கன்னி

கன்னி ராசி

கன்னி ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கி வந்தார். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. சிலருக்கு கல்யாணம் நடந்தேறியது. வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்தீர்கள். இன்னும் பலவித நல்ல காரியங்கள் நிறைவேறின. நல்ல ஆரோக்கியமும் இருந்து வந்தது. பலவிதமான நல்ல நிகழ்சசிகள் நடந்தேறின. ஆனால், தற்போது 8.5.2011ல் வரும் குருப் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இது அவ்வளவு சிறப்பானதல்ல. சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வந்து டென்ஷனாக்கும். சூர்யன் 12க்குடையவன் 8ல் உச்சம் பெறுவது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும். நடவாத காரியங்கள் திடீரென நடக்கும். பேச்சிலும் செயலிலும் புதிய வசீகரமும் ஏற்படும். மேலும் உங்கள் ராசியிலேயே புதன் உச்சம் பெறுகிறார். புதன் சுக்கிரனோடு இணைந்து பூமி யோகத்தையும் பொருளாதார விருத்தியையும் கொடுப்பார். அதே நேரத்தில் புதன் குருவோடு இணைவது நல்லதல்ல. என்றாலும், குரு பார்க்கும் இடங்களைப் பலப்படுத்தி நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவேற, குருப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே யோகபலம் பெற்ற நாளீல் குருப் ப்ரீதியையும், குரு வழிபாடும் செய்வது நல்லது. சொந்த பந்தங்கள் விலகிப் போகும் நேரமிது. ஆனால், அஷ்டம குரு நிம்மதியை அடியோடு குலைத்து விடும் என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை குருபகவான் , கேந்திராதிபதியாகிறார். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்கள் மறைவிடங்களுக்கு வரும்போது வேண்டிய அளவு நற்பலன்களைக் கொடுக்கும் என்பது பொது விதி . அதோடு, ராசியில் சூரியன் செவ்வாயோடு சேர்ந்து நிற்பதன் மூலம் யோக சதயம் ஏற்படுகிறது. அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். அதோடு ஜென்ம சனியின் ஆதிக்கம் வேறு நடபெறுவதால், குருவைத் தொடர்ந்து வழிபட்டால், வளர்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் படுவதால், இந்த ஆண்டிற்குள், அற்புதப் பலன்கள் நடைபெறப் போகின்றன. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படுகின்றது. தாயாரின் உடல் நலம் சீராகும். சுப பண விரயம் ஏற்படும். ஆனால்,அஷ்டம குருவின் சஞ்சாரத்தால் ஆரோக்கிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படும். எட்டாமிட குரு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உங்கள் ராசிக்கு என்று பிரத்தியேகமாக சில யோக சஞ்சாராங்கள் நிகழப்போவதால், நீங்கள் அதிகம் பயந்துபோகத் தேவையில்லை, என்றபோதும், குருப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவுக்கு விஷேஷ ஆராதனைகள் செய்து வரவேற்றால், சில பிரத்தியேகமான பலன்கள் கடைக்கும். அதிக செலவுகளை வரவழைக்கும் என்பதால் நீங்களாகவே சுபச் செலவுகளான, வீடு, மனையை மேம்படுத்தும் செலவை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பணத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளாமல், ஸ்திர சொத்துகளாக வைத்துக் கொள்ளும் வண்ணம் செலவுகளைத் திட்டமிட்டுக் கொண்டால், பணம் அதிகம் விரயமாகாமலிருக்கும். பெட்டியில் பணம் தங்காதே தவிர தேவையான செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிம்மதியைக் கெடுப்பதுபோல வாழ்க்கைத் துணை வழியே ஏதாவதொரு பிரச்சினை வரும். வந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். மேலும் இப்போதைக்கு உங்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் சரிப்பட்டு வ்ராது. சிலருக்கு வேலைக்கே போக முடியாதபடி ஏதாவது பிரச்சனைகள் வந்து அடிக்கடி லீவு போடவேண்டி வரும். இந்த சமயத்தில் தேவயற்ற இட மாற்றம் ஏற்படும். சிலர் குடும்பத்தைப் பிரிய நேரும் . கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு உறவினர்கள
, நண்பர்களால் மனஸ்தாபங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும், வம்பு வழக்குகளும் வரலாம். எந்தவிதமான புதிய முயர்ச்சியும் வேண்டாம். யாரையும் நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. அரசியலில் உள்ளவர்களுக்கு நேரம் சரியில்லை. பெண்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். இந்த நாலு மாதங்கள் ஏற்படும் சில பிரச்சினைகளைப் பார்த்து சோர்வடைய வேண்டாம். 31.8.2011ல் குரு வக்கிரமடைகிறது. இந்த வக்கிர நிலை 25.12.2011வரை நீடிக்கிறது. குருவின் இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். எந்தவித மனக் குழப்பமும் இருக்காது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைப்பட்டு வந்த நல்ல நிக்ழ்ச்சிகள் நடந்தேறும். சொந்த தொழில், வியாபாரம் சிற்க்கும். இந்த சமயத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும். இது நாள்வரை பிரிஞ்சிருந்தவர்கள் இப்போது உங்களைத் தேடி வந்து சேருவார்கள். இப்படியாக குரு வக்கிர காலம் உங்களுக்கு ஒரு வசந்த காலம் போல் இருக்கும். ஆனால், குரு வக்கிர நிவர்த்தியானதும், அதாவது 26.12.2011 முதல் 15.5.2012வரை திரும்பவும் முன்பு கூறிய கெடு பலன்கள் நிகழக்கூடும். சின்னச் சின்ன தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் உங்க முயற்ச்சிகளில் முட்டுக்கட்டை விழும். அரசாங்கத்திலிருந்து ஏதாச்சும் கெடுபிடிகளும் தொந்தரவுகளும் வர வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கும் இதே மாதிரியான பலன்களே நிகழும். பெண்கள் சில காலம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வரும். மற்றபடி உத்தியோகஸ்தர்களுக்கும், மாணவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இதே போன்றே குரு வக்கிர காலத்தைத் தவிர மற்ற காலங்களில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். எச்சரிக்கை மிகமிக அவசியம். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருவால், ஆதாயத்தை மட்டுமே நீங்கள் பெற, வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்:-

உங்களுக்கு வெள்ளி, சனி அதிர்ஷ்டமான கிழமைகளாகும். பச்சை, வளிர் நீலம் இவை அதிர்ஷ்டமான நிறங்களாகும். மரகதம் உங்களுக்கு அதிர்ஷ்டக் கல்லாகும். ஸ்ரீ வெங்கடாசலபதியை வழிபட்டு வாருங்கள். துன்பம் அகலும்.
*********

Advertisements