sanuja

sanuja

 

1.உயர்நிலைப் பள்ளியைக் குறிக்கும் பெயருள்ள படத்தின் நாயகி தமிழுக்குப் புதுசு. படம் இன்னும் வெளியாகவில்லை.என்றாலும் நடிகையின் நடிப்புத் திறமையைப் பார்த்து படத்தின் ஃபைனான்ஸியர் அசந்துபோனாராம். “நீ வளர வேண்டிய நடிகை. உன் திறமைக்கு எனது பரிசு ஒரு அபார்ட்மென்ட்.” என வள்ளலாகிவிட்டார் என்கிறார்கள், கோலிவுட்டில். வீடு கொடுத்த வள்ளல்.

 

tamil actor bharath

2. ஊரின் பெயர்களை வைத்து ரவுண்டு வந்து கொண்டிருக்கிற இயக்குனருக்கு சிக்கல். ஆறுமுகனின் ஆறுபடை வீடுகளில் ஒரு பெயருள்ள அவரது படம் தரிசனத்துக்குத் தயார். வானம் படத்துக்குப் பிறகு என்று திட்டமிட படத்தின் நாயகனோ தனது முந்தைய படத்தை வெளிக்கொண்டு வருவதற்காக பரபரத்திருக்கிறார். இரண்டுபடங்க்ளிலும் ஒரே நாயகன் நடித்திருந்தால், இத்தகைய சிக்கல்கள் வரத்தான் செய்யும். சாம்ராஜ்யத்தின் பெயர் கொண்டவரல்லவா, இயக்குனர்! சாணக்கிய மூளை. அடுத்த சொந்தப் படத்திற்கு நீ இல்லை என அல்வா கொடுத்துவிட்டு அனுஷ்காவுக்கு கதை சொல்லியிருக்கிறார்.! ஆஹா வடை போச்சே என்ற வருத்தத்தில் நாயகன்!.

karthika-radha

3.”தமிழ் சினிமாவே ரொம்பவும் மாறிக் கிடக்கு. என் காலத்திலே யாராவது கிசுகிசு எழுதிட்டா விரட்டிப் புடிச்சு கேட்போம். இப்ப என்னடான்னா கிசிகிசு எழுதச் சொல்லி ஆர்டிஸ்ட்டுகளே மேட்டர் சொல்றாங்க.என் மகளுக்கு அப்படிப்பட்ட பப்ளிசிடி வேணாங்க” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்ட முன்னாள் நடிகை பக்கத்தில் இருந்த மகள் கார்த்திகாவைப் பார்த்து”நீ கார்த்திக் சாரின் மகன் கவுதமுடன் நடிக்கணுங்கிறது ஆசை. அவர் ராசியான ஆள். ” என்றார். நீச்சல் உடையில் நடிப்பதற்கு நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட்டும் கொடுத்தாச்சு. “நானே முதல் படத்தில் ஸ்விம் சூட் போட்டிருக்கேனே,” என்கிறார்.

4. அந்த நடிகர் ஓப்பனாவே நமது ஆப்போசிட் சைடுக்கு ஆதரவாக விரல் வைத்துக் காட்டியவர். அவரை வைத்து நமது படங்களின் வெற்றி விழாவைக் கொண்டாடலாமா? அந்த நடிகரால் நமக்கு என்ன ஆகவேண்டியிருக்க்றது?. “என்று கேட்கிறார்களாம், சொந்தத்திலேயெ சிலர். கலை வேற. அரசியல் வேறயாம்.