மீனம்

மீன ராசி

மீனம் ராசி

இதுவரை ஜென்ம குருவாக படுத்தி வந்த குரு பகவான் உங்களைப் பாடாய்ப் படுத்தினார். ஏகப்பட்ட பிரச்சினைகள், ஏகப்பட்ட தொல்லைகள் என்ற ஆகாத்தியம், அழிச்சாட்டியத்தையும் காட்டிய குருபகவான்,கொஞ்ச நஞ்ச பாடா படுத்தினார்? பட்டது போதும் என்ற பட்டினத்தாரின் நிலைக்கே போய் விட்டீர்கள். இனிமே,உங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த குரு பகவ்ன் இப்போது வருகிற 8.5.2011முதல், உங்கள் ராசிக்கு இரண்டாமிடதுக்கு வருகிறார். இந்த இரண்டாமிட குரு உங்களுக்கு பலவகையிலும் மகிழ்ச்சியைத் தரப் போகுது. உங்க காட்ல மழைன்னுதான் சொல்லணும். இரண்டாமிடத்துக்கு வந்திருக்கும் குரு அங்கிருந்தபடி உங்க ராசிக்கு ஆறாமிடம், எட்டாமிடம், பத்தாமிடம் ஆகிய இடங்களைப் பார்க்கிறார். உங்க பெயர்,புகழ்,கௌரவம் உயரப் போகுது. தொட்டது துலங்கும். எதிபார்க்கும் இடங்களிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இதுவரை உங்கள் உடல் நலத்தில் காணப்படும். உடல் கோளாறுகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும். இதுவரை டல்லாகவும் மந்தமாகவும் இருந்த நீங்கள், இனி கோதாவில் இறங்க ஆரம்பித்து விடலாம். உங்களுக்கு குருபலமும் வந்து விட்டதால், ஒரு சிலருக்கு கல்யாணம்,குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் பன்மடங்கு உயரப் போகுது. உள்ளபடிக்கே உங்க வருமானம் இரண்டு வழிகளிலிருந்து வரப் போகுது. உங்க தொழில் வியாபாரம் சிறப்பாக நடந்து நல்ல லாபம் ஈட்டித் தரும். அரசாங்க சலுகைகள், உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சூப்பரான காலம். கலைஞர்களுக்கும் கலைத் துறையில் உள்ளவர்களுக்கும் அமோகமான நற்பலன்களை வாரி வழஙகுவார் இந்த இரண்டாமிட குரு. புதிய கான்ராக்ட், ஒப்பந்தம் கையெழுத்தாகும். மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால், மிக நல்ல பலன்களே நடக்கும். உங்களுடைய முயர்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலர் வீடு, நிலம் வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். இப்போது சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபடவும் நேரும்.பண நடமாட்டம் ஜாஸ்தியாக இருக்கும். புதிய நகை, ஆபரணம் கிடைக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீரும். கணவன், மனைவி உறவு சிறந்து விளங்கும். விலை உயர்ந்த பொருள் வீட்டுக்கு வந்து சேரும். விரோதமா இருந்தவங்க கூட நெருங்கி வந்து உறவு பாராட்டுவார்கள். எதிரிகள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்படும். எந்த காரியத்திலும் வெற்றி நிச்சயம். கொடுக்கல் வாங்கல் சிறக்கும். புதிய நண்பர்கள் சேருவார்கள். வ்ரவேண்டியது உடனடியாக கைக்கு வந்து சேரும். இப்படி நல்லது நடந்துகொண்டிருக்கும் வேளையில், 31.8.2011ல் குரு வக்கிர நிலைக்குப் போகிறார். அந்த வக்கிர நிலையில் 25.12.2011வரை இருப்பதால், உங்களுக்கு இந்த காலக் கட்டம் கொஞ்சம் சிரமங்களும் பிரச்சினைகலுமாக இருக்கும். உடல் நலத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் இருக்கும். அப்படியே நேர் மாறான பலன்களாக நடக்கும். வைத்தியச் செலவுகள் வரும் .வருமானம் குறையும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். ஒரு சிலருக்கு அரசாங்க கெடுபிடுகள் ஏற்படும். தேவையிலாத பிரச்சினைகள், அனாவசிய தொல்லைகள் உருவாகும். சுப காரிய நிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து தடைப்படும். எதைத் தொட்டாலும் இழுபறியாக இருக்கும். இதனால், இந்த இரண்டாமிட குருவின் வக்கிர காலம் உங்களுக்கு அவ்வளவா சரிவராதுன்னுதான் சொல்லணும். ஆனால், பிறகு 26.12.2012 முதல் வக்க்ர நிவர்த்தியாகி 15.5.2012 வரை இரண்டாமிட குருவாகி மீண்டும் பழைய நற்பலன்களைத் தருகிறார். இந
்த காலக் கட்டத்தில் தடைகளும் தாமதங்களும் விலகும். சுப காரியங்கள் ஜாம் ஜாமுன்னு நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில், வியபாரம் தொடங்கி, நல்ல லாபம் காணலாம். வரவேலனுக்குடன் வசூலாகும். வருமானம் பெருகும். சிலர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பின் மூலம் கூட்டு வியாபாரம் ஏற்பட்டு லாபமடைவீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து மகிழ்ச்சியான தகவல்கள் வீடு தேடி வரும். கலைஞ்ர்களுக்கும் கலைத் துறையில் ஈடுபட்டவர்களுக்கும் மிகச் சிறப்பான காலமிது. இப்படியாக இந்த இரண்டாமிட குரு பெணகளுக்கு.மாணவர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு,அரசியல்வாதிகளுக்கு என்று அனைத்து தரபபினருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றங்களை வாரி வழங்குகிறார் .இரண்டாமிடத்து குரு வாழ்க்கையில் இதுவரை விட்டதைப் பிடிக்கலாம். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு ஒர் யோகமான குருப் பெயர்ச்சியாகும். ஆனால்,குருவின் வக்கிர காலத்தில் மட்டும் மிகுந்த எச்சரிக்கை தேவை.

 

பரிகாரம்:-

செவ்வாய், வியாழன் அதிர்ஷ்டமான கிழமைகளாகும். கனக புஷ்பராகம்,பவழம் அதிர்ஷ்ட கற்களாகும். பொன் நிறம், சிகப்பு நிறம் அதிர்ஷ்டமான நிறங்களாகும். குரு பகவானையும், ஸ்ரீ முருகனையும் வ்ணங்கி வந்தால், செல்வம் செழிக்கும்.
*********

Advertisements