kangana-ranaut-கங்கனா ரணவத்

kangana-ranaut-கங்கனா ரணவத்

 

1. பாலிவுட் ஹீரோயின்களில் படு வித்தியாசமானவர் கங்கனா ரனாவத். நடிப்பு, தடை, உடை, பாவனை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதிப்பவர். லேட்டஸ்டாக பிரபல நடிகர் அதியன் சுமனை காதலித்து வந்த கங்கனா, அவரைவிட்டு இப்போது பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ” காதல் பிரிவு குறித்தெல்லாம் கவலையில்லை. ஆரம்பத்தில் சங்கடமாக இருந்தது. அவ்வளவுதான். ஆனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இன்றுவரை தொடர்கிறது. மற்ற பெண்கள்போல் நான் அழாமல், புலம்பாமல் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக்கொண்டேன். அவ்ரை நான் குறைகூறவில்லை. ஆனால், ஆண்களை நான் வெறுக்கிறேன்” என்கிறார், கங்கனா.

2. தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற நடிகை அசின் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார்.’ படப்பிடிப்பு தளத்தில் அசின் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை. இந்தப் படத்தில் நடிக்க மறுத்தார். அந்த ஹீரோவுடன் நடிக்க மறுத்தார். மேக்கப்மேனுடன் தகறாறு. பிற நடிகைகளுடன் வாக்குவாதமென்று பல சர்ச்சைகள். ‘லண்டன் ட்ரீம்ஸ்’, ‘ரெடி’ போன்ற படங்களில் நடிக்கும்போதே சல்மானுடன் காதல் என்ற செய்தியை இருவருமே மறுத்தார்கள். இன்னிலையில் தற்போது நடிகர் நிதின் முகேஷைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தயாரிப்பாளர்களிடமெல்லாம் போய் வாய்ப்பு கேட்கிறாராம், முகேஷ். தன்னுடைய படங்களிலும் அசினையே போடச் சொல்லி வற்புறுத்துகிறாராம்.ஆனால், இதை மறுத்து வருகிறாராம், முகேஷ். ‘நெருப்பில்லாமல் புகையுமா? எப்படியோ தொடர் சர்ச்சைகளில் இருந்து தப்பித்தால் போதும் என்று தவித்து வருகிறார், அசின்.

3. தமிழில் அப்பாவிப் பெண் கேரக்டரில் அனாயாசமாக நடித்து வரும் ஜெனிலியா, இந்தியில் ‘அதிரடி’ உட்பட அனைத்து கேரக்டர்களிலும் நடிக்கிறார். ” இந்திய மற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் மிகச் சரியாகப் பொருந்துவது ப்ரீதி ஜிந்தா மட்டுமே” என்கிறார். தன்னுடைய முதல் படமே அமிதாப் பச்சனுடன் என்பதில் பெருமைப்படுகிறார். அதேபோல் கடைசி படம் ஷாருக், அமீர் மற்றும் சல்மான் படமாக இருந்தால் நல்லதாம். நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நடிக்க ஆசையாம். ஹாலிவுட் நடிகர்களில் டாம்குரூஸ் ரொம்பப் பிடிக்குமாம். நடிகர் ஜான் ஆபிரகாம் நன்றாக பைக் ஓட்டுவாராம் .அதிக வேகத்துடன் அவருடன் பைக்கில் செல்ல ஆசையாம். ” நீங்கள் ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்வீர்களா?” என்ற ஒரு கேள்விக்கு ” ஏன்…நடிகரை திருமணம் செய்யக்கூடாதா?” என்கிறார்.

4. நடிகர் பிரபுவின் மகன்,விக்ரம் ஹீரோவாகிறார். விக்ரமின் பெயர் சினிமாவுக்காக மாற்றப்படலாமாம். கேரளாவிலுள்ள ஒட்டம்பாளயத்துக்கு அடுத்த மாதம் செல்லும் விக்ரம், அங்கு 20 நாட்கள் தங்கி, அங்குள்ள மக்களின் நடை உடை பாவனை, ஆகியவற்றை ஸ்டடி பண்ணுகிறார். தன் கேறக்டருக்காக தாடி, மீசை. நீளமான தலைமுடி எல்லாம் வளர்க்கிறார்.

5. ஷங்கர் இயக்கும்’ நண்பன்’ படத்தில் நடிக்கும் ஜீவா , இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதையான இதில் நரேன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறாராம். இதையடுத்து கௌதம் வாஸுதேவ் மேனன் இயக்கும் ரொமாண்டிக் த்ரிலலர் படத்திலும் ஜீவா நடிக்கிறார்.

Advertisements