siddharth

1. டோலிவுட்டைச் சேர்ந்த ராணாவும் சித்தார்த்தும் படத்தோட தெலுங்கு ரீமேக்கில நடிக்கிற தங்கள் ஆர்வத்தை வெளிப்படையாவே சொல்லியிருக்காங்களாம். படம் என்ன தெரியுமா? சன் பிக்சர்ஸோட ‘ஆடுகளம்’தான். தெலுங்கையும் ஆட்டி வச்சுடுச்சோ?

மீனா ரம்பா

2. ஒரே நேரத்தில ஃபீல்டைக் கலக்கிய மீனாவும் ரம்பாவும் அடுத்தடுத்து கல்யாணமும் பண்ணி செட்டிலானது மட்டுமின்றி, ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து குழந்தையும் பிறந்தாச்சாம். ரெண்டுமே பெண் குழந்தையாம், போங்க.!

 

3.அருள்நிதி ஹீரோவான ‘வம்சத்’துல இசையமைப்பாளர் தாஜ்நூர் அறிமுகமானதுபோல இப்ப மீண்டும் அவர் ஹீரோவாகிற ‘உதயன்’ல பிரபல சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தோட மகன் மணிகாந்த் கத்ரி இசையமைப்பாளரா அறிமுகமாகிறார்.

 

4. ஃபில்ம் நியூஸ் ஆனந்தனைப் பற்றிய ஒரு டாக்குமென்டரி தயாராகுது. இதை தங்கர்பச்சானோட அஸோஸியேட் கேமிராமேனா இருந்த சி.ஜே ராஜ்குமார் படம் பிடிக்கிறார்.

 

5.’யுத்தம் செய்’க்குப் பிறகு மார்ட்டின் தயாரிக்கிற அடுத்த படத்தை டைரக்ட் செய்யப் போற சேரன் அதில் நடிப்பாரா என்று இன்னும் முடிவு பண்ணலியாம்.

 

6. ஹைதரபாத்தில் ஒரு புதிய ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தொடங்கப் போறாராம்,டைரக்டர் கீதாகிருஷ்ணா. கே. விஸ்வநாத்தோட சீடரும்,இளையராஜாவோட நண்பருமான இவர் தன்னோட ‘நிமிடங்கள்’ படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடத்துல ரிலீஸ் பண்ணிய பிறகுதான் ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட் தொடங்குவாராம்.

 

7. தியேட்டர்களில், போன உலகக் கோப்பை போட்டிகளை லைவ்வா காட்ட முயற்சிகள் நடந்து முடியாமல் தோல்வியடைந்ததாம். ஆனா இந்தத் தடவை வேர்ல்ட் கப்பைத் திரையிட , தியேட்டர்காரர்கள் ஆர்வம் காட்டறாங்களாம். சட்டரீதியான விஷயங்களோட அவுங்க ப்ரொட்யூஸர் கவுன்ஸில்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்.