jayalalitha_karunanidhi_tamil_nadu_elections-2011

jayalalitha_karunanidhi_tamil_nadu_elections-2011

 

1. கலைஞர் டி.வி.க்கு தேவைப்பட்ட பணத்தை கடனா வாங்கிட்டு அந்த பணம் திருப்பித் தரப்பட்டுவிட்டது என்பது வாதத்துக்கு வைக்கப்படுகிறது. இன்கம் டேக்ஸும் கட்டப்பட்டு விட்டது மட்டுமில்லாமல், எல்லா டீலிங்கும் செக் மூலமே செய்யப்பட்டுள்ளது என்பதால், சார்ஜ் ஷீட் விவகாரங்களை சட்ட பூர்வமா சந்திச்சுக்கலாம் என்று நினைக்கிறார்களாம். மகள் மீது போட்டது பத்தாது; மனைவி மீதும் போட்டிருந்தால், கலைஞரையே (ஜெயித்து வந்து விட்டால்) பதவியேற்க விடாமல் செஞ்சிருப்போமே என்று ஒரு தரப்பு குமுறுகிறதாம்.

2.கூட்டணி ஆட்சிக்கு தயாராயிருக்கும் தி.மு.க. ,ஆட்சியில் பா.ம.க. வுக்கும் ,வி.சி.க்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுதாம். ஆட்சியில் பங்கேற்பதில்லை என்ற கூட்டணிக் கட்சிகளின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லியும் கேட்குதாம், ஆளும் தரப்பு.

3. ஸ்ரீரங்கம் தொகுதி ஒரு முதலமைச்சர் கேண்டிடேட் தொகுதி என்பது நமக்கு ஒன்றும் புது விஷயமில்லை. தான் போட்டியிடுவதற்காக தன்னுடைய பூர்வீகமும் பதுகாப்பானதுமான ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து ஜெயலலிதா தேர்தலில் நின்றார் என்பதும் கூட புது விஷயமில்லை. ஆனால், அதே தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேபாளரான ஆனந்துக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை பார்த்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமானுஜம் பகீர் தகவல் கொடுக்கிறார். ஸ்ரீரங்கத்தில் உதய சூரியன் ஜெயிக்க வேண்டும் என்பது ஒன்றுதான் அவரது குறிக்கோளாக இருந்ததாம். பலவித வியூகங்களை வகுத்து, வார்டு வார்டாகச் சென்று, கடும் களப்பணி ஆற்றியுள்ளாராம். வெற்றி ஆனந்துக்குத்தான் என்று சவால் விடுகிறாராம். தன்னுடைய சவாலுக்குச் சான்றாக பலவித புள்ளி விபரங்களை எடுத்து வைக்கிறாராம். இதென்ன கலாட்டா?

*********