கும்பம்

கும்ப ராசி

கும்ப ராசி

கடந்த நாலு மாத காலங்களாக குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரித்து நற்பலன்களைக் கொடுத்து வந்தார். பணவரவு , குடும்பத்தில் சந்தோஷம் ,சுப நிகழ்ச்சிகள் என்று எல்லாவிதமான நல்ல நிகழ்ச்சிகளும் நடந்தேறின.இப்போது, வருகிற 8.5.2011ல் குரு பகவான் உங்க ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது அவ்வளவு நல்லதாப் படலை. இநத காலக் கட்டத்தில் எல்லா விஷயங்களும், ஏடாகூடமாக இருக்கும். உடல்நலத்தில் ஏதாவது தொல்லைகள் வரும். உடம்பு படுத்தி எடுக்கும். இடுப்புவலி, கைகால் குடைச்சல் ப்ளட் ப்ரஷரென்று பலவிதமான தொந்தரவுகள் இருக்கும். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம் ஆனால், குரு பகவான் மூன்றாமிடத்தில் இருந்தபடி அங்கிருந்து உங்க ராசிக்கு ஏழாமிடத்தையும், ஒன்பதாமிடதையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதால், தொல்லைகள் ஒரேயடியாக உங்களை அதல பாதாளத்தில் தள்ளி விடாது. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போச்சுங்குற மாதிரி ஆகிவிடும். அதனால பெரிய அளவுக்கு பிரச்சினைகள் வராது. வந்தாலும் மூணாமிட குருவே உங்களை காப்பாத்தியும் உட்டுடுவாரு. ஆனால், அதே நேரத்தில் உஷாராகவும் இருக்கணும். இருந்தாலும் இந்த காலக் கட்டத்தில் உங்க முயர்ச்சிகளில் முடடுக்கட்டை விழும். உங்க முன்னேற்றத்தில் தடைகளும் தடங்கல்களும் வரும். எப்போதும் குழப்பமான சூழ்நிலையே நிலவும். இப்போதைக்கு தேவையில்லாத பிரச்சினைகள், வீண் வம்புகள் வீடு தேடி வந்து உங்களை டென்ஷனாக்கிடும். எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம் முடிச்சோமுன்னு இல்லாம ஜவ்வுமாதிரி இழுத்துகிட்டே போகும். சில விஷயங்கள் பாதியில நின்னு கழுத்தறுக்கும். குருபலமும் இல்லாமல் போனதனால், சுப நிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து தடங்கலாயிடும். சிலருக்கு அரசாங்கத்திலிருந்து ஏதாவது தொல்லைகள், பிரச்சினைகள்,கெடுபிடிகள் வரும். புகழ், கௌரவம்,அந்தஸ்து, பாதிக்கப்படும் . உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சோ தனைகள் வரும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட்டுன்னு அலைய வேண்டியிருக்கும். உறவினர்கள், நண்பர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஆகாத நேரம். பதவி ஆட்டம் கொடுக்கும். எதிர்ப்புகளும் ஜாஸ்தியா இருக்கும். வண்டி வாகனம் செலவு வைக்கும். பிரயாணத்தின்போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால், விபத்துகளைத் தடுக்க முடியாது. எந்தவிதமான புது முயர்ச்சியும் வேணாம். பணம் ப்ல வ்கையில் விரயம் ஆகும். கொடுக்கல் வாங்கலில் மனஸ்தாபம் வரும். இப்படியாக பலவழியிலும் பிரச்சினையாகவே வ்ந்துகொண்டிருக்கும் வேளையில், குருபகவான், 31.8.2011 முதல் 25.12.2011வரை வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். இந்த நாலுமாத காலங்கள், மிக நல்ல பலன்களாக நடந்து வரும். முதலில் உடல் நலத்தில் காணப்பட்டு வந்த தொல்லைகள் நீங்கும். இந்த சமயத்தில் மத்த கிரகங்களின் நிலவரம் சாதகமாக இருப்பதால், சிறப்பான பலன்களாகவே இருக்கும். புதுசா தொழில், வியாபாரம் ஆரம்பிக்கலாம். வெளி நாட்டுத் தொடர்பால் கூட்டு வியாபாரமும் ஆரம்பிக்கலாம். வேலையில், உத்தியோகத்தில் காணப்பட்டு வந்த பிரச்சினைகள் நீங்கி ,எதைத் தொட்டாலும் உடனுக்குடன் முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைகும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு இவை ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது. புதிய, விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். இப்போது உங்களது நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். பல வகையிலும் நல்ல பலன்களாகவே நடந்து
வரும் வேளையில் 26.12.2011.முதல் 15.5.2012வரை குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். மீண்டும் மூணாமிட குருவாகிறார். மறுபடியும் ஒரு நாலு மாதக் காலங்களுக்கு படுத்தல் ஆரம்பிக்கும். உடல் நலம் கெடும். செலவுகள் கூடும். எதிரிகளின் சூழ்ச்சியால், கெட்ட பெயர், அசிங்கம் ஏற்படும். எல்லா வகையிலும் எச்சரிக்கை தேவை. உத்தியோக விதத்திலும் பிரச்சினையாக இருக்கும் தாங்க முடியாமல் அடிக்கடி லீவு போட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசாங்கத்திலிருந்தும் சின்ன சின்ன தொந்தரவுக்ள் வரும். எந்த காரியமும் சட்டுன்னு முடியாமல் ஜவ்வு மாதிரி இழுக்கும். சொந்த் தொழிலும் பாதிப்படையும். சிலருக்கு விரும்பத்தகாத இட மாற்றம் வரும். வரவேண்டிய பணம் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வருமானம் குறைந்து செலவுகள் அதிகமாகும். இப்படியாக மூணாமிட குருவின் பலன்கள் அனைத்து தரப்பினருக்கும் எச்சரிக்கை மணியாகத்தான் இருக்கும். பெண்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு, மாணவர்களுக்கு தொழிலதிபர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் மூணாமிட குரு நல்லது செய்யாது. பொதுவாகப் பார்த்தோமானால், இது அவ்வளவு நல்ல குருப்பெயர்ச்சி என்று சொல்ல முடியாது . எச்சரிக்கை மணியடித்துக் கொண்டெ இருக்க வேண்டும். குருவின் வக்கிர காலத்தில் மட்டும் கொஞ்சம் ந்ம்மதிப் பெருமூச்சு விடலாம். எங்கும் எதிலும் ஜாக்கிரதையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:-

புதன், சனிக் கிழமைகள் அதிர்ஷ்டக் கிழமைகளாகும். மரகதம், நீலக்கல் அதிர்ஷ்டக் கற்களாகும். சிவபெருமானையும், சனீஸ்வரனையும் வழிபட்டு, நலம் பெறவும்.
*********

Advertisements