rajini vadivelu

 

1. ‘ராணா’ வுக்காக வடிவேலுவை, ரஜினியும் ரவிக்குமாரும் தேர்வு செய்திருந்தார்கள். தேர்தலில் விஜயகாந்த் மீது வடிவேலு நடத்திய தனி மனித தாக்குதல், ரஜினியை ரொம்பவே டென்ஷனாக்கி விட்டதாம். அதனால், வடிவேலு நடிக்க இருந்த கேரக்டரில் இப்போது கஞ்சா கருப்பு.

அவன் இவன்

2. “இதுவரை நான் இயக்கிய ‘சேது’, ‘நந்தா’,’ பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களின் பூஜையின்போது தயாரிப்பாளருடன் சிரிப்பேன். படம் முடியும்போது முட்டிக் கொள்வோம். இந்தப் படம் முடிந்த பிறகும் நானும் தயாரிப்பாளரும் சந்தோஷமாக இருக்கிறோம்.” என்று ‘அவன், இவன்’ பட விழாவில் ஓபன் டாக் உதிர்த்தார், இயக்குனர் பாலா.

3. கூட்டணிப் பேச்சு வார்த்தையை அ.தி.மு.க. ஆரம்பித்த நேரத்திலேயே டி.ராஜேந்தர் போயஸ் கார்டன் போய் தரிசனம் செய்தாராம். அவர் கட்சிக்கு மூன்று ஸீட்கள் என்று பேசப்பட்டதாம். அதன்பின், “ராஜேந்தர் மகன் சிம்பு நடிக்கிற ‘வானம்’ படத்தை தயாரிப்பதே அழகிரியின் மகன் தயாநிதிதான்” என்று அம்மாவின் காதில் போட்டுக் கொடுத்தார்களாம். அப்புறம்தான் கனஜோரக நடந்ததாம், ராஜேந்தருக்கு கல்தா.

 

 

seetha_2767_07

seetha_2767_07

4. கவர்ச்சி பாம் ப்ளஸ் குத்துவிளக்கு நடிகைகளுக்கு ஏற்பட்ட சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சிரிப்பாய் சிரித்தது. சமரசம் நடந்தாலும, பனிப்போர் நீள்கிறதாம். நடிகையின் வீட்டுக்கு யாரவது ஆண்கள் ரகசிய விசிட் செய்தால், போலீஸ் ஸ்டேஷன் போன் அலறுகிறதாம்.
************