ்சள்
1 tsp. பால்
1 tsp கோதுமை முளை (Wheat germ)

செய்முறை :

மூன்றையும் நன்கு பசை போல் கலக்கவும். கண்ணைத் தவிர்த்து முகத்தில் தடவவும். 10-15 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

இந்தப் பூச்சினால் சருமத்திற்கு புரோட்டின், விட்டமின், மினரல்கள் கிடைக்கின்றன.

ஆலிவ் பூச்சு

தேவையான பொருட்கள் :

1 முட்டை மஞ்சள்
1/2 கப் ஆலிவ் அல்லது கார்ன் எண்ணை (Olive or Corn Oil)
மினரல் தண்ணீர்

செய்முறை :

மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகம், கழுத்தில் தடவவும். 15- 20 நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

இது முகப் பொலிவிற்கு மிகவும் நன்று.

பாலாடை பூச்சு

தேவையான பொருட்கள் :

1 முட்டை வெள்ளை
2 tbsp. பாலாடைரீம்

செய்முறை :

முட்டை வெள்ளை, பாலாடை இரண்டையும் மாவு பதத்திற்கு கலக்கவும். முகம், கழுத்தில் தடவி 20 -30 நிமிடம் வைக்கவும். குளிர் நீரில் கழுவவும்.

இது முகச் சுருக்கங்களை நீக்கும்.

பார்லி பூச்சு

தேவையான பொருட்கள் :

3 அவுன்ஸ் அரைத்த பார்லி
1 அவுன்ஸ் தேன்
1 முட்டை வெள்ளை

செய்முறை :

பார்லி, தேன் இரண்டையும் தேவையான முட்டை வெள்ளை சேர்த்து பசை போல் கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10- 15 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும்.

Advertisements