1லைட்மேன்சீக்ரெட்

1லைட்மேன்சீக்ரெட்

 

“என்னங்க போன வாரம் தான் பத்தினி சர்டிஃபிகேட் கொடுத்தீங்க… கடைசியில் அந்த நடிகை பத்தி ஆந்திராவிலிருந்து வர்ர சேதி வேற மாதிரி இருக்கே?” நாம் கேட்க..

ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நம்மைப் பார்த்தார் லைட்மேன்.

“தம்பி… தெய்வ மகன ரூமுக்குள்ற விடலன்னு சொன்னேனே தவிர யாரையுமே விட்டதில்லன்னு சொன்னனா?”

மெல்ல தனக்குள் சிரித்தபடி பேசினார் லைட்மேன்.

ஆமாம்… அந்த நடிகை ஆந்திராவுல செட்டில் ஆயிட்டாங்க… அதுவும் முன்னாள் ரஜினி ஜோடிய அள்ளிக்கிட்டுப் போன அந்த ஆந்திரா ஹீரோகிட்ட அடைக்கல்மாகிட்டங்க.. புது கால்ஷீட் புது கதை எதுன்னாலும் அந்த ஹீரோ தலையசைச்சாத்தான் அம்மணி ஒத்துக்குறாங்க. கிட்டத்தட்ட தன்னத்தானே அந்த ஹீரோ கஸ்டடில கொண்டு வந்துக்கிட்டாங்க நம்ம அனுசரணையான நடிகை.

கிடிகிடுன்னு முன்னுக்கு வந்த ஒசரமான நடிகைக்கு ஏன் மனசு இப்படிப் போச்சு..

அதுதான் எனக்கும் விளங்கல. ஆனா கொஞ்ச பேரு நடிகை மனச உண்மையில கொள்ளையடிச்சது நாக நடிகரின் மகன் தான்னு சொல்றாங்க… சைதன்ய ரதத்துல நடிகை போக ஆசப்பட்டு அதுக்காக அப்பாவையும் அனுசரிச்சு போக வேண்டிய ஒரு சூழ்நிலையாகிப் போச்சுங்கறாங்க.. என்ன செய்யறது சிந்து சமவெளி யிலிருந்து இன்னும் மனுஷன் வெளிவரலையே…

இதுல என்ன ஜோக்குன்னா… நடிகை அப்பாவையும் மகனையும் அனுசரிச்சு போகுற விஷயம் இன்கம்டாக்ஸ்  டிபார்ட்மென்ட் வரைக்கும் போயிடிச்சு… அவங்க நடிகை வீட்ட ரெய்டு பண்ணும்போது ஜூபிளி ஹில்ஸ்ல பக்கத்துல இருக்குற நடிகர் வீட்டையும் சேர்த்தே ரெய்டு பண்ணுறாங்க.. இது எப்படி இருக்கு…

வம்புல சேர்ந்து நடிச்சாலே வம்புதானோ!

 

Advertisements