நமீதா

நமீதா

 

1. நமீதாவுக்கு தன்பெற்றோரை விட தாத்தா மீது தான் ரொம்பப் பாசம். நமீதா நடிகையாவதற்கு ஆதரவு தெரிவிச்சவராச்சே. இதனால், மாதம் ஒரு தடவை சூரத் நகருக்குக் கிளம்பிப் போய் தாத்தாவைப் பார்த்துவிட்டு வருகிறார். இதப் படிச்சுட்டு எல்லா ஜொள்ளு தாத்தாக்களும்  நமிதா தன்னையும் விசிட் பண்ணனும்னு சொல்லக்கூடாது !

2. ‘அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் பண்ணியதால், அந்த விரோதத்தில் கல் வீசியிருக்கிறார்கள்.’ என விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் யாரோ கல் வீசிவிட, விஜய், எஸ்.ஏ.சி. தரப்பு குற்றம் சுமத்துகிறது.  ஆனால், விஜய் பாலவாக்கத்திற்கும், எஸ்.ஏ.சி. அடையாறுக்கும் குடி பெயர்ந்து பல வருடங்கள் ஆனது எல்லோருக்குமே தெரியும். விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடியிருப்பதும் பரவலாகத் தெரியும். அதனால், இந்தக் கல் வீச்சு சந்தேகமாக இருக்கிறது, என்றும் பேசிக்கிறார்கள்.

3. ‘அவன்,இவன்’ படத்தை முடித்து ஆடியோ விழாவையும் நடத்தி விட்டார், பாலா. இந்த விழாவில் பேசிய ஆர்யா ‘படத்துல விஷால், மாறுகண்ணா நடிக்கிறான். இதனால தலை வலிப்பதா சொல்வான். ‘கட்டிங் போட்டுட்டுப் படுறா. தலைவலி சரியாயிடும்னு சொல்வேன். இப்ப அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாம, ‘கட்டிங் விஷாலா மாறிட்டான்.’ என ஆர்யா கலகலக்க வைக்க ‘சத்ய ஜித் ரே வுக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸுக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி ஆர்யா’ என பதிலுக்கு விஷால் கலாய்க்க, ‘ஆர்யாவும் விஷாலும் சேர்ந்துதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரை ஓ.கே. செஞ்சாங்க. ‘என ஆர்யா விஷால் நட்புக்கு பாராட்டு தந்தார், பாலா.

tammanna
 

3. இசை விழாவில் ஆட மாட்டார் தமன்னா, என்பது தமிழ் நாட்டில் மட்டும்தானா? இதுவரை இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டு ஆடியதில்லை. ஆனால், தெலுங்கு நடிகர் நாக சைத்ன்யாவின் பட விழாவில் கலந்துகொண்டு ஆந்திர பட விழாவில் நடனமாடியிருக்கிறார். தமிழ்ப் பட விழாக்களில் ஆடச் சொல்லிக் கேட்டால், மூணு நிமிடத்துக்கு மூணு லட்சம் கேட்கிறாராம். நொந்து போகிறாரராம், தயாரிப்பாளர்.

5. அஜீத்தின் மாமனார் பாபு தலைக்கு ‘கரு கரு’ன்னு ஹேர் டை அடித்திருப்பார், எப்போதும். ஆனா இப்போது வெள்ளை முடியோடு இருக்கிறார். ‘மங்காத்தா’வில் பாதி நரைத்த ஒரிஜினல் ஹேர் ஸ்டைலில் நடிககிறார் அஜீத். ‘ மாப்பிள்ளையே நர முடியோட இருக்கும்போது நான் டை அடிச்சா நல்லாவா இருக்கும்? அதனாலதான், டை போடல.’ எனக் காரணம் சொன்னாராம் நண்பர்களிடம்.

6. அனுஷ்காவின் அம்மா பெங்களூரில் ரெஸ்டாரண்ட் நடத்துகிறார். படப்படிப்பு இல்லாத சமயங்களில் தங்களின் ரெஸ்டாரண்டுக்குப் போகும் அனுஷ்கா திடீரென செஃப்பாக மாறி விதவிதமான அசைவ ஐட்டங்களைத் ஹயார் செய்து கடைக்கு வரும் கஸ்டமர்களை அசத்துவாராம்.

Advertisements