ஜெயலலிதா - அம்மு

ஜெயலலிதா - அம்மு

1. அ.தி.மு.க., தே.மு தி.க. ஒரே அணியில் வருவதற்கு உதவி செய்தவர் நடிகரும் எழுத்தாளருமான சோ. ஜெயலலிதாவை சோ அழைக்கும்போது அம்மு என்றுதான் அழைப்பார்.

2. மேற்கு வங்காள தேர்தலில் ஜெயித்து முதல் மந்திரியாகப் போகிறார் என்று மம்தாவுக்கு பலரும் ஆருடம் கணித்துள்ளனர். அவர் தனது தேர்தல் செலவுக்காக தான் வரைந்த ஓவியங்களை விற்று நிதி திரட்டியுள்ளார். 80 லட்ச ரூபாய் வரை நிதி திரட்டிவிட்டார் மம்தா.

3. சேலத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஷாஜஹான் என்ற வேட்பாளர் தனக்கு ஓட்டு போட்டால் ஆளுக்கு ஒரு நானோ கார், செல்போன் , இலவச கேபிள் இணைப்பு., ஜெனரேட்டர் ஆகியவை தருவதாகக் கூறினார். அவரது சொத்து மதிப்போ ஒரு லட்சம்தான். இவ்வளவு இலவசங்களையும் எப்படி தருவீர்கள் என்று கேட்டபோது அலைவரிசை ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டுத் தருவேன் என்று அதிரடியாக அசத்தினார்.

4. அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு வருவார் என்ற செய்தி தெரிந்ததும் , ஆளும் கட்சித் தரப்பில் அவரைத் தடுத்து நிறுத்த கடும் முயற்சி எடுக்கப்பட்டதாம். “தேசிய அளவில் மூன்றாவது அணியில் இருக்கிறேன். அந்தத் தலைவர்களின் கூட்டத்தில் எப்படிக் கலந்து கொள்ளாமல் இருக்க முடியும்? ஐந்து இடங்களில் பேச வருமாறு அழைத்துள்ளார்கள் . அதில் வேண்டுமானால் கலந்து கொல்ளாமல் இருந்து விடுகிறேன் ” என்று சொல்லி விட்டாராம்.

Advertisements