rajini-stalin

rajini-stalin

1.கமலஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ விஜய் நடித்த ‘குருவி’ , சூர்யா நடித்த ‘ஆதவன்’ ஆகிய படங்களைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது சூர்யா நடிக்கும் ‘7ம் அறிவு’ என்ற படத்தைத் தயாரிப்பதுடன்,’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘மதராஸ பட்டணம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்த நாலு படங்களின் வெற்றி விழாக்கள், மே மாதம் 7ம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. விழாவுக்கு ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். 4 படங்களில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ரஜினிகாந்த் கேடயம் வழங்குகிறார்.

2. புதுமுக நடிகை கார்த்திகா , நடிகை ராதாவின் மகள். ராதாவின் மாடர்ன் ஆர்ட் போல இருக்கிறார். கே. வி. ஆனந்தின் ‘கோ’ படததில் ஒரு ஜர்னலிஸ்ட்டா நடிக்கிறார். எய்ட்டீஸ் ஹீரோ, ஹீரோயின்ஸ் கெட்டுகெதரின்போது , ரஜினி ராதாவிடம் “உன் பொண்ணு படத்தை பத்திரிக்கையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு. கே. வி. நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும். ” என்று வாழ்த்தினாராம். இப்போ இன்டஸ்ட்ரியில் இருக்கும் எல்லா நடிகர்களுடனும் நடிக்கணும். ரஜினியுடனும் நடிக்கணுமாம் –  இதுதான் கார்த்திகாவின் ஆசை!