கடகம்

கடக ராசி

கடக ராசி

இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்ததால், பல வகைகளிலும் நற்பலன்களே நடந்து வந்தன. பல வழியிலும் முன்னேற்றங்களை அனுபவித்து வந்திருக்கும் வேளையில் தற்போது 8.5.2011அன்று வரப்போகும் குருப் பெயர்ச்சியில் அவ்வளவு நற்பலன்கள் இருக்காது. பத்தாமிட குரு ‘பதவி நாசம்’னு சொல்லுவார்கள். முதல்ல உங்க வேலையில் அல்லது உத்தியோகத்தில் கொஞ்சம் ஆட்டம் கொடுக்கும். சொந்த தொழில் வியாபாரமாக இருந்தாலும் ஆட்டம் காணும். இந்த சமயத்தில் எந்த ஒரு காரியமும் உருப்படியாக நடந்தேறாமல், ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போவும். செலவுகள் ஏராளமாக இருக்கும். ஆனால், கைக்கு வர வேண்டிய பணம் வராது. மற்றபடி உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத இட மாற்றம் வந்து ஊர்விட்டு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலர் வி.ஆர் .எஸ்.. பெற்று வீட்டுக்கு செல்ல நேரும். சிலருக்கு கெட்ட பெயர், அவமானம் , அசிங்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் வந்து சேர்வதற்கும் சந்தர்ப்பம் அமையும். அரசாங்கத்திலிருந்து தொந்தரவுகள், சிக்கல்கள், பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு காணப்படுகிறது. நீங்க தொட்டதெல்லாம் வில்லங்கத்தில்தான் போய் முடியும். இந்த கால கட்டத்தில் நீங்க நினச்சதுக்கு நேர் மாறாத்தான் எல்லாம் முடியும். எனவே இபோதைக்கு நீங்க மிகுந்த எச்சரிக்கையா இருக்க வேண்டியது அவசியம். இந்த சமயத்தில் பணக் கஷ்டம் ஒருபுறம்னா, மனக் கஷ்டம் இன்னொரு பக்கம் வாட்டும். ஒரு சிலருக்கு வழக்கு, வியாஜ்ஜியம் அரசாங்கத்துக்கு தண்டம் கட்டுதல் என்று மன வேதனைகளைக் கொடுக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினை, உடன் பிறந்தவர்கள் மூலம் தொல்லை, உறவினர்களிடையே மனஸ்தாபம் என்று கவலைகள் சூழும். சிலர் சொந்த தொழிலை மூடிட்டு வேறு வேலைக்குப் போகும் சந்தர்ப்பம் வரும். வீண் அலைச்சல்கள் அதிகமாகும். கையில் பணம் இல்லாமல் அடிக்கடி கடன் வாங்கி சமாளிக்க வேண்டியிருக்கும். உடல் நலமும் கெடும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் வைத்தியச் செலவுகள் ஏற்படும். மேலும் அரசியல்வாதிகளுக்கு இது சோதனையான காலம். இதுவரை வகித்து வந்த பதவியிலிருந்து கீழிறங்க வேண்டியிருக்கும். இப்படியாக பலவித பிரச்சினைகளையும் சந்தித்து வரும் வேளையில் 31.8.2011 முதல் 25.12.2011 வரையில் உள்ள நாலு மாதங்களுக்கு பத்தாமிட குரு வக்கிரம் அடைகிறார்.இந்த வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு நன்மை பயக்கும். எல்லா வகையிலுமே நல்லதொரு மாற்றத்தைக் காணலாம். இதுவரை காணப்பட்ட பிரச்சினைகளும், சிக்கல்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும். உடல் நலமும் எந்த குறைபாடும் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் பெறும். வேலை தேடும் நபர்களுக்கு உடனே வேலை இடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் முதலியவை கிடைக்கும். சிலர் புதிதாக தொழில் தொடங்கவும், தற்போது நடந்து வரும் தொழில் விருத்தி அடையவும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பழைய கடன்கள் அடைபடும். பண நடமாட்டமும் சற்று ஜாஸ்தியாகவே இருக்கும். உங்களது நீண்ட நாளைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். இதுவரை குடும்பத்தில் காணப்பட்டு வந்த பலவிதமான குழப்பங்கள் மறையும். பிரிந்திருந்த குடும்பம் இந்த சமயத்தில் ஒன்று சேரும். கணவன், மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும். தொட்டது துலங்கி நினைத்தது நினைத்த வண்ணம் நடந்தேறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் .ஓரளவு மன நிம்மதி இருக்கும். உங்க புகழ், அந்தஸ்து ,கௌரவம் இவை சிறந்தோங்கும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு கூட்டுத் தொழில் சிறக்கும். மொத்தத்தில் இந்த நாலு மாத காலங்கள் மிக நல்ல காலமாக இருக்கும். அதன்பிறகு, 26.12.2011ல் குரு பகவான் வக்க
ர நிவர்த்தி அடைகிறார். மீண்டும் நற்பலன்கள் குறையும். அனைத்து விஷயங்களிலும் தடங்கல்கள், தாமதங்கள் ஆரபிக்கும் எந்தவிதமான புது முயர்ச்சியிலும் இறங்க வேண்டாம். இப்போது செலவுகள் இரட்டிப்பாகும். பணக்கஷ்டம்,மனக் கஷ்டம் இரண்டும் சேர்ந்து படுத்தும். வண்டி, வாகனம் ரிப்பேர் செலவு வைக்கும். வீடு கட்டும் வேலைகள் இருந்தால், அவை பாதியில் நிற்கும். குடுத்த பணத்தைக் கேக்கப் போனாக்கூட வம்பு சண்டை வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். மொத்தத்தில் குருவின் வக்கிர காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் படுத்தி எடுக்கத்தான் செய்யும். சில நேரங்களில் அலுவலகத்துக்கு அடிக்கடி லீவு போட வேண்டியிருக்கும். கேஷியர் வேலையில் உள்ளவர்கள் அதிக உஷாராக இருக்கணும். பெண்களுக்கும் பத்தாமிட குரு விஷேஷமான பலன்களைக் கொடுக்காது. இதேபோல், உத்தியோகஸ்தர்களுக்கு பத்தாமிட குரு முதல்ல உங்க பதவிக்கு பங்கத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய முக்கிய பதவி பறிபோகும். இன்னும் பல தொல்லைகளும் சிக்கல்களும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. மாணவர்களும் கொஞ்சம் கவனத்துடன் தேர்வுகள், மேற்படிப்புகள் இவைகளைக் கையாள வேண்டும். சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிலைமையும் இதுதான். பொதுவாகவே நற்பலன்களை எதிபார்க்க முடியாது; ஆனால், குரு வக்கிரமாகும்போது மட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். குருவின் வக்கிர காலத்தில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தொட்டது துலங்கும். குழப்பங்கள் தீரும். வக்கிர காலம் மட்டும் சுகம். மீதி நேரங்களில், பத்தாமிட குரு சுகம் தராது.

பரிகாரம்:-

செவ்வாய், வியாழன் உங்களுக்கு அதிர்ஷ்ட கிழமைகளாகும். வெண் முத்து அதிர்ஷ்டக் கல்லாகும். வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட நிறங்களாகும். திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்யுங்கள். துன்பங்கள் விலகும்.
*******

Advertisements