சிம்மம்

சிம்ம ராசி

சிம்ம ராசி

குரு வக்கிர காலத்தில் உங்க முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை விழக்கூடும். சுப காரியம் எதுவானாலும் கிட்டத்தில் வந்து தடைப் படும். தொடங்கிய கரியங்கள் அனத்தும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும். மற்றும் இந்த சமயத்தில் உடல் நலத்திலும் ஏதாவது தொந்தரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். தொந்த தொழில், வியாபாரம் டல்லடிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேராது. பணமுடை ஏற்படும். அரசாங்கத்த்லிருந்து ஏதாவது தொந்தரவுகள் ஏற்படும். எந்த புது முயற்ச்சிகளையும் ஒரு நாலு மாதத்துக்கு தள்ளிப் போடுவது நல்லது. இப்படியான விரும்பத்தகாத பலன்களை குரு பகவானின் வக்கிர காலத்தில் சந்தித்தாலும், 26.12.2011 முதல் 15.5.2012 வரை குரு வக்கிர நிவர்த்தி அடைந்து படு சூப்பரான பலன்களை மறுபடியும் தரப் போகிறார். இப்போது சனி பகவானும் பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு மூன்றாமிடத்துக்கு வருவதால், இந்த கால கட்டம் மிக சிறப்பான யோக காலமாக இருக்கும். ராகு, கேது பெயர்ச்சியும் நல்ல இடத்துக்கு வந்து, அனைத்து கிரகங்களும் சொல்லி வைத்தது போல் நல்ல இடங்களில் சஞ்சரிப்பதால், எல்லாவிதமான தடைகளும் விலகி வெற்றி குவியும். யோக காலம் வந்துட்டதனால எல்லா திசைகளிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கும் ஏற்கனவே கூறியதுபோல சூப்பரான பலன்களாக இருக்கும். குரு வக்கிர காலம் மட்டும் எதிர்மறையான பலன்களே நிகழும். பெண்களுக்கு மட்டுமின்றி, உத்தியோகஸ்தர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் மாணவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குரு வக்கிர காலம் நீங்கலாக, மற்ற நேரங்களில் நீங்களே எதிபார்க்காத அளவில் யோகமும் அதிர்ஷ்ட பலன்களும் கொட்டிக் குவியும். குரு பகவானின் வக்கிர காலத்தில் மட்டும், எச்சரிக்கை மிகவும் அவசியமாகிறது.

பரிகாரம்:

 

ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகள் அதிர்ஷ்டக் கிழமைகளாகும். மஞ்சள் நிறமும், பொன்னிறமும் அதிர்ஷ்ட வண்ணங்களாகும். மாணிக்கமும் பவழமும் அதிர்ஷ்டக் கற்களாகும். உங்களுககு அதிர்ஷ்டக் கடவுள் சத்ய நாராயண பெருமாளாகும் .இடைவிடாமல் வழிபாடு செய்து சுபிட்சம் பெறவும்.
*******

Advertisements