மகரம்

மகர ராசி

மகர ராசி

உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரித்த குருவால்,நீங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதாவது மூணாமிட குருவின் காலத்தில் எந்த ஒரு காரியமும் நடந்து முடியாம, எல்லாமே பாதியில பாதியில நின்னு கழுத்தறுத்ததுன்னுதான் சொல்லணும். இன்னும் பலவிதத்தில் உபத்திரவப்பட்டீர்கள். இப்போது வரப்போகும் குருப் பெயர்ச்சியால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வருகிற 8.5.2011.ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் பிரவேசிக்கிறார். இந்த நாலாமிட குரு அங்கிருந்து உங்க ராசிக்கு எட்டாமிடம், பத்தாமிடம் பனிரெண்டாமிடம் ஆகிய இடங்களைப் பாவையிடுகிறார். அதனால், இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளும் தொல்லைகளும் மறையும். மனக் குழப்பங்கள் மறைந்து மகிழ்ச்சி காணப்படும். இதுவரை இழந்ததை இனிமே இரண்டு மடங்கா சேர்த்து புடிச்சுடலாம்னு நம்பலாம். வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயரும். வேலை இல்லாம இருந்தவங்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். சிலர் இந்த காலத்தில் புதுசா எதாவது தொழில் தொடங்குவர். சிலர் புது வண்டி வாகனம் வாங்குவர். இப்போது பலதரப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எந்த தடையும் வராது. நாலாமிட குரு உங்களது சுகத்தையும் சௌகரியத்தையும் விருத்தி செய்யாம வுடமாட்டார். தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். புதிய முயர்ச்சியில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். இனிமே நீங்க தொட்டது துலங்கும். உடல் நலத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. புதிய முயர்ச்சிகளில் வெற்றியடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறதுக்கும் அதன் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வரும். பழைய கடன்கள் அடைபடும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கும் சந்தர்ப்பம் வரும். இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் அகலும். வழக்கு , வியாஜ்ஜியம்முன்னு வந்தால் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் பண நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்படி நல்ல நல்ல பலன்களாக நடந்து வரும் வேளையில் 31.8.2012முதல் 25.12.2011வரை குருபகவான் வக்கிர கதிக்கு வருகிறார். இந்த குருபகவானின் வக்கிர சஞ்சாரம் எல்லா விஷயங்களிலும் ஒரு மந்தமான போக்கைக் கொடுக்கும். எந்தக் காரியமானாலும் இழுபறியாகவே இருக்கும்.சட்டுபுட்டுன்னு எதுவும் நடக்காது. உடல் நலமும் கெட ஆரம்பிக்கும். வைத்திய செலவுகளிலிருந்து தப்ப முடியாது. வருமானம் பாதிப்படைவது மட்டுமில்லாமல் வரவேண்டிய பணம் வ்சூலாகாமலும் கழுத்தறுக்கும். வீண் வம்புகளும் தண்டச் செலவுகளும் உங்களை டென்ஷனாக்கும். மற்றபடி மிகுந்த எச்சரிக்கையாகவும் , கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். எதிலும் தடங்கல் ஏற்படலாம் என்பதால்,புதிய முயர்ச்சிகளைத் தள்ளிப் போடலாம். சுப நிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து தட்டிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையெ கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் சிலருக்கு அரசாங்கத்திலிருந்து ஏதாச்சும் தொந்தரவுகள் வரக்கூடும். அலுவலக இடத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் இருக்கும். இவை யாவும் குருவின் வக்கிர காலத்தில் ஏற்படப்போகும் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளை அறிவின் துணை கொண்டு எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அதன்பிறகு குரு வக்கிர நிவர்த்தியான பிறகு, 26.12.2011முதல் 15.5.2012 மீண்டும் வக்கிர நிவர்த்தியாகிவிடும். அதாவது நாலாமிடத்து குரு மறுபடியும் சக்கைப் போடு போட வைக்கும். நற்பலன்கள் பழையபடி தலை தூக்கும். இதுவரை காணப்பட்டு வந்திருந்த அனைத்துவித சுபநிகழ்ச்சிகளும் மீண்டும் பேச்ச
வார்த்தை ஆரம்பிச்சு மளமளன்னு நடந்து முடிய வாய்ப்புகள் காணப்படுகிற்து. எதிர்பார்தத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும் குடும்பத்தில் பிரிந்தவர் ஒன்று சேர்வர். உங்களுக்கும் தகப்பனாருக்கும் இடையில் இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும். குருபகவான் ஜீவன ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், வேலையில், உத்தியோகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இப்போது உங்களது நீண்ட நாளைய கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும். ஏற்கனவே செய்து வந்த தொழில் விருத்தியடையும். திடீர் வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு, பயண அனுகூலங்களும் ஒரு தடையுமின்றிக் கிடைக்கும். கலைத்துறயில் உள்ளவர்களுக்கும், கலைஞர்களுக்கும் வெற்றி வாய்ப்பு தெரியுது. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர், சொந்த வீடு, வாகனம், நிலம், தோட்டம், வண்டி, வாகனம் இப்படி ஏதாச்சும் சொத்து பத்து வாங்குவீர்கள். இப்படியாக நாலாமிட குரு உங்களுக்கு நாலா பக்கமும் நல்லதையேதான் செய்வார். இப்படியே அனைத்து தரப்பினருக்கும், பெண்களுக்கு, மாணவ்ர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு ,அரசியல்வாதிகளுக்கு என்று எல்லா த்ரப்பினருக்கும் நாலமிட குரு நற்பலன்களைத் தருவார். குரு வக்கிர காலத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டியது அவசியம்.

பரிகாரம்:-

புதன் ,சனி அதிர்ஷ்ட கிழமைகளாகும். மரகதம்,வைரம் அதிர்ஷ்டக் கற்களாகும். வெள்ளை, பச்சை , நீலம் அதிர்ஷ்ட நிறங்களாகும். சனி பகவானையும், ஸ்ரீ ஐயப்பனையும் தவறாது வழிபட்டு வந்தால்,நன்மைகள் பன்மடங்காகும்.

Advertisements