அருண்பாண்டியன்

அருண்பாண்டியன்

 

பேராவூரணி தே.மு.தி.க. வேட்பாளரான நடிகர் அருண்பாண்டியன், ஓட்டுக்குப் பணம் கொடுத்து வாக்காளர்களைக் கெடுக்கக் கூடாது என உறுதியாகச் சொல்லிவிட்டாராம். என்ன சொல்லியும் கன்வின்ஸ் ஆகவில்லையாம். எதிரணியினர் சூப்பராக பணத்தை அள்ளி விட்டனராம்.  காங்கிரஸ் வேட்பாளரும் சுயேச்சை வேட்பாளரும் அவரவர் கணக்குப்படி, வாக்காளர்களைக் கவர் செய்ததாய் சேதி வந்த போது கூட தன் கொள்கையிலிருந்து துளியும் நகரவில்லையாம் நடிகர். இந்தக் காலத்தில் இப்படி ஒரு வேட்பாளரா என கூட்டணி அதிமுக உடன்பிறப்புக்கள் நொந்து போய்விட்டனராம். கொள்கையை விட்டுக் கொடுக்காத  பாண்டியன் ராஜ்ஜியம் பிடிக்கிறாரா பார்ப்போம்…

Advertisements