cute-genelia

cute-genelia

1. மனம் வருந்தும் வகையில் வரும் தன்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் படித்தாலோ, அல்லது தான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலோ வீட்டில் தனியறையில் அமர்ந்து அழுது தீர்த்து விடுகிறார், ஜெனிலியா.

 

2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளம்பரங்களில் தலை காட்டிய ஸ்ரீதேவி படத்திலும் நடிக்கப் போகிறார். அது, பாலிவுட் படம். ‘பா’ இயக்குனர் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே முதன்முறையாக இயக்கும் படத்தில் ஸ்ரீதேவிக்குப் பிரதான ரோல்.

 

3. மார்க்கெட் இழந்த அமீஷா படேலுடன், யுவராஜ் சிங்குக்கு காதல் என்ற கிசிகிசு இப்போது கிளம்பியிருக்கிறது. “ஒரே ஒரு விளம்பரத்தில் சேர்ந்து நடிச்சோம். அதுக்காக இப்படி கிளப்பி விடுறதா? எனக்கு காதல் வரலை. வந்தா சொல்லி அனுப்புறேன்.” என்று மறுக்கிறார், அமீஷா.

 

4. ‘மை எர்த் வேர்ல்ட்’ அழகிப் பட்டம் வென்ற பெங்களூரு பியூட்டி நிகோல் ஃபாரியா, நிஜத்திலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர். தன் சொந்த ஊரில் ஏரிகளைச் சுத்தம் செய்யும் இயக்கம் நடத்தப் போகும் நிகோலுக்கு, ஒரே ஒரு படத்திலாவது ரஜினி ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.

 

5. சினிமாவிலும், வாழ்க்கையிலும் செகண்டு இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் பிரசாந்தின் பிறந்தநாள் பரிசாக ஆடி கார் ஒன்றைப் பரிசளித்தாராம், தந்தை. ஆடிப் போனாராம், மகன்.

 

6. நடிகர் சந்தானம் தற்போது அம்மை நோயினால் தாக்கப்பட்டிருக்கிறார். மூன்று வாரம் ரெஸ்டாம். படத்தின் இயக்குனர்களும், ஹீரோக்களும் வெய்டிங்காம். நாட்கணக்கில் கேல்ஷீட் கொடுப்பவர்களுக்கு மத்தியில் மணிக்கணக்கில் கேல்ஷீட் கொடுக்கும் அளவுக்கு சந்தானம் பிஸியாம்.

 

7. ‘தெய்வ மகன்’ படத்தில் நடிகர் விக்ரம் ஒரு இளைஞனின் தோற்றத்திற்குள்ளிருந்து ஐந்து வயதுக் குழந்தையின் மன நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த கிருஷ்ணன் கேரக்டர் உடல் வ்ளர்ச்சி இருந்தாலும், சிந்தனைத் திறனும், பேசும் தன்மையும் ஒரு குழந்தை அளவில்தான் இருக்குமாம். அதை விக்ரம் வெகு அழகாக வெளிக் கொண்டு வந்திருக்கிறாராம்.

 

8.’விகடகவி’ ங்கற படத்தில் ஹீரோயினா நடிக்கிறாராம், அமலா பால். வெயில் மழைன்னெல்லாம் பார்க்காம, நடிச்சதோட, வெறும் கால்ல வயல் வரப்புகள்ல ஓடினாராம். ஒருநாள் ஷூட்டிங் மாற்றத்தினால்,கார் அனுப்ப முடியாதபோது, பஸ்ஸைப் பிடித்து ஸ்பாட்டுக்கு வந்துட்டாராம்.

 

9. ‘தென்றல்’ தொடரில் ஆட்டோக்காரி கல்யாணியாக வரும் சூசன், சாஃப்ட்வேர் இஞ்சினியரிங்கில் டிப்ளமோ  முடிச்சிருக்காராம்.டி.வி.காம்பயரிங்லேர்ந்து, சீரியலுக்குத் தாவி, சினிமாவுக்கும் இடம் பெயர்ந்துட்டார். ‘மைனா’ படத்தில் கடுப்பேற்றிய ஜெயில் அதிகாரியின் மனைவி. ‘ராரா’ படத்திலும் வில்லியாம் . ‘நாகம்மா’விலும், வில்லி. ஹீரோயின் சான்ஸ் நிறைய வந்தாலும், ‘கோடம்பாக்கத்துல ஹீரோயினுக்கா ப்ஞ்சம்?’ என எண்ணியதால், நெகடிவ் கேரக்டர் பக்கம் பார்வையைத் திருப்பிட்டாராம். வில்லி கேரக்டர்ல பேர் சொல்லும்படி யாரும் இல்லை. அந்த இடம்தான் என் இலக்கு

Advertisements