துலாம்

துலாம் ராசி

துலாம் ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திலிருந்த குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்க வில்லை . மாறாக பலவித அலைக்கழிப்புகள் இருந்து வந்தது. வைத்தியச் செலவுகள், பணக்கஷ்டம், பிள்ளைகளைப் பத்தின கவலைகள், கடன் தொல்லைகள் என்று ஒன்று மாற்றி ஒன்று வந்து உங்களை ஆட்டிப் படைச்சிட்டே இருந்தது. ஆனால், இப்போது 8.5.2011 அன்று வருகிற குருப் பெயர்ச்சி, உங்களுக்கு மிகமிக விஷேஷம்னு சொல்லணும். ஏழாமிடத்துக்கு வரப் போகும் குருபகவான் மிக நல்ல பலன்களைத் தரப் போகிறார். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். வசந்தக் காத்து வீசத் தொடங்கியாச்சு. இழந்ததையெல்லாம் இரண்டு மடங்கா மீட்கப் போறீங்க. உடல் ஆரோக்கியம் சீரடையும். உங்கள் முயர்ச்சிகள் இப்போது வெற்றியடையும். இதுவரை தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடந்தேறும். சிலருக்கு கல்யாணப் பிராப்தம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடும் நபர்களுக்கு உடனடியா வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வேண்டிய இட மாற்றம் முதலியவை இடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பிரயாண ஆதாயம் உண்டுன்னுதான் சொல்லணும் சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டு வாணிகத்தில் சிறந்தோங்குவர். மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழில், வியாபாரம் முதலியவை செழித்து வரும். வர வேண்டிய பழைய பாக்கி வசூலாகும். இந்த ஏழாமிடத்து குரு அங்கிருந்து லாபஸ்தானம், ஜென்ம ராசி, மூன்றாமிடம் ஆகிய இடங்களைத் தனது ஐந்தாம் பார்வை, ஏழாம் பார்வை. ஒன்பதாம் பார்வை மூலமாகப் பார்வையிடுவதால் மேலும் பல வகையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஒரு சிலர் சொந்த வீடு, நிலம், தோட்டம் இப்படி ஏதாச்சும் வாங்கிப் போடுவதற்கும் சந்தர்ப்பங்கள் வரும். இனிமேல் எதிலும் தடைகள் வர வழியில்லை. திடீர் பண வரவு வரும். வழக்கு வியாஜ்ஜியம்ன்னு ஏதாவது வந்தால் வெற்றி நிச்சயம். சிலருக்கு பூர்வீகச் சொத்து தேடி வரும். அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய காரியங்கள் சுலபமாக முடியும். இப்போது அரசியலில் உள்ளவர்களுகு அமோகமான ராஜ யோகம் காத்திருக்கிறது. அதாவது பெரிய பதவி ஒன்று உங்களைத் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் விஷேஷமான காலமிது. வாழ்க்கைத் தரம் பெருமளவு உயரும். திடீர் உயர்வுகள் ஏற்படும். குடும்பத்தில் ஏற்கனவே இருந்து வந்த குழப்பம் தீரும். புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும். ஆடை ஆபரணச் சேர்க்கை வரும். பெண்களால் உதவி கிடைக்கும். பிரிந்திருந்த கணவன்,மனைவி ஒன்று சேர்வர். இழந்த பணம், நகை அத்தனையும் இரு மடங்கா சம்பாதிச்சுடலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளார்களுக்கு நல்ல முன்னேற்றம் தெரியும். இப்படியாக, நற்பலன்களாகவே ந்டந்து வரும் வேளையில், 31.8.2011முதல்,25.12.2011வரை குரு வக்கிரமடைகிற்து. இப்போது நிலமை தலை கீழாக மாறிவிடும். இந்த நாலு மாத காலங்கள் மந்தமாகவும் டல்லாகவும் இருக்கும். உடல் நலம் கெடும். வைத்திய செலவுகள் வரும். சுப நிகழ்ச்சிகள் தடைப்படும். எதைத் தொட்டாலும், தடங்கல்கள், தாமதங்கள் என்று சாதகமற்ற பலன்களாகவே நடைபெறும். எந்த புது முயர்ச்சியிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தள்ளிப் போடுவதுதான் சிறந்தது. செலவுகள் கூடுதலாகும். வருமானம் குறையும் . தேவையில்லாத பிரச்சினைகள், வீண்தொந்தரவுகள் உங்களைத் தேடிவந்து டென்ஷனாக்கும். எந்தக் காரியமும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். இந்த சமயத்தில் பிரச்சினைகள் பல ரூபத்தில் வந்து டென்ஷனாக்கும். ஆனால், இவை யாவும் பிறகு, 26.12.2011முதல் 15.5.2012வரையுள்ள
ாலத்தில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து , மீண்டும் ஏழாமிடத்துக்கே வந்து விடுகிறார். இந்தக் கால கட்டததில், மறுபடியும் சூப்பரான யோக காலம் ஆரம்பித்து விடும். அனைத்து விதமான தடைகளும், தாமதங்களும் தானாகவே விலகி விடும். உடல் நலத்தில் காணப்பட்டு வந்த சின்ன தொந்தரவுகூட விலகி விடும். இந்த சமயத்தில் ஏதாவது புது முயர்ச்சியில் இறங்கி வெற்றி பெறும். சொந்த வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். புது வண்டி வாகனம் வாங்குவீர்கள். வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டு ,வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலையும், வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ,ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். இப்படியான நல்ல பலன்கள் பெண்களுக்கு, மாணவர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு, தொழிலதிபகளுக்கு , அரசியல்வாதிகளுக்கு என்று அனைத்து தரப்பினருக்கும் நல்ல பலங்களே நிகழும். குரு வக்கிர காலத்தில் மட்டும் சோதனையான காலம். குரு வக்கிர நிவர்த்தியானதும், மீண்டும் நற்பலன்கள் தலை தூக்கும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி யோகமான குருப் பெயர்ச்சியாகும்.

பரிகாரம்:-

புதன், சனி அதிர்ஷ்ட கிழமைகளாகும். மரகதம்,வைரம், அதிர்ஷ்டக் கற்களாகும். பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட நிறங்களாகும். பிரதி வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ மகா லட்சுமியை வணங்கி வர , நல்லது நடக்கும்.
********

Advertisements