oil_paintings_impression_lady_on_canvas

oil_paintings_impression_lady_on_canvas

 

அவளிடம் ஒன்று…

ஒரு பட்டாம் பூச்சிக்கு
இறக்கை முளைத்த போது
எப்படி குதித்திருக்கும்
உன்னைப் போன்றா?

மழைத்துளி மண்ணைத்
தொட்டப்போது
எப்படி சிரித்திருக்கும்
உன்னைப் போன்றா?

விண்மீன்களின்
முதல் மொழி உன்னுடையதா?
தட்டான்களின்
ஆட்டம் உன்போன்றதா?

குழந்தைகள் சிரிப்பை
உன்னிடம் கடன் வாங்கிச்
சென்றுள்ளனரா?

என் வீட்டின் பக்கம்
விளையாடும் பறவைகளைக்
காணமுடியவில்லையே
காரணம் நீதானா?

நீதானா?
குறும்பிற்கான உதாரணம்
பேச்சிற்கான வானொலி
வெளிப்பாட்டிற்கான பாவனை

எப்போதாவது
வண்ணங்கள் உன்னிடம்
சண்டை இட்டதுண்டா?

எப்போதாவது
பனிக் கூழ்மம் உன்னைத்
திட்டித் தீர்ததுண்டா?

எப்போதாவது
அலமாரி பொம்மைகள்
அழுது புலம்பியதுண்டா?

கடைசியாக ஒன்று
ஏன் நீ மட்டும்
நீயாய் இருக்கிறாய்?

 

[stextbox id=”alert”]

 

இது நமது வாசக நண்பர் பழனியாண்டி ஜெயபால் நமக்கு அனுப்பி வைத்த கவிதை … நீங்களும் உங்கள் படைப்புகளை  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பலாமே !

[/stextbox]