மழைத்துளி - கவிதை

மழைத்துளி - கவிதை

 

அந்தி மழை

ஒரு நீண்ட துளி
வந்து ஒட்டிக் கொள்கிறது
மின் கம்பியில்…
இலை நுனியில்…
சிறிது சிறிதாக
மண்ணைத் தொடநினைத்து
மனிதனைத் தொட்டுவிடுகிறது
அவன் மயிர் கால்களைப் பிடித்து
கீழிறங்க எத்தணிக்கும்போது
முகத்தில் வழிந்தோட துவங்குகிறது
அது ஒரு சிறுவனின் முகமாகவோ
உழைத்துவிட்டு திரும்பும்
ஒருவரின் முகமாகவோ
பகற் பொழுதை வெறுமனே கழித்துவிட்ட
ஒருவனின் முகமாகவோ
தானே பேசி ஆறுதல்பட்டுக் கொள்ளும்
நடைபாதைக்காரனின் முகமாகவோ
வேகமாக நடையைக் கூட்டும்
தாயின் முகமாகவோ
இம் யாரோ ஒருவரின் முகமாகவோ இருந்திருக்கும்
திடீரென்று பிடித்துவிட்டு
தொடர்ச்சியாக நனைத்துக் கொண்டிருக்கும்
மழை…
வீடு திரும்பா முகங்களுக்குள்
ரணத்தைக் கூட்டிக் கொண்டிருக்கிறது

– ப. ஜெயபால்

 

[stextbox id=”alert”]இது நமது வாசக நண்பர் ப.ஜெயபால் நமக்கு அனுப்பிய கவிதை… நீங்களும் உங்கள் படைப்புகளை moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பலாமே ![/stextbox]

Advertisements