விருச்சிகம்

 

விருச்சக ராசி

விருச்சக ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திலிருந்த குரு பகவான் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்து வந்தார். நற்பலன்களாகவே நடந்து வந்தன. இப்போது, வருகிற 8.5.2011ல் வரப்போகும் குருப் பெயர்ச்சியால் குரு பகவான் இப்போது ஆறாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஆறாமிடம் என்பது ரோக, ருண , சத்ரு தானத்துக்கு வருவது விஷேஷமில்லை. உடல் நலத்தில் கொஞ்சம் படுத்தல் இருக்கும். வைத்தியச் செலவுகளைத் தடுக்க முடியாது. இந்த சமயத்தில் தேவையில்லாத பிரச்சினைகளும், வீண் தொல்லைகளும்,அனாவசியச் சிக்கல்களும் வந்து சேரும். இந்த ராசிக்குண்டான மத்த கிரக சஞ்சாரங்களும்கூட சரியில்லை என்பதால், பல வகையில் பிரச்சினைகள் வரும். எச்சரிக்கையும், நிதானமும் தேவை. பணவிரயம் ஏற்படும். கடன் ஏறும். மனதில் இனம் புரியாத கவலைகள் சூழும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் முட்டுக்கட்டை விழும். ஒரு வகையில் ஆறாமிட குரு பல வகையில் சோதனைகளைக் கொடுத்து பின்பு அதில் வெற்றியைக் கொடுப்பார்,என்றும் சொல்லலாம். எதிர்பாராத செலவுகள், வரும். உறவினர்களின் விரோதம், நண்பர்களின் மனஸ்தாபம் ஏற்படும். அனாவசிய கெட்ட பெயர், வீண்பழி சுமத்த சிலர் முயர்ச்சிப்பர். நீங்கள் யாரிடம் பேசினாலும் அது தப்பாத்தான் போகும். நல்லதுன்னு நினச்சி நீங்க எது செய்தாலும் அது மத்தவங்களுக்கு கெடுதலாத்தான் தெரியும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரும். அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்து போகும். எதிரிகள் அதிகமாவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை போகும் நிலை ஏற்படும். எதிலும் அவசரம் கூடாது. எச்சரிக்கை தேவை . இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படக்கூடாது. கவனமாவும் பொறுமையாவும் இருந்தா கிரக நிலைமைகள் மாறும்போது எல்லாம் சரியாகும். இந்த சமயத்தில் யாருக்கும் முன் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எதைத் தொட்டாலும் சிக்கலில் முடியும். அதனால் சிலர் சிக்கலில் மாட்டிட்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். நிதானமா இல்லேன்னா வீண் வம்பை விலை கொடுத்து வாங்கின மாதிரி ஆகிவிடும். மேலும் இந்தக் காலக் கட்டத்தில் உங்க உதவிககு யாரும் வரலேன்னாலும் உபத்திரவத்துக்கு காத்துட்டு இருப்பாங்க. வெளி நாட்டில் வேலை கிடைச்சாக்கூட உடனே போக முடியாதபடி சிலருக்கு தடங்கல் இருக்கும். இப்படியே ஆறாமிட குரு உங்களைப் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், 31.8.2011ல் குருபகவான் வக்கிரமடைந்து 25.12.2011.வரை அதே நிலையிலேயே இருக்கிறார். இது உங்களுக்குச் சாதகமான நிலை. குரு வக்கிரமடையும் காலத்தில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். இதுவரை காணப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். உடல் ஆரோக்கியம் முற்றிலும் சரியாகும். உங்கள் எதிர்பார்ப்பு எதுவானாலும் இப்போது நிறவேறும். மேலும் உங்களுடைய நீண்ட நாளைய எதிர்பார்ப்பு உங்களுடைய நீண்ட நாளைய முயர்ச்சிகளுக்கு இப்போது பலன் இடைக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வீடு தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு உடனடியா வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு இவை கிடைக்கும். தொழில், வியாபாரம், நல்ல முறையில் நடந்து, வருமானம் வரும், பழைய பாக்கிகள் வசூலாகும். இந்த சமயத்தில் அனைத்துவித தடைகளும் விலகி விடும். அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய காரியங்க்ள் உடனுக்குடன் நடந்து முடியும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். வெளிநாட்டுக்குப் போகும் சந்த்ர்ப்பம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்து நல்லபடியாக நடந்து முடியும். நீ
ண்ட நாளைய ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இப்படியாக மகிழ்ச்சியோடு இந்த நாலு மாத காலத்தை தள்ளிடலாம். இந்த வக்கிர கதி முடிந்து 26.12.2011 முதல் குரு மபடி ஆறாமிடத்துக்கு வருவதால், மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்கும். இந்த கால கட்டம் உங்களுக்கு நல்லதில்லை. இந்த வக்கிர நிவர்த்திக் ஆலம் 15.5.2012வரை இருக்கும். இந்த காலக் கட்டம் சோதனையன காலக் கட்டம். முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை இழும். சிலருக்கு உத்தியோகத்தில் விரும்பத்தகாத இட மாற்றம் வரும். அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் தோன்றும். அரசாங்கத்திலிருந்து ஏதாச்சும் தொல்லைகள் வரும். சுப நிகழ்ச்சிகளும் கிட்டத்தில் வந்து தடைப்படும். அரசியலில் உள்ளவர்களுக்கும் ஆட்டம் காணும். பூர்வீக சொத்துக்களிலும் பிரச்சினைகள் ஏற்படும். நல்ல நிலைமைகளிலிருந்தும் சுக போகங்களிலிருந்தும் மாற்றம் வரும். இதே பலன்களைத்தான் அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள், மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள், அர்சியல்வாதிகள் என்று அனைவரும் கொஞ்சம் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டிய காலம் இது. வக்கிர காலத்தில் மட்டும் கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடலாம். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி அவ்வளவு சாதகமானதல்ல.

பரிகாரம்;-

வியாழன், சனிக் கிழமைகள் ராசியான கிழமைகளாகும். சிகப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட கலராகும். பவழம், புஷ்பராகம் அதிர்ஷ்டக் கற்களாகும். பிரதி செவ்வாய்க் கிழமை முருகனை வழிபடுங்கள். துர்க்கைக்கு விளக்குப் போட்டு வந்தால், துன்பம் விலகும்.
*********

Advertisements