ரீமா சென்

ரீமா சென்

1. காதல், கல்யாணச் செய்திகளை மறுத்திருக்கும் ரீமாசென் , கமலோடு நடிக்க விரும்புவதை மட்டும் இப்போது வெளியே சொல்லியிருக்கிறார்.

2.தொடர்ச்சியாக தெலுங்குப் பட ஷூட்டிங் இருப்பதால், அமெரிக்காவுக்கு வெகேஷன் போகும் திட்டத்தை 2 மாதங்களாகத் தள்ளிப்போடடு வருகிறாரம், தமன்னா.

3. ‘கொச்சி ஐ.பி.எல்.அணிக்கான 2 நிமிட தீம் சாங் வெளிவந்து பரபரப்பாக விரும்பப்படுகிறது. கேரளத்தின் அழகையும், களரி,கதக்களி முதலிய கலைகளையும் இணைத்துப் படமாக்கிய இதை இயக்ககியவர் பிர்யதர்ஷன். ரீமா கல்லிங்கல் இதில் தீபம் ஏந்தி வருகிறார்.

4. முழுமையாகக் குடும்பத்தை மட்டுமே கவனிப்பது என்ற முடிவெடுத்து முழு நேரக் குடும்பத் தலைவியாக இருந்தார் ஜோதிகா. இப்போது மட்டும் ஜோதிகா நடிக்க முடிவெடுத்ததற்குக் காரணம் , அவர்கள் விளம்பரம் செய்யப் போகும் நிறுவனம்தான், என்கிறார்கள். தம்பதியாக நடித்தால், அதிகமாக ரீச் ஆகும் என்ற நிலையில் அதற்கு மிகப் பொறுத்தமான தம்பதி ஜோடி இவர்கள் மட்டும்தான் என்ற நிலையில் , அதில் நியாயம் இருப்பதாகத் தோன்றவே சூர்யா ஜோ.வை கன்வின்ஸ் பண்ணி, தன்னுடன் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். விளம்பரப் படத்தை இருவரும் மனமொத்து நடித்து முடித்துக் கொடுத்து விட்டார்கள். இதேபோல நியாயமான வாய்ப்புகள் வரப் பெற்றால், ஜோதிகா தொடர்ந்து நடிக்கவாய்ப்புள்ளதாம்.

 

 

sameera reddy

5.’வாரணம் ஆயிரம்’ படத்தில் காலேஜ் பெண் வேடமேற்ற சமீரா ரெட்டி ‘எங்கேயும் காதல்’ படத்திலும் காலேஜ் பெண் வேடம்தான் . 28 வயதிலும் காலேஜ் போவது ஜாலிதானே, என்கிறார் ரெட்டி.

6. ‘ப்ளாக் ஸ்வான்’ படத்துக்காகசிறந்த நடிகை பரிசுபெற்ற நடாலி போர்ட்மேன் இப்போது கர்ப்பமாக இருப்பதால், உணர்ச்சி வசப்பட்டு அழக்கூட் முடியாது என்பதால்,’ நோ மேக்கப் நோ ஷூட்டிங் ‘ என குழந்தைக்காக ஓய்வில் இருக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். காதலர் பெஞ்சமின் மிலிபெடும் அவரும் குழந்தை பிறக்கக் காத்திருக்கிறார்கள்.

padmapriya

7. மலையாளப் படங்களில் பிஸியாக இருக்கும் பத்மப்பிரியா தன் பிறந்த நாளை எளிமையாகப் பெற்றோருடன் மட்டும் கொண்டாடினாராம்.
8. இயக்குனர் மிஷ்கின் ஓநாய்ப் பிரியராம். பட நிறுவனத்தின் பெயரிலும் அதைச் சேர்த்திருக்கிறார். அவரது மேஜையையும் அலங்கரிக்கின்றனவாம், ஓநாப் பொம்மைகள்.

saranya

9. அம்மா நடித்த எல்லாப் படங்களையும் பார்த்து விடுவார்களாம் , சரண்யாவின் இரு மகள்களும்.

katrina kaif

10. மும்பையில் இருக்கும்போது வாராவாரம் ‘ஸ்பா’ செல்வது கேத்ரீனாகைஃபின் வழக்கம். புதினா, கற்றாழை ,ஓட்ஸ் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைதான் அவரது மிளிரும் சருமத்தின் ரகசியமாம்.

11. ‘தில்லாலங்கடி’, ‘ஈசன்’, ‘சீமான்’, ‘பரிமளா திரையரங்கம்’ என்ற படங்களின் நாயகி, லதா ராவ், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, டி.வி.ஸீரியல்களையும் விடாது நடித்து வருகிறார். டி.வி.ஸிரியலான ‘திருமதி செல்வ’த்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements