Anna_Hazare_fast

Anna_Hazare_fast

 

அன்னா ஹசாரே சமீபத்தில் எங்கு பார்த்தாலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஜூனியர் மகாத்மா என்கிறார்கள். ‘ஜன் லோக்பால்’ என்ற அமைப்பில் 5 பேர் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மீதி ஐந்து பேர் நான் கை காட்டுபவர்களாக இருக்க வேண்டும்,என்கிறார். அவர் குறிப்பிடும் ஐந்து பேரில் சந்தோஷ் ஹெக்டே தவிர மீதி யாரும் உத்தமர் கிடையாது. புனேவைச் சேர்ந்த ஹேமந்த் பாபுராவ் பாட்டீல் ‘அன்னா ஹசாரேவின் என்.ஜி.ஓ. அமைப்பு இதுவரை முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இநத அமைப்பு மகாராஷ்டிர அரசிடம் பணமோசடி செய்துள்ளது. சில நில விவகாரங்களிலும் அதன் தலையீடு இருந்தது.’ என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார். மேலும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மொத்தம் ரூ. 80 லட்சம் வசூல். நான்கு நாள் செலவே ரூ50 லட்சமாம். தேர்தலில் குறிபபிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? அந்த உண்ணாவிரத மேடையில் பாரத மாதாவின் படமும் காவிக் கொடியும் இருந்ததாம். இந்தக் கூத்து போதாதென்று சில நடிகர்கள் வேறு அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார்களாம். இவர்கள் கறுப்புப் பணம் வாங்காமல் நடிப்பார்களா? ஊழல் ஒழிஞ்சிடுமே! எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அதெல்லாம் இருக்கட்டும்; இந்த ‘ஜன் லோக்பால்’ என்ற கமிட்டி இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிமுறையின் கீழ் இந்தக் கமிட்டி அமைக்கப்படுகிறது? சட்டத்துக்கு உட்படாத ஒரு கமிட்டி இது. ஏதோ அடுத்த மகாத்மா போல் காட்டிக் கொள்ளும் அன்னா ஹசாரே மதவாத சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார். இப்படியாகப் போகிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் ஆராய்ச்சிக் கேள்விக் கணைகள்.