தனுசு

தனுசு ராசி

தனுசு ராசி

இதுவரை உங்க ராசிக்கு நாலாமிடத்தில் குருபகவான் சஞ்சரித்து வந்தார். நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. ‘புடிச்சு வச்ச புள்ளையார்” மாதிரி அப்படியே இருந்து வந்தது. பெரிய வெற்றி எதுவும் வரலே. அதே சமயம் முயர்ச்சிகளும் ஓரடி கூட முன்னேற்றமில்லாமல் அப்படியே இருந்தது. தற்போது ஐந்தாமிடம் வந்திருக்கும் குரு பகவான் அங்கிருந்து உங்க ஜென்ம ராசியையும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதால், கூடுதலான பலவித நன்மைகள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. இனிமே வசந்தக் காத்து வீசத் தொடங்கியாச்சு. ராசிக்கு ஐந்தாமிடத்தில் வந்த குருவால் இந்தக் காலக் கட்டத்தை நீங்க மறக்க முடியாத அளவுக்கு மிக நல்ல நிகழ்ச்சிகளாக நடக்கும். முதலில் உங்கள் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். முற்றிலும் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மேலும், உங்கள் ராசிக்கு குருபலம் வந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நடக்கும். குடும்பத்தில் நடக்க வேண்டிய கல்யாணம் , கிரகப் பிரவேசம் முதலிய சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். வேலை தேடிக்கிட்டிருப்பவங்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டு வியாபாரத்துக்கும் வழி பிறக்கும். சிலர் புதிய முயர்ச்சியில் இறங்கி வெற்றியடைய வழி ஏற்படும். நீண்ட நாளைய கனவுகளும் ஆசைகளும் இப்போது நிறைவேறும். இப்போது செய்துவரும் தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும். நல்ல லாபம் காணலாம். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கத்திலிருந்து ஆகவேண்டிய காரியங்கள் உடனுக்குடன் நடந்து முடியும். அரசாங்க சலுகைகளும் உதவிகளும் தேடிவரும். பூர்வீக சொத்து பத்து வந்து சேரும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். ஐந்தாமிட குருவால், உங்க புகழ், கௌரவம், அந்தஸ்து, இவை உயரும். கணவன்,மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும். பிரிந்திருந்த தம்பதியர்கூட கருத்து வேற்றுமை அகன்று சேர்ந்திடுவர். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் மறையும். இந்த சமயத்தில் உங்களுக்கு எதிர்பாராத பண வரவு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. உங்க சொல்வாக்கு, செல்வாக்கு இரண்டுமே உயர்ந்து காணப்படும். இப்படி எல்லா வகையிலும் நல்லதாகவே நடந்து கொண்டிருக்கும் வேளையில் 31.8.2011 முதல்,25.12.2011 வரை குருபகவான் வக்கிர கதிக்குப் போகிறார். உங்களுக்கு இந்த காலக் கட்டம் டல்லாகவும் மந்தமாகவும்தான் இருக்கும். இப்போது எதைத் தொட்டாலும் தடங்கல்களும், தாமதங்களும் இடர்படுததும். முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை விழும். சுப நிகழ்ச்சிகள் கிட்டத்தில் வந்து நின்று போகும். உடல்நலத்தில் சின்ன சின்னத் தொந்தரவுகள் ஆரம்பித்து வைத்தியச் செலவுகள் ஏற்படும். புதிய முயர்ச்சிகளில் இறங்கவேண்டாம். வீண் சிக்கல்கள், வீண் வம்புகள் வீடு தேடி வரும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டுப் போவும். எந்தப் பக்கம் பார்த்தாலும் இடிக்குதுன்னு சொல்லும்படியான நேரம். இந்த நிலைமை நாலு மாதங்களுக்குப் பிறகு மாறிடும். 26.12.2011 முதல் 15.5.2012 வரை குரு பகவான் வக்கிர நிவர்த்தியாகி விடுகிறார். நிலைமை தலைகீழா மாறிடும். மீண்டும் வசந்த காலம் ஆரம்பமாகிடும். தொட்டது துலங்கக்கூடிய காலமிது. மறுபடியும் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் சுபமாக நடந்தேறும். இதுவரை உட்டதை இப்ப இரண்டு மடங்கா புடிச்சிடலாம். வர வேண்டிய பழைய பாக்கி நீங்க கேட்காமலேயே உங்க வீடு தேடி வந்து சேரும். தொழில் ரீதியாகக் கணப்பட்ட போட்டி பொறாமை அனைத்
ும் விலகிவிடும். சொந்த வீடு, நிலம் , வண்டி, வாகனம் வாங்கும் யோகம் வரும். கலைத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்களுக்கு படு சூப்பரான நேரம்.அரசியலில் உள்ளவங்களுக்கு புது பதவி ஒண்ணு கிடைக்கும். நீண்ட நாளைய மனக்கவலைகள்,மனக் குழப்பங்கள் தீரும். வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொள்வதற்கும், பிரயாணத்தால் ஆதாயம் அடையவும் வாய்ப்புகள் அமையும். இதேபோன்ற பலன்கள் அனைத்து துறையினருக்கும், அதாவது, பெண்களுக்கு, மாணவர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு என அத்தனை பேருக்கும் மேற்கூறப்பட பலன்கள் பொருந்தும். அதாவது குரு வக்கிர காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் சூப்பரான பலன்களாக இருக்கும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சிற்ப்பான காலமாக இருக்கும். குரு வக்கிர காலத்தில் மட்டும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:-

செவ்வாய், வியாழன் அதிர்ஷ்டமான கிழமைகளாகும். பொன்னிறம், மஞ்சள் நிறம் இவை அதிர்ஷ்டமான நிறங்களாகும். கனக புஷ்பராகம் அடிர்ஷ்டக் கல்லாகும். ஆலங்குடி சென்று குரு பகவானை வணங்கவும். முருகனையும் விடாது பிராத்திக்கவும். நல்லது நடக்கும்.
*********

Advertisements