மிதுனம்

மிதுன ராசி

மிதுன ராசி

 

இதுவரைக்கும் குரு பத்தாம் இடத்தில் சஞ்சரித்ததால், உங்களுக்கு பல விதத்திலும் தொல்லைகளுக்கு குறைவில்லை. எதுவுமே உருப்படியா நடக்கலை. கணவன், மனைவி உறவில் கசப்பு, சுபகாரியத் தடை , பலருடன் விரோதம், பேர் ரிப்பேரானது என்று பலவிதமான கஷ்டங்களை அனுபவித்தீர்கள். இப்படியாகப்பட்ட சிரமங்களெல்லாம், இந்த குருப் பெயர்ச்சியில் விலகிப் போய்விடும். 8.5.2011 அன்று ஏற்படும் குருப் பெயர்ச்சி உங்களுக்கு யோகமானதாகும். உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது மிகமிக விஷேஷமானது. படு சூப்பரான நல்ல நேரம் ஆரம்பமாகப் போகுது. நினைத்தது, நினைக்காதது அத்தனையும் நல்லவிதமாக நடந்து முடியும். இந்த பதினொராமிடத்து குரு, அங்கிருந்து உங்க ராசிக்கு மூன்றாமிடத்தையும் ஐந்தாமிடத்தையும், ஏழாமிடத்தையும் பார்ப்பது இன்னும் யோகமானது. இனிமேல் நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. குருபலமும் வந்துவிட்டதால், இதுவரை தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடந்து முடியும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து நல்ல தகவல்கள் வரும். உடல்நலத் தொந்தரவுகள் முற்றிலும் குணமடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்த வீடு கட்டவும், வாங்கவும் யோகம் கைகூடிவரும். உங்க புகழ், கௌரவம், அந்த்ஸ்து,வசதி,வய்ப்புகள் அத்தனையும் விருத்தியடையப் போகுது. உங்களுடைய் நீண்ட நாளைய முயற்சிகள் இந்த சமயத்தில் பலன் தரக்கூடும். இந்த சமயத்தில் வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு , விருபிய இடமாற்றம் இவை விரும்பியபடி கிடைக்கும். சிலர் சொந்த தொழில், வியபாரம் ஆரம்பிக்கவும் சான்ஸ் இருக்கு.

 

அரசாங்கத்திலிருந்து கிடைக்கவேண்டிய உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். அரசு சலுகைகள் தாராளமாகக் கிடைக்கும். அரசியலில் உள்ளவங்களுக்கு இந்த காலக்கட்டம் மிகமிக அமோகமாகவும், சூப்பராகவும் இருக்கும். ஏதாவது ஒர் புதிய பதவி உங்களைத் தேடி வரும். கணவன், மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் இனி இருக்கவே இருக்காது. தொடர்ந்து வசந்தக் காற்று வீசப் போவுது. கலைஞர்களுக்கும் இது மிக அருமையான நேரம் ; அருமையான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலர் குல தெய்வ வழிபாட்டை முடிச்சுக்கறதுக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளாலும், பெண்களாலும் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால், உதவி ஒத்தாசை கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும். இப்படியாக சகல விஷயங்களும் யோகமாகவே காணப்படும் நேரத்தில் 31.8.2011 முதல் 26.12.2011வரை யில் நாலு மாதங்கள் குரு பகவான் வக்கிர கதிக்குப் போகிறார். இந்த நேரத்தில் பலன்கள் டல்லாகத்தான் இருக்கும். எந்த ஒரு புது முயர்ச்சியிலும் இறங்கவேண்டாம். மேலும் இந்த காலக் கட்டத்தில் அனாவசிய சிக்கல்கள், வீண் தொல்லைகள், வீண் வம்புகள் வீடு தேடி வரும். உங்க முயர்ச்சிகளில் முட்டுக்கட்டை விழும். தொழில் மந்தமடையும். வருமானம் . குறையும். உறவினர், நண்பர்கள் விரோதம் ஏற்படும். எந்த காரியமும் ஜவ்வு மாதிரி இழுத்துட்டுப் போவும். குடும்பத்தில் குழப்பம் நிலவும். தண்டச் செலவுகள் அதிகமாகும். அரசாங்கத்திலிருந்து வீண் பிரச்சினைகள், சிக்கல்கள் வரும். அதன் பிறகு 27.12.2011முதல் 15.5.2012வரையில் உள்ள நாலு மாத காலங்களில் குரு பகவான் வக்கிர நிவர்த்தியாகி பழையபடி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், மீண்டும் சூப்பரான காலம் ஸ்டார்ட் ஆகும். இந்த காலத்தில், உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திலுள்ள சனி பகவானும் வக்கிரத்தில் இருப்பது உங்களுக்குப் பல வழியில் நல்லதுன்னே சொல்லணும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது தடைகள் நீங்கி மளமளன்னு முடியும். நினச்சது நினச்ச மாத்திரத்தில் நடக்கும். பல வகையில் உயர்வுகள் வந்து சேரும். எந்த ஒரு புதிய முயர்ச்சியில் இறங்கினாலும் வெற்றியடையலாம். பெணளுக்கு இந்த குருப் பெயர்ச்சி அசத்தலாக ஆரம்பித்து யோகமான பலன்களாகவே கொடுக்கும். சில பெண்களுக்கு கல்யாண்ம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு வக்கிர காலத்தைத் தவிர மீதி காலங்களில் பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் மாணவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு தொழிலதிபர்களுக்கு என எல்லோருக்கும் இந்த குரு பெயர்ச்சி மிக மிக நல்ல பலன்களாகக் கொடுக்கும். குரு வக்கிரமடையும் காலத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மற்றபடி உற்சாகமான காலகட்ட்ம்,இது.

பரிகாரம்:-
வெள்ளி, சனி அதிர்ஷ்டமான தினங்களாகும். பச்சை நிறம் அதிர்ஷ்ட நிறமாகும். மரகதப் பச்சை கல் அதிர்ஷ்டக் கல்லாகும். திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டு வரவும்.
*********

Advertisements