அமலா பால் - விக்ரம்

அமலா பால் - விக்ரம்

 

1. விஜய்,அஜீத் போன்ற பெரிய கதாநாயகர்கள் தீடீர் என்று தங்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்கள். விஜய் ,அஜீத் இருவரும்  தங்கள் சம்பளத்தை ரூ12 கோடியே உயர்த்தி இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ரூ 5 கோடி வாங்கிக் கொண்டிருந்த தனுஷ் தனது சம்பளத்தை ரூ 7.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.
2. படத்துக்குப் படம் நட்சத்திர அந்தஸ்து கூடிக்கொண்டே போகும் ஆர்யா ‘படித்துறை’ என்ற பெயரில் படத்துக்கு பூஜையும் போட்டார். படமும் வளர்ந்தது. படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

 

 

தமன்னா

3. தமிழ் நாயகிகள் இடையே ‘நம்பர் ஒன்’ அந்தஸ்து அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும். நயந்தராவை அடுத்து தமன்னா அந்த இடத்தைப் பிடித்தார். இப்போது தமன்னா இடத்தை அனுஷ்கா பிடித்தார். தமன்னாவுக்கு புதிய பட வாய்ப்புகள் ஒரேயடியாகக் குறைந்ததுவிட்டதாம்.

அமலா பால்

அமலா பால்

4. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் முரளி மகன் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் அமலா பால், ‘இந்தப் படத்தில்தான் முதன்முதலாக நவ நாகரிகப் பெண்ணாக நடிக்கிறேன்’ என்கிறார். ‘விக்ரமுடன் காதல்’ என்ற வதந்தியால், அம்மணி மிகவும் நொந்து போயுள்ளார். “நான்கு நாட்கள்தான் நடித்தேன்” அதற்குள் இப்படியா?” என்று அமலா பால் அலறுகிறாராம்.

meena
5. நடிகை மீனாவின் பெண் குழந்தைக்கு ‘நைனிகா’ என்று பெயர் வைத்திருக்கிறார். ‘நைனிகா’ என்றால் செல்வம் நிறைந்தவள் என்று பொருளாம். சூப்பர் ஸ்டார் தனது மனைவியுடன் சென்று பார்த்தாராம். அதனால் தனது மகளை சந்தோஷமாக ‘எஜமானி’ என்று கொஞ்சுகிறாராம்.

Genelia

6. ஜெனிலியா, கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் தவகால விரதம் மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பில் அசைவம் சாப்பிடுவதில்லை.

trisha

7. நடிகை த்ரிஷா மேக்கப், காஸ்ட்யூம் எல்லாவற்றையும் சரியாக முடித்துக்கொண்டு ஸ்பாட்டில் அரை மணி நேரம் முன்பாகவே வந்து உட்கார்ந்து ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருப்பார். ‘ஷாட் ரெடி ‘ என்றதும், ‘ஐயாம் ஆல்ஸோ ரெடி’என்று உற்சாகமாக கேமரா முன்பு நிற்பாராம்.

Advertisements