தமன்னா

தமன்னா

1. தமிழில் புதிய படங்கள் ஒப்பந்தமாகாததால், தமன்னா, இப்போது தெலுங்குப் படவுலகில் தஞ்சமடைந்திருக்கிறார். அங்கே, அவர் தனது சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்து விட்டாராம்.

 

சாக்லெட் மும்தாஜ்

 
2. ‘சாக்லட்’, ‘மதுர’ ஆகிய படங்களை இயக்கிய ஆர். மாதேஷ் இப்போது ‘தில்லு முல்லு’ என்ற புதிய படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.  இப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிரபு வீட்டில் 5 நாட்கள் நடந்தது. கடைசி நாளன்று படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் பிரபு விருந்து கொடுத்தார். ”போதும் போதும்” என்னும் அளவுக்கு சைவ ,அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டதாம். டைரக்டர் மாதேஷ் யாரைப் பார்த்தாலும் பிரபுவின் பரந்த மனசைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம்.

keerthi chawla

tejasri

3. கீர்த்தி சாவ்லாவும், தேஜாஸ்ரீயும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செயும் ஒரு பட அதிபரிடம் நட்பாக இருக்கிறார்கள். அந்த நட்புக்கு பட அதிபர் கொடுத்த பரிசு, ரொம்ப பெரிசு. இரண்டு நடிகைகளுக்கும் நசரத் பேட்டை அருகே தலா 5 கிரவுண்டு நிலத்தை பரிசாக வழங்கியிருக்கிறாராம். அவர் தொழில் ரியல் எஸ்டேட்… அம்மணிகள் தொழில்?

4. சாமி உண்மை; சாமியார் பொய். என்ற கருத்தை அடிப்படையாக வைத்து “ஆசாமி” என்ற படம் தயாரிக்கப்பட்டது. கதாநாயகன் கதாநாயகி இல்லாத படம் இது. மக்கள், கோவில்களில் உள்ள கருவறையில் இருக்கும் சாமியை நம்பாமல்,சாமியை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் ஆசாமியை நம்பி ஏமாறுகிறார்கள். பலவிதமான துன்பங்களை அடைந்து இறுதியில், சாமியின் கால்களில் விழுவதுதான் கதை. படத்தில் ஷகிலாவுடன் ,சந்தான பாரதி, பாணு,அனுமோகன், நெல்லை சிவா ஆகியோர் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள்.

Advertisements