மேஷம்:-

மேஷ ராசி

மேஷ ராசி

08.05.2011  முதல் 15.05.2012 வரை

கடந்து போன வருடத்தில் விரயத்தில் இருந்த குருபகவானால், சேமிப்பு என்பதே இல்லாதது மட்டுமல்ல; செலவும் அளவு கடந்து திணறடித்தது.அந்த நிலைமை 8.5. 2011ல் வரப்போகும் குரு பகவான் மாற்றுகிறார். இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு ஜென்ம குருவாக வருவதால், இதுவும் கூட விஷேஷமில்லைதான் என்று சொல்ல வேண்டியதாகிறது. அதாவது 8.5.2011முதல் 31.8.2011வரை உள்ள நாலு மாதக் காலங்களில் கஷ்டங்களை அனுபவித்தாக வேண்டும். ஆனால், உங்கள் ராசியிலிருக்கும் ஜென்ம குரு ஐந்தாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுவதால், பெரிய பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லாமல், குறைந்த அளவில்தான் பிரச்சினைகள் இருக்கும். எந்த ஒரு விஷயமானாலும் பெரிய அளவில் உங்களைப் பாதிக்காது. ஜூன் 9ம் தேதியன்று ஏற்படும் ராகு,கேது பெயர்ச்சியில் கேது 2 ம் இடத்துக்கும், ராகு 8 ம் இடத்துக்கும் பிரவேசம் செய்கிறார்கள். அச்சமயம் உடல் நலத்தில் சிறப்புக் கவனம் தேவை. தேக ஆரோக்கியம் கெடுவதற்கும், வைத்தியச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மனதில் இனம் புரியாத கவலையும், குழப்பங்களும் ஏற்படும். பணக்கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டும் ஒண்ணா சேர்ந்து படுத்தும். உங்க அவசியத் தேவைகளுக்குக் கூட அடுத்தவங்க கையை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். எந்தப் பக்கம் பார்த்தாலும் இடிக்குது. உங்க முயற்சிகள் அத்தனைக்கும் முட்டுக்கட்டை விழத்தான் செய்யுது. எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது. எதைத் தொட்டாலும் வம்புலதான் முடியும். வீண் அலைச்சல் திரிச்சல் இருக்கும். வீணாக கெட்ட பெயர், அவமானம், அசிங்கம்ன்னு ஏதாச்சும் வீடு தேடி வந்து தலை குனிய வைக்கும். உறவினர்கள் நண்பர்கள்கூட விரோதமாவார்கள். தொழில் வியாபாரம் மந்தமாகும். வருமானம் பாதிப்படையும். எந்தவிதமான புது முயற்சியிலும் இறங்காமலிருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் தண்டச் செலவுகள் வரும். இப்படியாக கெட்ட பலன்களை அனுபவித்து வந்த உங்களுக்கு 31.8.2011க்குப் பிறகு 25.12.2011 வரை உங்கள் ஜென்ம குரு வக்கிரமடைவதால், அந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். உடல் நலத்தில் காணப்பட்டு வந்த தொல்லைகள் நிவர்த்தி அடையும். இதுவரை தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடந்து முடியும். மனக்குழப்பங்கள் நீங்கி அமைதி வரும். க்ணவன்,மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்க வாய்ப்பு ஏற்படும். தொட்டது துலங்கும். மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு, கூட்டுத் தொழில், கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும். மொத்தத்தில் உங்களுடைய நீண்ட நாளைய எதிர்பார்பபுகள் இந்த சமயம் நிறைவேறும். இந்த காலக் கட்டத்துக்குப் பிறகு, 26.12.2011ல் வக்கிர நிவர்த்தியாகி மீண்டும் ஜென்ம குருவாகி விடுவதால், மறுபடியும் பழைய கஷ்டங்கள் தலை தூக்கும். 15.5.2011வ்ரை நீடிக்கும். இருந்தாலும் உங்களுக்கு இந்த கால கட்டத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள் ஓரளவு சாதகமாக இருப்பதால், பிரச்சினைகளை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். ஆனாலும், கட்டாயம் உஷாராக இருக்க வேண்டிய காலமிது. ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். சிலருக்கு அரசாங்க பிரச்சினைகளும், ,தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. தேவையற்ற வழக்கு , விவகாரங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிதல், உத்தியோகத்தை விடவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் முதலிய பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படலாம். ஆனால், இந்த கஷ்ட நேரத்தை நீங்கள் , புத்திசாலித்தனமாகப் பயன்படுத
்திக்கொண்டால், நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று புரிந்துகொள்ளும் நல்ல சந்தர்ப்பம் இது. பெண்களுக்கு இது சோதனையான காலம்தான். குரு வக்கிர காலத்தைத் தவிர மற்ற காலங்க்ள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்தான். மாணவர்களுக்கு. உத்தியோகஸ்தர்களுக்கு, சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு என எல்லோருக்குமே ஜென்ம குரு காலம் கொஞ்சம் படுத்தலான காலம் தான். ஆனால், குரு வக்கிரமடையும்போது மட்டும் கொஞ்சம் சமாளித்து விடலாம்.

 

பரிகாரம்:-

பவழம், வெண்முத்து, இவை அதிர்ஷ்டக் கற்களாகும். வெள்ளை, சிவப்பு இவை அதிர்ஷ்ட நிறங்களாகும். செவ்வாய்க்கிழமைகளில், முருகப் பெருமானையும், துர்கையம்மனையும் வணங்கிவர நல்லதே நடக்கும்.

Advertisements